Oct 1, 2013

அமெரிக்கா எதற்காக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நினைக்கிறது

 ஆப்கானிஸ்தானிலிருந்து 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறுவது குறித்து சமீப காலமாக நிறைய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.எனவே  அமெரிக்காவின் ஆப்கானிய குறிக்கோள் நிறைவேறிவிட்டதா? அல்லது இது வெறும் தந்திரமான நகர்தலா என்பதை ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகும்.
அமெரிக்காவிற்கு  முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியங்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுக்க பின்வரும் காரணங்கள்  முக்கியமானவையாகும்.
1. யுரேசியா பகுதியில் ரஷ்யா மற்றும் சீனா ஆதிக்கம் செலுத்துவதை தடுத்து நிறுத்துவது.
2. கிலாஃபா வருவதை தடுப்பது.
3. காஸ்பியன் கடல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியிலுள்ள இயற்கை எரிவாய்வு மற்றும் பெட்ரோலிய  வளங்களை  தன்னுடைய  ஆதிக்கத்தின்கீழ் தக்கவைத்துக்கொள்வது.
4.காஸ்பியன் கடல் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளிலுள்ள எரிவாய்வு போக்குவரத்து பாதுகாப்பை தன் கட்டுக்குள் வைத்திருப்பது.
இதை கீழ்கண்ட ஆதாரத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
      “யுரேசியா நிலையான அரசியல் அமைப்பையும் திறன் வாய்ந்த நாடுகளையும் தன்னகத்தே கொண்ட பகுதியாகும்.கடந்த கால நிகழ்வுகளை உற்றுநோக்கும்போது உலகளாவிய வல்லரசுகள் தங்களின் ஆதிக்கத்தை யுரேசியா பிராந்தியத்திலிருந்தே துவங்கியுள்ளார்கள் என்பதை விளங்கமுடிகிறது.பிராந்திய செல்வாக்கை அடையமுனையும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவும் இந்தியாவும் யுரேசியாவில் உள்ளது.அதேசமயம்   அமெரிக்காவின் முதன்மைத்தனத்தை அச்சுறுத்தும் அரசியல் மற்றும் பொருளாதார ஆற்றலை  இவ்விரு நாடுகளும் கொண்டுள்ளன. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட , ராணுவத்திற்கு அதிகப்படியான செலவு செய்யும் ஆறு நாடுகள் இந்த பிராந்தியத்தில் உள்ளன.அதைப்போன்றுஇவை அணு ஆற்றலை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கொண்டுள்ளன. உலகிலுள்ள மக்கள் தொகையில் 75%இங்குதான் உள்ளது.மேலும் 60GNP (Gross National Product – மொத்த தேசிய உற்பத்தியையும்75% ஆற்றல் வளத்தையும் கொண்டுள்ளது. இவையனைத்தையும் ஆராயும்போது யுரேசியா பகுதி அமெரிக்காவை விட சக்தி கொண்டதாக உள்ளது. இந்த பகுதியை ஆதிக்கம் செலுத்தும் சக்தியானதுஉலகின் மூன்றில் இரண்டு பங்கு செழிப்புடைய பொருளாதார பிராந்தியத்தை(மேற்கு ஐரோப்பா மற்றும் கிழக்காசியா) தன் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். கிட்டத்தட்ட தானாகவே மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை ஆதிக்கம் செலுத்த முடியும்.இப்பகுதியில் அதிகார பங்கீட்டின் மூலம் என்ன விளைவு ஏற்படும் என்றால், யுரேசியா நிலப்பரப்பானது அமெரிக்காவிற்கான  உலகளாவிய முக்கியத்துவத்தையும் வரலாற்று மரபுகளையும் தீர்மானிக்கும் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.
