Oct 20, 2013

கிலாஃபத்தை தாக்கிப் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

قَدْ بَدَتِ الْبَغْضَاء مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيَّنَّا لَكُمُ الآيَاتِ إِن كُنتُمْ تَعْقِلُونَ
அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).                                                       (ஆல இம்ரான் 118)
கடந்த மாதம் (27/9/2013) ஐக்கிய நாடுகளின் பொது சபையில் பேசிய  ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பின்வரும்  எச்சரிக்கையை விடுத்திருந்தார் “
…..“That the most powerful of the armed groups inside Syria are the Jihadist which include many extremists that came from all parts of the world, and the aims that they are pursuing have no connections to Democracy, and their basis is an extreme ideology, they aim to destroy the secular state and to establish a Khilafah Islamic State.”
சிரியாவில் உள்ள ஆயுத குழுக்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களான ஜிஹாதியர்கள், உலகின்  பல பகுதிகளில் இருந்தும்  வந்த தீவிரவாதிகள் ஆவர்;  அவர்கள் கொண்டுள்ள நோக்கம், ஜனநாயகத்துடன் எந்த வகையிலும் தொடர்புடையுதல்ல; மேலும் அவர்களின் அடித்தளம் ஒரு தீவிர சித்தாந்தமாகும்,  மதச்சார்பற்ற அரசை அழித்து கிலாஃபத்தை அமைப்பதே அவர்களின் நோக்கமாகும் “.
சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் அழிப்பு தொடர்பாக நடந்த ஐ.நா. கூட்டங்களில் இருந்து அவர் வெளியேறியதை தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.
..”His country does not exclude the participation of armed Syrian opposition in the Geneva 2 Conference as long as they do not think to establish a Khilafah.”
 …”அவருடைய நாடு ஆயுதம் ஏந்திய சிரிய எதிர்ப்பாளர்கள் ஜெனீவா- 2 மாநாட்டில் கலந்து கொள்வதை  தடுக்கவில்லை, அவர்கள் கிலாஃபத்தை நிலைநாட்ட நினைக்காதவரை.”
ரஷ்ய வெளியுறவு அமைச்சரான  செர்ஜி லாவ்ரோவ், சிரியா மற்றும் பிராந்தியத்தில் உள்ள முரண்பாடு பற்றிய உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார். அதாவது, இது இரு நாகரீகங்களுக்கிடையே  உள்ள சித்தாந்த மோதலாகும். அதுவே சத்திய தீனுல்  இஸ்லாத்திற்கும் கொடூரமான  ஜனநாயகம் மற்றும்  நாத்திக  மதச்சார்பின்மைக்குமிடையே உள்ள மோதலாகும். இஸ்லாம், கிலாஃபா மற்றும் ஜிஹாத்  தொடர்பாக தானும்  மேற்கத்திய நாடுகளும் கொண்டுள்ள வெறுப்பு மற்றும் மறைமுக எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.  இஸ்லாத்தின் மீதுள்ள தன்னுடைய  வெறுப்பு, சிரிய அதிபர்  பஷருல் அசாதை விட எந்த வகையிலும் குறைவில்லை என்பதை வெளிபடுத்தியுள்ளார். சீனா, ரஷ்யா, மேற்குலகம், மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள்  பஷருல் அசாதுடன்  சேர்ந்து முஸ்லிம்களை குறிவைக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார். இந்நாடுகளின் ஆதரவையும் ஊக்கத்தையும் கொண்டே முஸ்லிம்களின் மீது கொடூரமான கொலைகளை பஷருல் அசாத் மேற்கொண்டான்.
இஸ்லாத்திற்கு எதிராக குஃப்ஃபார்கள் ஒன்று கூடுவதை  அல் குர்ஆன் நமக்கு எடுத்துரைக்கிறது.
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.              (அல் கமர்:45)
 ஆம், உண்மை தான்; ரஷ்யர்கள், மேற்கத்தியர்கள் மற்றும் யூதர்கள் புரட்சி நடைபெற்றுவரும் ஷாம் பகுதியின்  கிலாஃபா உச்சரிப்பை கேட்டு பிரம்மை பிடித்து ஆடிப்போயுள்ளனர்.
