இது சற்று அதிகம்தான்!


இருள் சூழ்ந்த பொழுதுதினில்
இரத்தக் கசிவுடன் என் கண்கள்!
ஆழப்பதிந்த தீமையின் ஆணிவேர்கள்
அதிகார விருட்சங்களாய், அரக்கத்தனமாய்
ஆட்சி செலுத்த அடங்கிப்போக முடியாது!!

ஜாஹிலிய சதுரங்கத்தில்
பலிக்காய்களா என் சமூகம்?
விஷத்தை அமுதமாக்கிய
தேசிய சகதியில் சிதைந்ததோ தனித்துவம்!!
உனக்கென்ன உன் எல்லைக்கு அப்பால்
ஒரு முஸ்லிமின்
உயிர்…
உடமை…
மானம்… ஒன்றும் பெரிதல்ல!!


இஸ்ரேலோடு சமரசமும்
அமெரிக்கப் பாதுகாப்பும் எந்த
அகீதா கற்றுக் கொடுத்தது?
அடிப்படைகளைத் துவம்சம் செய்துவிட்டு
அழங்காரச் சுன்னாக்களில்
அதிசயமாக இஸ்லாமிய எழுச்சி வருமாம்!
பச்சைக் குப்ரையே சுத்த இஸ்லாம் என்பது
சற்று அதிகம்தான்!!

No comments:

Post a Comment