Sep 9, 2013

வீழ்ச்சியின் ஆரம்பம்


சமூகங்களின் எழுச்சி, வீழ்ச்சி என்பன எதேச்சையான நிகழ்வு அல்ல.மாறாக அவை மிக நுணுக்கமான இறைநியதிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன.

எனவே,எந்த ஒரு சமுகம் எழுச்சிக்கான விதிகளை கவனத்தில் கொண்டு செயட்படுகிறதோ அந்த சமுகம் எழுச்சியின் உச்சத்தை எட்டிவிடும்.

அதே போன்று எந்தவொரு சமுகம் வீழ்ச்சிக்கான் விதிகளை பெற்றிடுமோ அப்போது அந்த சமுகத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும். இத்தகையா விதிகளில் எவ்வித பாரபட்ச்சமும் கிடையாது.

கிரேக்க,ரோம,பாரசீக நாகரீகங்கள் ஆடம்பரத்தில் மூழ்கியபோது அவை வீழ்ச்சியை சந்தித்தன.

ஏன் இஸ்லாமிய ஸ்பெயின் இறை வழிகாட்டலை விட்டு தடம்புரண்டபோது அதன் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாயிற்று.

மிக அண்மையில் இறை நிராகரிப்பின் உத்தியோகப்பூர்வ இலட்சணமாய் வலம்வந்த சோவியட் ஒன்றியம் அடைந்த வீழ்ச்சி நாம் நம் வாழ்வில் கண்ட ஒரு நாகரீக வீழ்ச்சியாகும்.

இதோ மற்றொரு நாகரீகத்தின் வீழ்ச்சிக்கான அறிகுறி தென்படத்துவங்கியுள்ளது.

இந்த வகையில் அமெரிக்காவின் பொருளாதார பின்னடைவின் முக்கிய 7 குறிகாட்டிகள் வருமாறு.

1. மொத்த உலக உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கில் விழ்ச்சி.
2. அரசு வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை.
3. உள்நாட்டு பொருளாதரத்தில் விழ்ச்சி
4. வேலையின்மையும் வறுமையும்
5. பெரும் கடன் சுமை
6. ஆடம்பர நுகர்வு
7. பிற நாடுகளில் தலையீடு மீதான செலவு.

இந்த காரணிகள் திரட்சி அடைகையில் அமெரிக்க விழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும்.

எந்த பேரரசுக்கும் ஒரு முடிவுகாலம் உள்ளது.அந்த தவனைக்காலம் அமெரிக்காவை நோக்கி மிக வேகமாக நெருங்கிக்கொண்டுள்ளது.

அடுத்ததாக எழுச்சிபெறவுள்ளது இஸ்லாம்! அதுவே இன்றுள்ள உலக ஒழுங்கை மாற்றும் ஒரே ஒரு சக்தி!

அது அல்லாஹ்வின் வாக்குதியும் கூட. அல்லாஹ் அவனது தீனை புத்தாக்கம் செய்யும் காலம் அண்மித்துவிட்டது!

No comments:

Post a Comment