இவர்கள்  சிரிய மக்களின் இந்த கோரிக்கைகளின் தீவிரத்தை உணர்ந்தபோது, அவற்றை தடுக்க இயலாது என்ற நிலையில், இவர்களின்  கனவுகளில் கூட அச்சுறுத்தல்களைகாணமுடிகிறது. இதை மறைவாகவும் வெளிப்படையாகவும் எதிர்ப்பதை விட அவர்களுக்கு வருத்தம் ஏதும் இல்லை. அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தபோதும் அல்லாஹ்سبحانه وتعالىவின் அனுமதிகொண்டு அவை முறியடிக்கப்படும்.
அல்லாஹ்سبحانه وتعالى கூறுகிறான் :-
يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ * هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُون
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்).                                                     (அத்தவ்பா :32-33)
 வரவிருக்கும் கிலாஃபா பகுதியில் உள்ள முஸ்லிம்களே!, ஷாமை சேர்ந்தவர்களே!, இஸ்லாத்தின் இல்லத்தை சேர்ந்தவர்களே(இன்ஷா அல்லாஹ்)!
முஸ்லிம்களின் தீனான இஸ்லாத்தை தாக்கி சவால் விட்ட பஷருல் அசாதின் அதிகாரப்பூர்வ பேச்சாளராக பிரதிபலித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், கிலாஃபத்திற்காக போராடும் குழுக்கள் மீது தனது நேரடியான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அவருடைய நாடு ஆயுதம் ஏந்திய சிரிய எதிர்ப்பாளர்கள் ஜெனீவா-2மாநாட்டில் கலந்து கொள்வதை தடுக்கவில்லை,அவர்கள் கிலாஃபத்தை  நிலைநாட்ட நினைக்காதவரை.”என்று அவர் இங்கே குறிப்பிடுவது தேசிய சிரிய கூட்டணி தலைவர் அஹ்மத் அல் ஜப்ரா போன்ற ஐ.நா வின் மேடையை சேர்ந்தவர்களையே !  இவர் இஸ்லாமிய தீவிரவாதிகள் இப்போராட்டத்தை திருடியதாக குற்றம் சாட்டி அவர்களுக்கு இப்போராட்டத்தில் எந்த சம்மந்தமும் இல்லை என்றார். மேலும் இவருடைய மதச்சார்பற்ற குருவான  மிஷால் கிலோ, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் லவ்ராவ் கூறிய அதே மூலத்தில் பின் வருமாறு கூறியதிலிருந்து அறியலாம் “புரட்சிக்கு எதிராக இந்த குழுக்கள் செய்பவற்றை குறைத்து மதிப்பிடக்கூடாது… நாம் எந்த சூழ்நிலையிலும் அதன் ஆபத்துக்களை தொடர்ந்து புறக்கணிக்கக் கூடாது..  அவர்களை புறக்கணிப்பது மிகப்பெரிய தவறு.. அதைப்போலவே தற்போதைய ஆட்சிக்கு எதிரணி அவசியம்  என்ற நோக்கத்தில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் தவறாகும்.
இஸ்லாம் மற்றும் கிலாஃபத்திற்கு  எதிரான இது போன்ற ஒரு வெளிப்படையான விரோத நிலைக்கு முஸ்லிம்களிடமிருந்து தக்க பதில் தேவைப்படுகிறது; மாற்றத்திற்கான வழிமுறை என்பது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلمஅவர்களுடைய வழிமுறை என்பதும் இந்த புரட்சியின் நோக்கம் கிலாஃபா ராஷிதா என்பதுமே பதிலடியாகும்.
அல்லாஹ்سبحانه وتعالى கூறுகிறான் :-
مَا كَانَ لِأَهْلِ الْمَدِينَةِ وَمَنْ حَوْلَهُمْ مِنَ الْأَعْرَابِ أَنْ يَتَخَلَّفُوا عَنْ رَسُولِ اللَّهِ وَلَا يَرْغَبُوا بِأَنْفُسِهِمْ عَنْ نَفْسِهِ ذَلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ وَلَا مَخْمَصَةٌ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَطَئُونَ مَوْطِئًا يَغِيظُ الْكُفَّارَ وَلَا يَنَالُونَ مِنْ عَدُوٍّ نَيْلًا إِلَّا كُتِبَ لَهُمْ بِهِ عَمَلٌ صَالِحٌ إِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ * وَلَا يُنْفِقُونَ نَفَقَةً صَغِيرَةً وَلَا كَبِيرَةً وَلَا يَقْطَعُونَ وَادِيًا إِلَّا كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللَّهُ أَحْسَنَ مَا كَانُوا يَعْمَلُون
மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல; ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன – நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.                        (அத்தவ்பா :120)
(ஹிஷாம் அல்பாபா, சிரியாவிலுள்ள ஹிஸ்புத்தஹ்ரீரின் ஊடகத்துறை  தலைமை பொறுப்பாளர்) 

No comments:

Post a Comment