                                            Zbigniew Brzezinski, "A Geostrategy for Eurasia", Foreign Affairs, September/October 1997 ]
     “எந்த ஒரு பெரிய சக்தியும் யுரேசியாவில் உருவாவதைத் தடுப்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கமாகும். அதன் முரண்படும் உண்மைகள் என்னவெனில், அந்த தலையீட்டின் நோக்கம் எதையும் அடைவதற்கில்லை. அரசியல் மேலலங்காரத்தின்மூலம் அவர்கள் எதை கூறினாலும், அது அதற்கு எதுவும் நேராமல் தடுப்பதற்காகும். எந்த பகுதியிலும் ஒரு சக்தி ஏற்பட்டால் அதை தடுத்து நிறுத்தும் அதிகாரம் அமெரிக்காவிற்கு உண்டு. அதன் நோக்கம் அந்த இடங்களில் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கல்ல;நிலையற்ற தன்மையை உருவாக்குவதே ஆகும்.இதை நாம் இஸ்லாமிய எழுச்சியின்போது அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அது ஒரு மாபெரும் சக்தியான கிலாபா மீண்டும்  எழுவதை தடுப்பதையே விரும்புகிறது.அமெரிக்காவிற்கு யுரேசியாவில் அமைதியை நிலைநாட்டும் எண்ணம் அறவே கிடையாது. இந்த மோதல்கள் எதற்காக என்றால்,இந்த பிராந்தியத்தில் ஒரு சக்தி உருவாவதை தடுக்கவும்,நிலையற்ற தன்மையை உருவாக்கவும் தானே  தவிர சீரமைப்பை நிலைநாட்டுவதற்கல்ல.
                                                       [ George Friedman, "The next 100 years, a forecast for the 21st Century", 2009 ]
யுரேசிய பகுதியில் அமெரிக்காவின் இலக்கு என்ன என்ற  விசயத்தில் அங்குள்ள குடியரசு கட்சிக்கும் ,ஜனநாயக கட்சிக்கும் மத்தியில் எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது. இப்பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் புஷ்ஷிற்கும் ஒபாமாவிற்குமிடையே மாற்றுக்கருத்து கிடையாது.
இவ்விரு கட்சிகளுக்குமிடையே அவர்களின் நோக்கத்தை செயல்படுத்தும் உத்தியில்தான் கருத்துவேறுபாடு உள்ளது. அதாவது, அமெரிக்காவின் ஆப்கானிய ஆக்கிரமிப்பை எப்படி சட்டப்படி முறைப்படுத்துவது; ஒருவகையான நிலைத்தன்மையை தக்கவைத்துக் கொள்வது; என்னன்ன காரணங்களைக் கொண்டு நோக்கத்தை அடையலாம்? போன்றவற்றின் செயல்முறை உத்தியில் எப்பொழுதும் ஒபாமா மற்றும் புஷ் அரசுகளுக்கிடையே கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. அதேபோன்று ஒபாமாவின் அதிகாரிகளுக்குமிடையே இதே போன்ற கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. ஆகவே அவர்களின் செயல்திட்டம் பலமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பலமுறை ஒபாமாவின்கீழ் இந்த செயல்முறை மாற்றபட்டாலும், அவர்களின் செயல் திட்டம் இறுதியாக நான்கு முக்கிய குறிக்கோள்களில் நிலைபெற்றது.
1. ஆப்கானிஸ்தானின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் திறனை அதிகரிப்பது; அதாவது ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப்படை, காவல்துறை, இராணுவம் போன்றவற்றை கட்டமைப்பது. தகுதிவாய்ந்த அமெரிக்க விசுவாசமுள்ள ஆளுநர்களை நியமிப்பது மற்றும் ஆப்கானிய அரசிலுள்ள ஊழலைக் குறைப்பது.
2. அல்காயிதா மற்றும் அமெரிக்க ஆதிக்கத்தை எதிற்கும் புஷ்தூன் பகுதியைச் சார்ந்த முஜாஹிதீன்களை அழிப்பது.
3.நடுநிலையான எண்ணம் கொண்ட தாலிபான்களை அவர்களின் இயக்கத்திலிருந்து வெளியேற்றி ஆப்கானிய அரசில் பங்கு பெற ஊக்குவிப்பது.
4. நேட்டோ, பாகிஸ்தான், ஈரான், இந்தியா, ரஷ்யா, சீனா, மற்றும் பிற நாடுகள்   அமெரிக்காவுடன் இணைந்து ஆப்கானிய பிரச்சனையை தீர்க்க பலதரப்பட்ட அனுகுமுறையுடன் கூடிய  ஒரு பிராந்திய சூழலில் ஆப்கானிய செயல்முறை உத்திகளை அமைப்பது.
அமெரிக்கா தன்னுடைய செயல்திட்டங்களை ஆப்கானிஸ்தானில் நிறைவேற்ற திண்டாடுகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.எனவே ஆப்கானிஸ்தானில் வெற்றியடைய முடியாது என்பதை ஒபாமாவும், அமெரிக்காவின் கூட்டாளிகளும் ஆழ்ந்து உணர்ந்துள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் குறித்த தன்னுடைய நிலைபாட்டை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய தூண்டிய முக்கியமான  பல காரணிகளை பார்க்கவேண்டியிருக்கிறது.
