Oct 1, 2013

சிறுவர்கள் தினம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்!


இன்று சிறுவர்கள் தினம் வெகு விமர்சையாக பாடசாலைகளிலும் முன்பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது.

அடிப்படையில் நாம் சிறுவர்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று நோக்குவோமாயின் அது இன்றைய மேற்க்தேய வாழ்க்கை முறையில் சிறுவர்கள் துஸ்பிரயோகம் பரவலாக்கப்பட்ட நிலையில் அதனை ஒரு வாறு சமாளித்து ஒருவகையான திருப்தியை ஏற்படுத்தும் ஒரு பொய்ச்சாட்டாகவே நாம் அதனை காணலாம்.

ஏனெனில் இன்று உலகில் சிறுவர்கள் நடாத்தப்படும் முறைபற்றிய புள்ளி விபரத்தை பாருங்கள்.

உலகில் 100 மில்லியன் பிள்ளைகள் வீடுகளற்ற நிலையில் வீதிகளில் வசிக்கிறார்கள்.

நோயினாலும் போசாக்கு குறைபாடாலும் ஒரு கிழமைக்கு 250,000 பிள்ளைகள் மரணமடைகிறார்கள்.

உலகளாவிய ரீதியில் 2 மில்லியன் சிறுவர்கள் பாலியல் போகப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறார்கள்

20 மில்லியன் சிறுவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள்.

10 மில்லியன் சிறுவர்கள் சிறுவர் அடிமைகளாக பயன்படுத்தப்படுகிறார்கள்.

எயிட்சினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகள் சுமார் 2010 இல் 30 மில்லியன்.

இத்தகைய ஒரு கொடூர நிலைக்கு இட்டுச்சென்றது எது?

1-ஏகாதிபத்தியவாதிகளது பொருளாதார நலன்களுக்கான நாடுகள் மீதான அத்து மீறல்.

2-மேற்கினது சுரண்டலை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறைமை.

3-அவர்களது சமூக கலாச்சார விழுமியங்களால் ஏற்பட்ட பாதிப்புகள்
(எயிட்ஸ்)
4- தனிமனித சுதந்திரம் எனும் பெயரில் கட்டியெழுப்பப்பட்டுள்ள வாழ்க்கை முறையும் பெண்ணியக் கோட்பாடும்

5-மற்றும் இன்றைய முதலாளித்துவ அரசுகளது சுயனநலப்போக்கு.

இத்தகைய இழிநிலையில் இருந்து மீட்சிபெற இஸ்லாம் மீள உலக தலைமைத்துவத்தை பெற்று உலகினை இறைவழிகாட்டல் அடிப்படையில் ஆட்சி செய்ய வேண்டும்.

இது குறித்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்

"மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்." (அல்குர்ஆன் 16:89)

எனவே, சிறுவர் துஸ்பிரயோமற்ற உலகை உருவாக்குவதற்கு பிரபஞ்சங்களின் ரப்பினது வழிகாட்டலில் உலகம் வழிநடாத்தப்படவேண்டும்!



by Mohideen Ahamed Lebbe

No comments:

Post a Comment