Al Mukhabarat Al A'amah. என்றால் என்ன தெரியுமா?. சவுதி அரேபியாவின் உளவு ஸ்தாபனம். மன்னரிற்கு விசுவாசமாக செயற்படும் இரகசிய அமைப்பு. இதன் ஆங்கில கருத்து (GIP - General Intelligence Presidency). உளவறிதல், சவுதி அரசர் இடும் கட்டளைகளை இரகசியாமாக செயற்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்களை இது செய்கிறது. 1956-ல் கிங் அப்துல் அசீஸ் அல் சவுத்தினால் தேசிய தேவை கருதி இது உருவாக்கப்பட்டது. மபாகித் எனப்படும் (General Investigation Directorate) மபாகித்ல் (சவுதி உளவு ஸ்தாபனம்) இருந்து இந்த அமைப்பு தனியாக பிரிக்கப்பட்டு மன்னரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இதன் இயக்குனராக சவுதி ரோயல் குடும்பத்தை சார்ந்த ஒருவரே இருந்து வருவது வழக்கம். அவ்வகையில் தற்போது “பந்தர் பின் சுல்தான்” அதன் தலைவராக இருந்து வருகிறார்.

1983-ல் இருந்து 2005 வரையான காலப்பகுதியில் அமெரிக்காவிற்கான சவுதி அரேபிய அம்பாஸிடராக கடமையாற்றியவர் இந்த பந்தர் பின் சுல்தான். ரொனால்ட் ரீகன், பில் கிளின்டன், ஜோர்ஜ் புஷ் போன்ற அமெரிக்க அதிபர்களுடன் கடமையாற்றியவர். 2012-ரீல் அல் முக்பராத் அல் ஆமாஃவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். மன்னராட்சிக்கு எதிரான அனைத்துவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஒழிக்கும் பொருப்பினை மன்னர் அப்துல்லாஹ் இவரிடம் கையளித்திருந்தார். ஜித்தாவை தளைமாக மாற்ற அல்-காயிதாவினர் எடுக்கும் அனைத்து பிரயத்னங்களையும் முடியடிப்பதில் கணிசமான வெற்றியையும் இவர் பெற்றுள்ளார். அமெரிக்க உளவமைப்பான சீ.ஐ.ஏ.யுடன் சவுதி அரேபியா சார்பாக இராணுவ, உளவு விவகாரங்களை இவரே கவனித்தும் வருகிறார்.

இவர் சவுதி ரோயல் எயார் போஸில் கடமையாற்றியவர். அமெரிக்க மக்ஸ்வெல் எயார் பேஸில் சிறப்பு பயிற்ச்சிகளை மேற்கொண்டவர். இவர் ஒரு பைலட். அதுவும் சண்டை விமானங்களை ஓட்டும் பயிற்ச்சி பெற்ற பைலட். ஆயுத படைகளை கையாளும் பயிற்ச்சியையும் முடித்துள்ளார்.

அண்மை காலங்களில் இவர் அமெரிக்க செயற்பாடுகள் குறித்து பல அதிருப்தி தரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சிரிய சமர்களத்தில் அமெரிக்க சடுதியாக பின்வாங்கியுள்ளதாகவும், சிரிய அரசுடன் பேச்சுக்களை அது ஆரம்பிக்க முற்பட்டுள்ளதாகவும் இதனால் சவுதி அரேபியா ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

பஹ்ரைன் கிளற்ச்சியின் போது சவுதி அரேபியா பஹ்ரைனிற்கு ஆதரவாக தனது படையை அனுப்பியது. ஷியாக்கிளின் புரட்சியை அடக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா சவுதி அரேபியாவிற்கு உதவவில்லை என்பதும் இவரது குற்றச்சாட்டாகும். அங்கே தான் அமெரிக்காவின் 5வது கடற்படை பிரிவு தளமமைத்துள்ளது. பலஸ்தீன விவகாரங்களில் அமெரிக்கா இரட்டை வேடம் பூண்டுள்ளது என அவர் அண்மையில் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார். ஈரானுடன் அமெரிக்கா உறவுகளை வளர்பதும் சவுதி அரேபியாவிற்கு அது செய்யும் துரோகம் என்பது அவரது கருத்து.

அமெரிக்கா தொடர்பான கொள்கைகளில் சவுதி அரேபிய அரசு சில மாற்றங்களை கொண்டு வருவதுடன் ஒட்டுமொத்த கொள்கையில் மீளாய்வுகள் செய்யப்படல் வேண்டும் என அவர் மன்னரிற்கு தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அண்மைக்காலமாக அவரது ரஷ்ய விஜயங்களும் அதிபர் விளாடிமிர் புட்டினுடனான சந்திப்புக்களும் இந்த மாற்றங்களிற்கு காரணமாக அமைந்துள்ளதா என சில கேள்விகள் அமைந்துள்ளன. இரண்டு இராஜதந்திரிககளின் சந்திப்பு என்பதனையும் விட சவுதி அரேபிய உளவமைப்பின் தலைவரும் ரஷ்யாவின் முன்னாள் கே.ஜீ.பீ. உளவமைப்பின் தலைவரும் சந்திப்பது என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com