Sep 1, 2013

சிரியாவின் மீதான அமெரிக்காவின் இராணுவ முன்னெடுப்பின் நியாயமற்ற காரணங்களும் அதன் உண்மையான முகங்களும்!

அமெரிக்கா கடந்த இரண்டு வருடமாக சிரியாவில் ஒரு இலச்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு அனுமதித்தது மாத்திரமன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரவும் காயப்படவும் அனுமதித்தது.

ஆனால், அமெரிக்கா இன்று “அல்கௌதா” எனும் இடத்தில் இரசாயன ஆயுதத் தாக்குதல் மேற்கொண்டதன் விளைவாகவே சுமார் 1400 பேர் கொல்லப்பட்டதனால் அசாத் “சிவப்பு கோட்டை தாண்டிவிட்டதாக” கூறிக்கொண்டு சிரியாவின் மீதான இராணுவ முன்னெடுப்பை மேற்கொள்வதில் எந்த நியாயங்களும் வெளிப்படை உண்மைகளும் இல்லை என்பதனை நாம் உணரலாம்.

அமெரிக்காவினது சிரியாவின் மீதான இராணுவ முன்னெடுப்பின் நியாயமற்ற காரணங்கள் பின்வருமாறு:

1.கடந்த இரண்டு வருடமாக சிரியாவில் ஒரு இலச்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு அனுமதித்தது மாத்திரமன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரவும் காயப்படவும் அனுமதித்தது.

2.எகிப்தில் ஜனநாயக அடிப்படையில் தெரிவசெய்யப்பட்ட முர்சியை பதவி கவிழப்பதில் பாரிய பங்களிப்பை வழங்கிவிட்டு ஆயிரக்கணக்கான மக்களை அல்-சிசி எனும் அரக்கன் கொன்று குவிக்க வழிசமைத்ததுடன் அங்கு மக்கள் புல்டோசர் கொண்டு நசுக்கப்படும் போது அவர்களுக்கு மனிதாபிமானமோ மனித உரிமையோ தென்படவில்லை.

3.இராக்கிய அமெரிக்க படையெடுப்புக்கு முதலில் 'ஹலாப்ஜா' எனும் இடத்தில் சதாம் ஹூசைன் குர்திசிய மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை பிரயோகித்தும் அமெரிக்கா சதாம் ஹூசைன் பலவீனப்பட்டு விட்டவுடன் அதை பின்பு காரணமாகக் காட்டி ஈராக்கின் மீது மிகமோசமான ஒரு இராணுவ முன்னெடுப்பை தற்துணிவுடன் மேற்கொண்டது மாத்திரமன்றி 'பலுஜா' நகரில் யுரேனிய அனுக்கழிவுகளில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி அந்த மக்களை கறுவறுத்த வரலாற்றுச் சாதனையை கொண்டுள்ளது.

4.அதேநேரம் இஸ்ரேல் 2009 இல் காசா மக்களுக்கு எதிராக 'வைட்பொஸ்பரசு' எனும் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியபோது அதனை கண்டுகொள்ளவில்லை.

அவ்வாறாயின் ஏன் அமெரிக்கா இன்று சிரிய மக்கள் விடயத்தில் அதீத அக்கறை எடுத்த நிலையில் ஒரு இராணுவ முன்னெடுப்பை காலனித்துவ கூட்டு சக்திகளான பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் களமிறங்கியுள்ளது?

இந்த அமெரிக்க தலைமையிலனா காலனித்து சக்திகளின் இந்த நகர்வின் அடிப்படைக் காரணம் இன்று அசாத் நலிவடைந்து விட்டான். அவனது பெரும் தொகையான ஆயுதங்களை முஜாஹிதீன்கள் தம்வசப்படுத்தி விட்டார்கள். இவர்கள் கிலாபா ஆட்சியை நிறுவப் போராடுகிறார்கள் என்ற நோக்கம் ஒரு புறமிருக்க அவர்களது தலையீட்டின் முலம் முஜாஹிதீன்களை பலமிழக்கச் செய்து அங்கு மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியெழுப்பட்ட ஜனநாயக ஆட்சியை நிறுவி கிலாபா மீள் உருவாக்கத்தை அவர்கள் தடுக்கவேண்டும்.

அதன் மூலமாகத்தான் அவர்கள் முஸ்லிம் நாடுகளில் தங்கள் கரத்தை பலப்படுத்தி தொடர்ந்தும் வளங்களை உறிஞ்சவும் தங்களது நுகர்வுச் சந்தையாக முஸ்லிம் நாடுகளை தக்கவைக்கவும் முடியும் என்பதனை நன்குணர்ந்து எடுக்கும் அரசியல் மற்றும் இராணுவ நகர்வாக இஸ்லாத்திற்கு எதிரான யுத்தப்பிரகடனமாக ஒவ்வொரு முஸ்லிமும் இதனைப் பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment