கொலைகாரனுக்கு இராஜ தந்திர பாதுகாப்பா ஏன் !?'பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் ' என்ற உண்மைய 'குப்ரிய' ஏகாதிபத்திய கூட்டு சிரிய விவகாரத்தில் மீண்டும் ஒரு தடவை தெளிவாகவே நிரூபித்துள்ளது . ஒரு கொலைகாரக் கொடுங்கோலனுக்கு பாதுகாப்பையும் ,அதே நேரம் அவனது சிறந்த கொடூர செயல்களை மறைத்து மூடும் போலியான அரசியல் இராஜதந்திர நியாயங்களையும் கற்பிக்கத் தொடங்கியுள்ளது. இது ஏன்? என்ற வினாவைத் தொடுத்தால் அதற்கான ஒரே பதில் நிச்சயமாக இஸ்லாம் என்பதாகவே இருக்கும் .

பசர் அல் அசாத் என்ற இந்த இரத்தக் காட்டேரி இரண்டரை வருடங்களாக தொடுத்த இந்த வெறியாட்டத்தில் சிரியாவில் 100,000 முதல் 300,000 வரையான மனித உயிர்கள் பலியாகியுள்ளன சிறு கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் முற்றாகவே அழிக்கப்பட்டுள்ளன , பல இலட்சங்களை தாண்டும் அளவுக்கு காயமடைந்தோர் இருக்கின்றனர் . ஏறத்தாழ 10,000 இற்கும் அதிகமான பெண்கள் இவனது படையின் காம வெறியாட்டத்தில் சீரழிக்கப் பட்டுள்ளனர் .வார்த்தைகளில் வடிக்க முடியாத சித்திர வதைகளை இவனது அட்டூழியப் பட்டாளம் செய்துள்ளது . சிறுவர்கள் ,குழந்தைகள் ,முதியோர்கள் என்ற பாகுபாடின்றி இந்த கொடூர நிகழ்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன .

இங்குள்ள கேள்வி என்னவென்றால் அப்போதெல்லாம் அறிக்கைப் போலிகளை ஏகாதிபத்தியங்களது மீடியாக்கள் பரவலாக வெளியிட்டு விட்டு இப்போது இரசாயன ஆயுத தாக்குதலை காரணம் காட்டி நேரடி தரிசனம் ஏன் என்பதே ஆகும் ? இன்னும் இந்த கொடூரங்களுக்கு ஆயுத மற்றும் இராஜதந்திர பின்புலம் கொடுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அமைதிக்கான நோபல் பரிசும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமே !

மேலும் அமெரிக்க சார் மேற்குலகு அதன் கூட்டுச் சதி மண்டபமான ஜெனீவாவில் கூடி இன்னொரு முகமூடி போட்ட முஸ்லீம் பெயர்தாங்கி அடிவருடிக் காட்டேரிகளை அவசரமாக சிரிய அரசியலுக்காக அமைக்கும் மந்திராலோசனையும் நடத்தியுள்ளது ஏன் ?

இத்தகு கேள்விகளுக்கெல்லாம் இருக்கக் கூடிய ஒரே விடை சிரிய மக்காளால் தெளிவாகவே வெளியிடப்பட்டுள்ள 'இஸ்லாமிய கிலாஃபா ஒன்றே எமது தீர்வு! என்ற ஒரே முடிவே ஆகும் . உலக முஸ்லீம் உம்மாவே ! சிறிய மக்களது இறப்புக்கள் ,இழப்புக்கள் ,இரத்தம் சிந்தல்கள் எல்லாம் அவர்களுக்காக மட்டுமல்ல உனக்காகவும் தான் என்பதை புரிந்துகொள் . உனது பிரார்த்தனையாலும் வார்த்தைகளாலும் குறைந்த பட்சம் அவர்களுக்கு உதவு !

தவிர அல்லாஹ்வின் எதிரிகளின் சூழ்ச்சிப் பிரச்சாரங்களில் ஏமாந்து சீரியப் போராட்டம் தொடர்பில் தவறான முடிவுகளுக்கு வந்து விடாதே !