Sep 26, 2013

சுன்னா – SUNNAH

மொழியியல் ரீதியாக சுன்னா என்றால் வழிமுறை என்று பொருள்படும். எனினும் ஷரியாவின்படி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டு இருக்கிற நஃபிலை அது குறிக்கிறது. உதாரணம் பரிந்துரைக்கப்பட்ட தொழுகை (சுன்னத் தொழுகை) இது ஃபர்து தொழுகையிலிருந்து வேறுபட்டது. சுன்னா என்பது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து உள்ளது என்றும் ஃபர்து என்பது அல்லாஹ்(சுபு)வுடமிருந்து உள்ளது என்றும் நாம் விளங்கிக் கொள்வது தவறு ஆகும். சுன்னா, ஃபர்து இவை இரண்டுமே அல்லாஹ்(சுபு)வுடமிருந்து தான் வந்துள்ளன. அவைகளை இறைத்தூதர்(ஸல்)தான் அல்லாஹ்(சுபு)வுடமிருந்து நமக்கு கொண்டு வந்துள்ளார்கள். ஏன் எனில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்கள் மனவிருப்பப்படி எதையும் கூறுவது இல்லை மாறாக வஹீ முலம் அல்லாஹ்(சுபு)வுடமிருந்து அறிவிக்கப்படுவதை மட்டுமே அவர்கள் கூறுவார்கள். எனவே சுன்னா இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டபோதும் ஃபர்து என்பது கடமையான செயலாக அறிவிக்கப்பட்ட அதேவிதத்தில் அது மன்தூபாக அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது நஃபிலாக அறிவிக்கப்பட்டு சுன்னா என்று பெயரிடப்படுள்ளது. இவ்வாறாக ஃபஜ்ர் தொழுகைக்குரிய ஃபர்தான இரண்டு ரகாஅத்கள் திட்டவட்டமான முத்தவாத்திர் அறிவிப்பு முலமாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது போன்றே ஃபஜ்ர் தொழுகைக்குரிய பரிந்துரைக்கப்பட்ட இரண்டு ரகாஅத்கள் திட்டவட்டமான முத்தவாத்திர் அறிவிப்பு முலமாக சுன்னா (நஃபில்)வாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவை இரண்டும் அல்லாஹ்(சுபு)வுடமிருந்து வந்திருக்கிறதோ தவிர இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அல்ல. ஆகவே இபாதத் பற்றிய கட்டளை ஒன்று ஃபர்தாத இருக்கவேண்டும் அல்லது நஃபிலாக இருக்கவேண்டும். இபாதத் அல்லாத செயல்பாடுகள் ஃபர்தாதவோ மன்தூபாகவோ(நஃபிலாக) அல்லது முபாஹாகவோ இருக்கக்கூடும். வேறுவகையில் கூறுவது என்றால் மன்தூப்தான் நஃபிலாகும் அது நஃபில் என்று அறிவிக்கப்பட்டு என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. மேலும் சுன்னா என்பதற்கு பொருள் குர்ஆனைத்தவிர இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து வந்த அனைத்து ஷரியா ஆதாரங்கள் என்பதாகும். இதில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய பேச்சு, செயல், சம்மதம் (ஒரு செயல் அவர்கள் முன்பு செய்யப்பட்ட நிலையில் அதை அவர்கள் மெளனத்தின் ஏற்றுக் கொள்வது) ஆகியவை அடங்கியுள்ளன.

No comments:

Post a Comment