சர்வதேச காரணிகள்
*  2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின்  லேமேன் பிரதேர்ஸ் நிறுவனம் வீழ்ந்ததால் சர்வதேச நிதி அமைப்பு  நெருக்கடிக்கு  உள்ளானதோடு கிட்டத்தட்ட நொறுங்கியது. இந்த நிகழ்வானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.அது வெளிநாடுகளில் போர்புரிவதற்கான நிதியை ஒதுக்குவதில்  மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது.
*  ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரில்   அமெரிக்க இராணுவம் இழைத்த கொடூரங்கள் கறையாக படிந்துவிட்டது. இராணுவ அளவை வெளிநாடுகளில் பராமரிக்க முடியவில்லை. தன்னுடைய இராணுவ எண்ணிக்கையை கட்டுப்படுத்தவேண்டிய மிகப்பெரிய நெருக்கடியில் அமெரிக்கா உள்ளது.
ஈராக்கில் 2003 ஆம் ஆண்டிருந்து அமெரிக்கா தன்னுடைய ஆதிக்க  சக்தியை இழந்துவிட்டது. ரஷ்யா,பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு கொடுத்து வரும் அழுத்தம் அதிகரித்து வருகிறது.ஆசிய பசிபிக் பிராந்தியத்தைப் பொறுத்தவரை சீனா மேலோங்கிவருவது அமெரிக்காவிற்கு கவலையளிப்பதாய் உள்ளது. இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு சீனா  மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்பதாக அமெரிக்கா அஞ்சுகிறது.தேசிய திறனாய்வு கவுன்சிலின் முன்னாள் துணைத்தலைவர் கிரகாம் புல்லர் 2006 ஆம் ஆண்டு அமெரிக்கா தன்னுடைய எதிரிகளிடம் எதிர் கொள்ளும் சவால்களை இவ்வாறு விவரித்திருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு  நாடுகள் பலவகையான உத்திகள் மற்றும் தந்திரங்கள் மூலம் புஷ்ஷின் காரியங்களை திசை திருப்புவதன் மூலமாகவும்,கடினமாக்குவத்தின் மூலமாகவும்,வரம்பு விதிப்பதின் மூலமாகவும்தடுப்பது  அல்லது தாமதப்படுத்துவது என்பதன்  மூலமாகவும் அந்த உத்திகளை உயிரற்ற்றதாக ஆக்க முயற்சிக்கின்றன. இந்த எதிர்ப்பு பலதரப்பட்ட நோக்கங்களைக் கொண்டு செயல்படுகிறது.
                                                                                                             [ "Strategic Fatigue", National Interest, 2006 ]
இதுபோன்ற சர்வதேச காரணிகள் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் இரண்டு இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
1. அமெரிக்கா 2001 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 500 பில்லியன் டாலர்களை ஆப்கானிஸ்தான் போரில் செலவழித்துள்ளது. இராணுவத்திற்கான நிதியைக் குறைத்ததால் அமெரிக்கா  பல்வேறு முனைகளில் போரிடுவதற்கு  மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியது. நியூயார்க் டைம்ஸ் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “Panetta to Offer Strategy for Cutting Military Budget” என்ற தலைப்பில் இவ்வாறு அறிக்கை வெளியிட்டது.
நிதி நெருக்கடியின் காரணமாகவும் கடந்த கோடை காலத்தில் அமெரிக்கா கடனை செலுத்த முடியாமல் ஏற்பட்ட சூழலின் காரணமாகவும் பெனட்டாவிடம் ராணுவத்தை குறைக்கும் ஒரு திட்டத்தை கேட்டுக்கொண்டது. அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒரே நேரத்தில் இரண்டு போர்களை சந்திக்கும் தன்மையை அமெரிக்கா இழந்துவிடும். எவ்வாறெனில் ஒரு பெரிய போரை சந்திக்க இராணுவத்தை பயன்படுத்தினால் போதும் எனவும்மற்றொரு பாகத்தில் சிறிய தாக்குதல் மூலமாகவும் பேரழிவு நிவாரணம் வழங்குவதன் மூலமாகவும் அந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிப்பதன் மூலமாகவும் நிறைவேற்றலாம் என்பதாக கூறப்பட்டது.
அமெரிக்கா ஒருகாலத்தில் தன்னால் இரு போர்களை ஒரே நேரத்தில் செய்ய முடியும் என்று கர்வம் கொண்டிருந்த நிலை மாறி, இன்று தன்னால் ஒரு போரை மட்டுமே செய்ய முடியும் என்று ஒத்துக் கொண்டுள்ளது.
