'அஷ்ஷாம்' சொல்லும் தெளிவான செய்தி என்ன ?

எம்மீது பிணைக்கப் பட்டிருந்தது காலனித்துவ அடிமைச் சங்கிலி .நவ காலனித்துவ இலாபத்தில் நரித்தனமாக அது நீட்டப்பட்டது .அந்த அசிங்கத்தை விடுதலைபோல் காட்டி ,தேசிய சுவாசம் எனும் பிரித்தாளும் நாசத்தை சுதந்திரப் போலியில் புதுவரவாக்க ,எமக்கு சாக்கடை சிலகாலம் சந்தனமாக தெரிந்தது !

துர்நாற்றத்தை கஸ்தூரி போல் காட்டி எம்மில் இருந்த அயோக்கிய அவமானங்கள் எம்மை அதிகாரம் செலுத்த ஆட்சிபீடம் ஏறினர் . அவர்கள் துரோகத்தின் முகவரிகள் .மார்க்கத்தை மதமாக்கிய மாற்றானின் அகீதாவை
'செக்கியூலரிச ' செக்கில் போட்டு இழுத்து ,' தாகூத்திய' குப்பாருக்கு ' எண்ணை வார்க்கும் எடுபிடிகள் .

சிந்தனை வீழ்ச்சியில் சிக்கித்தவித்த நாம் 'வஹியின் ' ஒளியால் தெளிந்தோம் பாதை தெரிந்தோம் .அல்லாஹ்வுக்கு மட்டுமே நாம் அடிமை என்ற எம் கண்ணியமான முடிவுக்கு சவாலாக அந்த கோடரிக் காம்புகள் வெறியோடு வந்தன .

இந்த 'சாத்தானின் ஏஜெண்டுகளை 'சந்திக்க நாம் திட சங்கற்பம் பூண்டோம் .
மரணத்தை விலை கொடுத்து சுவனத்தை வாங்கும் ,உண்மையான தியாகத்தில் உறுதியோடு உழைக்கிறோம் .சத்தியமே தீர்வென்று சகாதத்தை
அணைக்கிறோம் .

சத்தியத்தை உணர்ந்த போது எமக்கு தியாகங்கள் இனிப்பாக தெரியும் என்பது எம் தந்தை இப்ராஹீம் (அலை ) கற்றுத்தந்தது . எம் தூதர் (ஸல் ) தெளிவாகவே காட்டித் தந்தது .வெற்றி அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வரக்கூடியது. முயற்சியும் தியாகமும் மட்டுமே எம்முடையது .

http://khandaqkalam.blogspot.ae/2013/10/blog-post_17.html

No comments:

Post a Comment