Mar 24, 2014

காரத்தைப் பாருங்கள் கடுகின் பருமனைப் பார்க்காதீர்கள்




திறமைக்கும் அரசியல் சாணாக்கியத்திற்கும் வயதும்

அனுபவமும் ஒரு காரணியல்ல . திறமை இருந்தால்

அனுபவத்தையும் சாதகமாக வளைத்துப் போடலாம்

என்பதன் வரலாற்று ஆதாரமே கீழ் வரும் சம்பவமாகும் .

எமது முஸ்லீம் உம்மத் இன்னும் பல

முஹம்மத் அல் பாதிஹ், தாரிக் பின் சியாத் , முஹம்மத் பின்

காசிம், போன்றவர்களை சுமந்தே உள்ளது. எதிர் கால ரோமின்

வெற்றிக்காகவும், பலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள யூத

சத்துருக்களை சம்ஹாரம் செய்யவும், முழு முஸ்லீம் உம்மத்தை

பாதுகாக்கவும் , காத்துக் கொண்டிருக்கிறார்கள் . 'இன்ஷா அல்லாஹ் '.

மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நியமித்து விட்டு அணைத்துப் பொருப்புக்களிலிருந்தும் ஒதுங்கி தூர இடம் ஒன்றிற்கு சென்று விடுகிறார். முஹம்மதோ அறிவு, வால் வீச்சு, குதிரை ஓட்டம், போர் பயிற்சி என்று அணைத்திலும் சிறந்து விளங்கினும் போதிய அனுபவமற்றவனாக இருந்தான்.

இந்நிலையில் பதவி ஏற்று சில மாதங்கள் ஆவதற்குள் ரோம பேரரசு உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் மீது பாரியதொரு படையெடுப்பை மேற்கொண்டது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது முஹம்மதுக்கு 
மிகக்கடினமாக இருந்தது. எனவே தந்தையின் உதவியை நாட முடிவு செய்தான். விரைவாக வந்து படைக்குத் தலைமை தாங்குமாறு தந்தைக்கு கடிதம் அனுப்பினான். தந்தையிடமிருந்து “இப்பொழுது நீ தான் கலீபா, படைக்கும் நீயே தலைமை தாங்கு..! என்னால் 
வர முடியாது” என்று பதில் வந்தது.

இதற்கு முஹம்மதின் பதில் கடிதம் பின்வருமாரு இருந்தது. 

“ஆம் நான் தான் கலீபா
இப்பொழுது நான் கட்டளையிடுகிறேன், உடனடியாக வந்து 
படையை வழி நடாத்துங்கள்..!”

இந்த சிறுவன் தான் வரலாற்றில் சுல்தான் முஹம்மத் அல் பாதிஹ் என்று போற்றப்படும். நபிகளாரால் முன்னறிவுப்பு செய்யப்பட்டபடி கொன்ஸ்தாந்திநோபிலைரோமர்களிடமிருந்து கைப்பற்றிய மாவீரனாகும்.

நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்புச் செய்த அந்த 
ஹதீஸ் 
கொன்ஸ்தாந்திநோபில் நிச்சயம் வெற்றி கொள்ளப்படும். அதை வெற்றி கொள்ளும் தளபதி எவ்வளவு சிறந்த தளபதி..!, அதை வெற்றி கொள்ளும் படை 
எவ்வளவு சிறந்த படை..!” 

(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்- ஹதீஸ் இல:2918)

http://khandaqkalam.blogspot.ae/2012/12/blog-post_5103.html#more

No comments:

Post a Comment