2. அமெரிக்கா இன்று எந்த போருக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டது. அமெரிக்காவிற்கோ தற்போது பன்முனைகளில் சவால்கள் எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போரை சமாளிக்கவும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுடனும் மத்திய கிழக்கிலும் போர் புரிய வேண்டிய சூழலை சமாளிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. சீனாவின் அபார வளர்ச்சி அமெரிக்க அரியல் கொள்கையை தீர்மானிக்கும் நிபுணர்களுக்கு மிகவும் கவலை  அளிப்பதாய் உள்ளது.
2012 ஆம் ஆண்டு மார்ச்  மாதத்தில் Congressional Research Service அறிக்கையை “Pivot to the Pacific? The Obama Administration’s “Rebalancing” Toward Asia“என்ற தலைப்பில்அறிக்கையை  தயாரித்தது. அந்த அறிக்கை துல்லியமாக கூறுவது யாதெனில்…
   “மைய ஆதாரத்தின் அடிப்படை நம்பிக்கை என்னவெனில்,அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் நிறையீர்ப்புதேசிய பாதுகாப்பு மற்றுஉத்தி பொருளாதார அக்கறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  அது ஆசியாவை நோக்கி நகர்ந்துள்ளது. மேலும் அமெரிக்க உத்தி மற்றும் முன்னுரிமைக்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிக முக்கியத்துவத்தை ஆசிய பசிபிக் பகுதியில் செலுத்தவேண்டியது தவிர்க்க முடியாதது என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகிறார்கள்.கடந்த சில வருடங்களாக இப்பிராந்தியத்திலுள்ள பல நாடுகள் சீனாவின் வளர்ச்சியை தடுக்க அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கையை ஊக்குவின்றன.அமெரிக்க தன்னுடைய இராணுவத்தை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து குறைத்து ஆசிய பசிபிக் கடற்பகுதியை நோக்கி  நகர்த்தியுள்ளது.அமெரிக்கா இந்த பகுதிக்கு அதிக முக்கியத்தும் அளிப்பதையே இது காட்டுகிறது.தேவையேற்படின் அமெரிக்கா இராணுவ மோதலுக்கும் தயாராகவே உள்ளது. அமெரிக்கா தன்னுடைய அரசியல் ஈடுபாட்டை  ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து மாற்றி கிழக்காசியா நோக்கி திருப்பி உள்ளதையே இது காட்டுகிறது.
பிராந்திய காரணிகள்
மூன்று பிராந்திய காரணிகள் அமெரிக்காவிற்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. ஆதலால் அது ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மையை ஏற்படுத்த தெளிவான முடிவை எடுக்கும் நிலையை ஏற்படுத்தியது.
ஐரோப்பாவின் தலைமையிலான நேட்டோ படைகள் அமெரிக்க ஆப்கானிய படையெடுப்பை  பலமுறை தடுத்திருக்கின்றன. 2003 ஆம் ஆண்டு முதல் நேட்டோ படையெடுப்பு சர்வதேச பாதுகாப்பு படையின்கீழ் துவக்கப்பட்டதோ, சில ஐரோப்பிய நாடுகள் தங்களின் படைகளையும் தளவாடங்களையும் ஆபத்து நேரும் பகுதியில் ஈடுபடுத்தாமல் தவிர்த்து வந்தன. பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் தங்களின் படைகளை ஆப்கானிஸ்தானின் அமைதியான பகுதியில் நிறுத்த விரும்பின. நேட்டோ அமர்வுகளில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் போனது.  மேலும் அமெரிக்கா போருக்கான முன்னுரிமையை வேறு பகுதிக்கு மாற்றியதால் ஆப்கானிய போரை தொடர்ந்து நடத்துவது சிரமமாயிற்று.இறுதியாக 2012 ஆம் ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற அமர்வில் நேட்டோ நாடுகள் தோல்வியுற்ற ஆப்கானிய போரின் திரைச்சீலையை இறக்க   சம்மதித்தார்கள். அந்த மாநாட்டின் வாக்குமூலம் கூறுவது என்னவென்றால்,
  பத்து வருடங்கள் போர்  புரிந்துள்ளதாலும் சர்வதேச பொருளாதாரம் வீழ்சியடைந்து விட்டதாலும்நூற்றாண்டு காலமாக தங்களை ஆக்கிரமிக்கும் அந்நியர்களை தோல்வியுற செய்தவர்களிடம் எங்களின் உயிர்களையோ சொத்துக்களையோ இழக்க விரும்பவில்லை.
பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதிகளில், குறிப்பாக வடக்கு வசீரிஸ்தானில் அதிகமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா தவறிவிட்டது.அதிக ஈடுபாட்டுடன் தங்கள் எஜமானர்களுக்காக அதிகமாக உழைத்துக்கொண்டிருக்கும் சர்தாரி, கயானி போன்ற எஜெண்டுகளாலேயே முடியவில்லை. பிரிட்டனின் ஆலோசனையின் பேரில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானை வெற்றிகொள்ள அமெரிக்காவிற்கு உதவாமல் சிரமத்தையே கொடுத்தது.  இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே இருக்கும் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை குறைக்க அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை ஏற்காமல் நிராகரித்ததால், பாகிஸ்தானால் ஆப்கானிய எல்லையில் தன்னுடைய படையை அமர்த்தி அமெரிக்கா எதிர்நோக்கி வரும் எதிர்ப்பை அடக்க உதவமுடியாமல் போனது.
உள்நாட்டுகாரணிகள்
ஒபாமாவிற்கும் இராணுவ தலைமைக்குமிடையே படை குறைப்பு சம்பந்தமாகவும் செயல்பாட்டு உத்திகளை நிறைவேற்றும் காலம் சம்பந்தமாகவும் வெளிப்படையாகவே மோதல் ஏற்பட்டதன் காரணமாக ஜெனரல் மெக் கிறிஸ்டல் பனி நீக்கம் செய்யப்பட்டார். இது அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினரின் மன உறுதியைக் குறைப்பதாக அமைந்தது. மேலும் புஷ்தூன் மக்களின் எதிர்ப்பை வலுவடைய செய்தது. அமெரிக்க கடற்படை பிரிவு தளபதி ஜெனெரல் ஜேம்ஸ் கன்சாய் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது எப்போது என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு கூறினார்:-
சில வகைகளில் நாம் சரி என்று நினைப்பது இப்போது நமது எதிரிகளுக்கு அநேகமாக ஊக்கம் விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. அவர் தமக்குத்தாமே இதை கூறுகிறார் என்று நாம் நினைக்கிறோம்.உண்மையில் இடைமறிக்கப்பட்ட கருத்துக்கள் கூற வருவதுநாம் எப்பொழுது வரை தாக்குப்பிடிக்கவேண்டும்…. நான் உண்மையாக  நினைக்கிறேன்.,சில காலம் முன் வரை.நமக்கு சாதகமான  திருப்புமுனை ஏற்படும் என்று ..”                        [ US General: Afghan        deadline 'giving enemy sustenance', BBC News Online, August 24 2010 ]
அமெரிக்கப் படைகளின் மோசமான நடத்தைகள்,அவர்களை ஆப்கானிஸ்தான் மக்களிடமிருந்து அன்னியப்படுத்தியது மட்டுமல்லாமல், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு  எதிராக போராடிய மக்களின் எதிர்ப்பு உக்கிரத்தையும் அதிகப்படுத்தியது. குர்ஆனை கிழித்தது, முஜாஹிதீன்களின் உடலில் சிறுநீர் கழித்தது, பெண்களையும் குழந்தைகளையும் இரக்கமில்லாமல் கொன்று குவித்தது, புஷ்தூன் பகுதியில் தஜிக் மக்களைக் கொண்டு சோதனை மேற்கொண்டது போன்ற ஈனச்செயல்களின் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்ப்பு மென்மேலும் உறுதியடைந்தது. ஆகவே சர்வதேச, பிராந்திய, உள்நாட்டு காரணிகள் அமெரிக்காவின் செயல்பாட்டு உத்தியை கைவிட்டுவிட்டு தாலிபான்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கவுரமான வெளியேற்றத்தை நாட நிர்பந்தித்தது. எனினும் அமெரிக்கா இதைக்கொண்டு யுரேசியாவிற்கான செயல் திட்டத்தை கைவிட்டுவிட்டது என்று கருதக்கூடாது.  அதை வெறுமனே நிறுத்திவைத்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை ஓர் ஏவுதளமாக  அமெரிக்கா பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.
எனினும் இன்ஷா அல்லாஹ் கிலாஃபத்தின் மீள்வருகையானது ஆப்கானிஸ்தான் மற்றும் முஸ்லிம் நாடுகளை ஏப்பம் விட நினைக்கும் அமெரிக்காவின் இலட்சியத்தை தகர்த்தெறி வதோடு,  என்றைக்குமே பகல் கனவாக ஆக்கிவிடும்.
                                                                           Source: http://sindhanai.org/

No comments:

Post a Comment