Sep 14, 2013

ஒரு யூதப்பயங்கரவாதியின் பார்வையில் ஜெனரல் அப்தல் பதாஹ்ஃ அல்-சிசி





Major General Amos Gilad. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் அரசியல் இராணுவ உறவுகளிற்கான பீரோவின் இயக்குனர். பலஸ்தீன விவகாரங்களிலும் மத்தியகிழக்கின் அரசியல் இராணுவ விககாரங்களிலும் நீண்ட அனுபவங்களை தொடராக கொண்டவர். கடந்த ஞாயிற்று கிழமை நடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மையத்தில் நடைபெற்ற ஒன்று கூடலில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் Herzliya-ல் இந்த மையம் அமைந்துள்ளது. அதில் அவர் கூறினார்...

“எகிப்தின் General Abdel Fattah al-Sisi எகிப்தினை இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து பாதுகாத்துள்ளார். எகிப்திய வரலாற்றின் மறக்க முடியாத நாயகன் ஜெனரல் சிசி. இஹ்வான்கள் எனும் எகிப்தின் சகோதரத்துவ இயக்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் அது இஸ்ரேலை அழிக்க முயற்ச்சிக்கும். முழு மத்திய கிழக்கிலுமே அமைதியின்மையை ஏற்படுத்தும். முஸ்லிம் தேசங்களை பல துண்டுகளாக பிரித்திருக்கும்”

“ஹமாஸ் என்பது பலஸ்தீன பயங்கரவாதிகளின் கும்பல். இஸ்ரேல் எனும் அமைதி நாடும் தேசத்தை அழிப்பதே அவர்கள் நோக்கம். ஹமாஸின் காஸா பிரதமர் இஸ்மாயில் ஹனீயேஹ் முர்சியின் அரசை வரவேற்றார். ஏனென்றால் அடிப்படையில் ஹமாஸ் என்பது இஹ்வான்களில் அடிப்படை சிந்தனைகளை கொண்ட இயக்கம். இப்போது அவர்கள் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. இந்த உன்னத செயலை செய்து முடித்தவரும் General Abdel Fattah al-Sisi யாவார்”

“மன்னர் அப்துல்லாஹ் புத்திசாலியாக செயற்பட்டுள்ளார். அவரது ஆட்சியில் இது ஒரு வரலாற்று சிறப்பாகும். ஜெனரல் சிசி பதவிக்கு வர பில்லியன் கணக்கான டொலர்களை வழங்கினார். அத்தோடல்லாமல் ஐக்கிய அரவு இராஜ்ஜியத்தையும் முர்சியின் அரசை கவிழ்கும் புரட்சிக்கு பணவுதவி செய்ய வேண்டினாரல். சவுதி அரேபியாவிற்கு இரண்டு பயங்கரவாத பிரச்சனைகள் இருந்தன. ஈரான். மற்றையது இஹ்வான். இப்போது இஹ்வான்களிற்கு சவுதி அரேபியா முற்று புள்ளி வைத்துள்ளது. இது போலவே அந்த தேசம் ஈரான் விடயத்திலும் செயற்பட வேண்டும்” என மேஜர் ஜெனரல் கிலாட் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் பேசுகையில் “General Abdel Fattah al-Sisi இன்னொரு சாகசத்தையும் செய்து முடித்துள்ளார். தஹ்ரீரில் கூடிய பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களை கருணையின்றி அழித்தமையாகும். இது பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஒரு படி. அதனை அவர் உறுதியாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடித்தார்”


”General Abdel Fattah al-Sisi-யின் இன்னொரு போற்றத்தக்க சிறந்த நடவடிக்கையே சினாய் யுத்தமாகும். அல்-காயிதா அமைப்பின் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தளங்களை நோக்கு குண்டு தாக்குதல்களை அவர் நிகழ்த்துகிறார். சினாயிற்கு எந்த உணவும் செல்லாமல் தடுத்துள்ளார். எகிப்திய இராணுவத்தின் தாக்குதல்களை அதிகரித்தும் வருகிறார். இது விடயத்தில் நான் திருப்தி அடைந்துள்ளேன். எனது திருப்தியை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சிற்கும் தெரிவித்துள்ளேன். அவை காத்திரமான செயற்பாடுகள். ரபாவின் நிலக்கீழ் சுரங்கங்களை தகர்த்ததன் மூலம் அவர் தன்னை ஏற்கனவே நிரூபித்து கொண்டவர்” என ஜெனரல் கிலாட் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment