Oct 16, 2013

பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் இருந்தும் என்ன பயன் ?


அது பல தலைப் பிறைகளை பிறப்பித்து...

ஒரே ஒரு இறைவனையும்
ஒரே ஒரு இறுதித் தூதரையும்
ஒரே ஒரு திருக் குரானையும்
ஒரே ஒரு தீன் எனும் இஸ்லாத்தையும்
ஏற்றுக் கொண்ட
ஒரே ஒரு முஸ்லிம் உம்மத்தை
மூன்று நான்காக பிரித்துவிட்டதே!

சந்திரனின் ஓட்டத்தில் தவறா?
சந்திரனைப் பார்க்கும் எம் கண்களின் தவறா?

பூமிக்குள் எல்லைக் கோடுகளை
வரைந்தது யார்?

முஸ்லிம் உம்மத் ஒரு உடலைப் போல
என்ற நபி மொழி
நடொன்ருக்குள்ளும், எல்லை ஒன்றுக்குள்ளும்
என சொன்னது யார்?

உடலின் அங்ககங்கள் சிதறியிருந்தால்
எப்படி
ஒரு உடலின் செயற்பாடுகள் இருக்கும்
அதனால் என்னதான் செய்ய முடியும்???

அதன் எதிரிகள் அங்கங்களை
பிரித்து, சுவைத்து மேயும்
மேயுதே!!!!!!!!!!

சிதிப்போமா?

முஸ்லிம் அவன் எங்கு வாழ்ந்தாலும்
என் உடலின் அங்கம்
நாம் ஒரே ஒரு உம்மத்

இன்ஷா அல்லா அடுத்த
துள் ஹஜ்ஜின் பெருநாளை
ஒரே ஒரு சந்திரனின்
ஒரே ஒரு பிறையை
ஒரே உம்மத்தாய் நின்று பார்த்து
கிளாபா எனும் முஸ்லீம்களின் அரசியல் அரணுக்குள்
கலீபாவோடு சேர்ந்து கொண்டாட
இறைவா நீயே அருள் புரிவாய்!!!!!!!!!!!

No comments:

Post a Comment