மஸ்ஜிதில் இருந்து அதான் ஒலித்தது . அது அல்லாஹ்வின் அழைப்பு ! அதிகாரத்தில் இருந்து குப்ரியத் கட்டளையிட்டது .அது உலக வாழ்வியலுக்கான அழைப்பு .துன்யா வேறு ஆகிரா வேறா!? மறுமையின் வெற்றிக்காக இம்மை இல்லையா !? வெற்றி பெற விரைந்து வாருங்கள் என்ற அதானுக்கு மறுமைக்கு என ஒரு ஆன்மீக நியாயத்தை கூறிவிட்டு மறுபக்கம் 'தாகூத்தின்' அதே போன்ற அழைப்புக்கு புரிந்தும் புரியாமலும் தலைவணங்கிப் போவது சரியா !? இது தானா முஸ்லிமின் நடத்தை !?

பரலோகத்தில் (ஆகிரத்தில் ) அல்லாஹ்வின் அதிகாரத்தை மட்டுப் படுத்தி விட்டு பூலோகத்தில் (துன்யாவில் ) ஏதோ ஒரு ஆளும் சக்திக்கு கட்டுப்படுவது ,அதன் விருப்பு வெறுப்பின் படி நடத்தைக் கோலத்தை மாற்றுவதா முஸ்லிமின் பண்பு!? ,யஹூதிகள் இறை சாபத்துக்கு உள்ளானதும் , கிறிஸ்தவர்கள் வழி தவறியதும் இதனால் தான் என்பது ஒரு நாளைக்குள் பலதடவை சூரத்துல் பாத்திஹாவை ஓதியும் முஸ்லீம்களே ! ஏன் உங்களுக்கு புரியவில்லை !?

அரபி தெரிந்தவனே நாசரானிகளோடு கூட்டுச் சேர்ந்து யகூதிக்கு தோள் கொடுக்கும் போது நாம் என்ன செய்வது !? எல்லாம் 'கல்லி வல்லி ' என நரகத்து விசா எடுக்கும் 'ஈஸி டெக் நிக்' ஹிக்மத்தாக தெரிவது ஆச்சரியமே ! மறுமையில் எவனையும் வைத்து உன்னிடம் கேள்வி கேட்கப் படாது உனது தேடல் ,உனது முயற்சி ,உனது நடத்தையை வைத்தே உன்னிடம் கேள்வி கேட்கப்படும் .

குப்ரியத்தின் அகீதா ,அது காட்டும் வாழ்வியல் ,மற்றும் அதன் நாகரீக ,கலாச்சார வட்டம் என்பன ஒரு தவிர்க்க முடியாத ஈர்ப்பு விதியாகிப் போக 'டாவின் வீட்டு குரங்குப் பிள்ளையாக' ஒரு அநாகரீக மாற்றத்தை அரவணைத்துள்ளது இன்னும் புரியவில்லையா ?மதம் வேறு வாழ்வியல் வேறு என பக்குவமாக பிரிக்கப் பட்டுள்ள குப்ரியத்தின் சித்தாந்த கட்டமைப்பில் முஸ்லீம் உம்மத்தையும் இணைத்து take it easy policy போடுவதா காலத்தின் தேவை !?

தேசம் ,தேசியம் என்ற 'ஜாஹிலீயத்தினுள் 'சகோதரத்துவத்தை சம்பூர்ணமாக புதைத்து விட்டு ,சாத்தானிய வேதங்களை நம்பி ஜனநாயக விலாசத்தில் குடியிருக்க முஸ்லீம் கற்றுக் கொண்டது சரிதானா !?இப்போது 'முஸ்லிம் முஸ்லிமுக்கு சகோதரன் என்ற இஸ்லாத்தின் உறுதியான தீர்ப்பு 'nationalize' border இல் முக்காடு போட்டு குந்திவிட ,அதற்கு அப்பால் எல்லை தாண்டினால் கலிமாச் சொன்னவனும் அயல் நாட்டான் என்று குப்ரியக் கண்ணாடி போட்டுதான் குசலம் விசாரிக்கப் படுகிறது .
பலஸ்தீனை பிரிக்கும் எகிப்திய 'போர்டருக்கும் ' பர்மிய முஸ்லீம்களை ஏற்க மறுத்த பங்களா தேஷ் 'போர்டருக்கும் ' தேசியம் எனும் same பிரிகோட்டு policy தான் ஒரே நியாயம் .அதற்கும் அப்பால் சகோதரனின் படுகொலையும் ஏதோ கண்ணா மூச்சி போல தேசியக் கொடியால் கண்கள் கட்டப்பட்டே காட்டப்படும் .அனுதாபங்கள் கூட எல்லை தாண்ட 'பொலிடிகல் டிப்லோமடிக் ' வேண்டுமாம் !

face book இலும் டுவிடரிலும் அழுதென்ன பயன் !அரவணைத்திருப்பது அந்நிய அகீதா !சகோதரத்துவம் ,ஒரே உம்மத ,ஒரே பெருநாள் , இப்படி எல்லாவற்றையும் தேசம் ,தேசியம் என்ற சாத்தானிய எல்லைக்கோடுகள் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது . 'குர்பான் மட்டையும் ஏதோ 'கொமர்' விடயம் போல ஒழித்து மறைத்து முடிக்கச் சொல்வதும் ,'போயா' தினத்தில் 'அய்யாமுத் தஷ்ரீக் ' வந்தால் சபூர் செய்யச் சொல்லி பௌத்த இஸ்லாம் பேசுவதும் இன்று கோழை நியாயத்தில் முஸ்லீமுக்கு கொள்கையாய் போயுள்ளது .

தெளிவற்ற உம்மத் திற்கும் ,தகுதியற்ற ஆலிம்களுக்கும் மத்தியில் சத்திய மார்க்கம் மாட்டுப்பட்டு தவிக்கின்றது .சிந்தனை வீழ்ச்சியும் ,சிற்றின்ப ஆசையும் சுவன எதிர்பார்ப்புகளை ஏதோ ஏட்டுச் சுரக்காய் போல் ஆக்க ,முஸ்லீம் அழகுராணிப் போட்டி களிலும் இராகத்தோடு ஓதப்படும் வேதாந்தமாக போய் விட்டது இறை வேதம் .

ஓதுவோம் ,விளங்குவோம் , அதன் வழி நடப்போம் , அதன் பால் அழைப்போம் என கூறியவர்களும் ,சூழ்நிலைவாத சிட்டிவேசன் பேசி தாகூத்துக்கு ஆலோசகராகி பேய்க்கு பேன் பார்க்கப் போய் விட்டார்கள் .ஸுன்னாவை ஓரம்கட்டி குப்ரை தலை தடாவினால் இஸ்லாம் சுகப் பிரசவம் ஆகும் என்று ஆரூடம் கூறும் இந்த ஆலிம்களிடம் அலிப் ,பே கற்கச் செல்வதும் ஆபத்தானது தான் .
Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com