Sep 1, 2013

முஜாஹிதீன்களுக்கு எதிராக கூட்டுச் சேர்வது மிகப்பெரிய அநியாயமாகும்.!!

குப்பார்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களது கொடியின் கீழ் யுத்தத்தில் ஈடுபடுவது குறித்து குர்ஆனும் ஹதீசும் மிக வன்மையான கண்டிக்கிறது.

சிரியாவில் அசாத் பலவீனப்பட்டுவிட்டதை அடுத்து முஜாஹிதீன்களது கை மேலோங்கிவிடக் கூடாது என்ற நிலையில் அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய காலனித்துவ சக்திகள் சிரியாவில் இரசாயன ஆயுதம் பாவிக்கப்பட்டதை கருத்திற்கொண்டு மனிதாபிமான இராணுவ முன்னெடுப்பை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் எமது முஸ்லிம் நாடுகள் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்து குப்பார்களது காலனித்துவக் கொடியின்கீழ் இந்த பொய்யான காரணங்களுக்கு உடந்தையாக முஜாஹிதீன்களுக்கு எதிராக கூட்டுச் சேர்வது மிகப்பெரிய அநியாயமாகும்.

சிரியா மீதான இந்த இராணுவ முன்னெடுப்புக்கு முன்பு கட்டார், சவூதி போன்ற நாடுகள் இந்த காலனித்துவ சக்திகளது ஜெனரல்களுடன் அம்மானில் கூடியெடுத்த முடிவைத் தொடர்ந்தே இந்த இராணுவ முன்னெடுப்பு நகர்கிறது.

அத்துடன் யூ.என் அனுமதியின்றி தேவையான முழுமையான இராணுவப் பங்களிப்பை இந்த குப்பார்களுடன் சேர்ந்து சிரியாவிற்கு எதிரான இராணுவ முன்னெடுப்பில் வழங்குவதாக “துருக்கி” வாக்களித்துள்ளது. இது சிரிய முஜாஹிதீன்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் மாத்திரமன்றி அவர்கள் இஸ்லாத்தை ஷரீஆவை நிறுவும் போராட்டத்தை பலவீனப்படுத்தி குப்ருடைய ஆட்சி மீண்டும் தொடர வழிவகுக்கும் ஒரு ஈனச் செயலாகும்.

இவ்வாறு குப்பார்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களது கொடியின் கீழ் யுத்தத்தில் ஈடுபடுவது குறித்து குர்ஆனும் ஹதீசும் மிக வன்மையான கண்டிக்கிறது.

“(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர். (தௌபா 9:8)”

“முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா?” (4: 144)

“எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.” (5: 52)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'முஷ்ரிகீன்களது நெருப்பில் ஒளியைத்தேடாதீர்கள்.'

அதேநேரம் இஸ்லாத்தை நிலைநட்டுவதில் உதவி தேவைப்பட்டால் முஸ்லிம்களுக்கு உதவி வழங்குமாறு அல்குர்ஆன் ஏவுகிறது.

“எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும்.” (8: 72)

No comments:

Post a Comment