Mar 26, 2014

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் முஸ்லிம்களை நரவேட்டையாட துணைபோவது யார்?


பதில்:-

இதற்கு பதிலளிக்கும் முன் மத்திய ஆப்பிரிக்காவின் நிலை குறித்தும், அங்கு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளின்(coups) மூலம் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் குறித்தும், அதற்கும் சர்வதேச பிரச்சினைகளிலூடான தொடர்புகள் குறித்தும் தெரிந்தாக வேண்டும்.

1. மத்திய ஆப்பிரிக்காவின் மொத்த ஜனத்தொகையான 50 லட்சம் மக்களில், முஸ்லிம்கள் 15% லிருந்து 20% வரை உள்ளனர். முஸ்லிம்கள் நாடெங்கும் பரவி வாழ்வதை பார்க்கையில் இந்த புள்ளி விவரம் கேள்விக்குரியதாக இருக்கிறது; மேலும் இந்த புள்ளி விவரங்கள் சமநிலையற்றதாகவும், நியாயமற்றதாகவும் இருக்கிறது. பல காரணங்களுக்காக முஸ்லிம்களின் சதவிகிதம் வேண்டுமென்று குறைத்து கூறப்பட்டிருக்கிறது... முஸ்லிம்களின் சதவிகிதம் இந்த புள்ளி விவரத்தை காட்டிலும் அதிகமாகவே இருக்கும். மீதமுள்ள சதவிகிதத்தை கிறித்தவர்களும் பலதெய்வ வழிபாட்டாளர்களும் பூர்த்தி செய்கிறார்கள். தலைநகர் பெங்குய்யில் முஸ்லிம்கள் பரவி வாழ்கின்றனர். அங்கே அவர்கள் அதிகமான மஸ்ஜிதுகளையும் மதரசாக்களையும் நிறுவியுள்ளனர். அது போலவே மற்ற பெருநகரங்கள் மற்றும் மாகாணங்களிலும் பரவி வாழ்கின்றனர். குறிப்பாக நாட்டின் வட பகுதியில் வசிக்கின்றனர். அங்கே தெற்கு சாட்டை சார்ந்த பஜ்ரமி இஸ்லாமிய ராஜாங்கத்தின் (Bajrami Islamic Sultanate in the south of Chad) பல சுல்தான்கள் மத்திய ஆப்பிரிக்காவின் வடக்கு ராஜாங்கத்திடம் வீழ்ந்ததன் காரணத்தால் புலம்பெயர்ந்தார்கள். இவர்கள் மூலம் ஏராளமானோர் இஸ்லாத்தில் இணைந்தனர். 13-ம் நூற்றாண்டில் மத்திய ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் இஸ்லாம் நுழைந்ததை அறிந்து, வடக்கு பகுதியை சார்ந்த இந்த்லி(Indli) தலைநகரை சார்ந்த ரோங்கா(Rongha) கோத்திரத்தார் மற்றும் ப்ராவ்(Prao) நகரை சார்ந்த வகாகா(Vakaca) கோத்திரத்தார் இஸ்லாத்தில் இணைந்தனர். இப்பகுதி தங்கம், வைரம் மற்றும் யுரேனியம் போன்றவைகளால் நிறைந்திருக்கின்றன. பல காரணங்களுக்காக முஸ்லிம் குழுக்கள் 18 மற்றும் 19ம் நூற்றாண்டில் இங்கு வந்தன. இவர்கள் தங்கள் நாட்டில் பிரஞ்சு காலனியாதிகத்தை தோற்கடிக்க தமது சகோதரர்களுடன் போராட்டத்தில் பங்கு பெற்றனர். அதுபோல மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து வருகை தந்த முஸ்லிம்கள் மற்றும் ஹவ்ஸா(Hausa)கோத்திரத்தாரும் ஃபுலானி(Fulani) கோத்திரத்தாரும் காமரூனுக்கு அருகாமையில் உள்ள தென்மேற்கு பகுதிகளில் அதிகமான சதவிகிதத்தை கொண்டிருந்தனர். பல தெய்வ வழிபாட்டுக்காளர்களிடம் இஸ்லாம் பரவி விடுமோ என அஞ்சிய பட்டாஸே(Pattase)அரசு பிரான்ஸின் உதவியுடன் அவர்களை முஸ்லிம்களிடமிருந்து தனிமைப்படுத்தும் முறையை கையாண்டது. அதுமட்டுமின்றி அரசு மற்றும் பொதுத்துறையில் முஸ்லிம்கள் வேலை செய்வதை தடுத்தது. ஆகையால் முஸ்லிம்கள் வணிகத்தை நோக்கி திரும்பினர். முஸ்லிம் வணிகர்கள் படுகொலை செய்யப்பட்டதன் காரணத்தால் வணிகம் ஸ்தம்பித்தது.மேலும் தலைநகர் பெங்குய்யின் மக்கள் மிகுந்த உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதை கண்டனர்.

2. 1885ல் மத்திய ஆப்பிரிக்காவில் பிரஞ்சு காலனியாதிக்கம் தொடங்கியது; பிரான்ஸ் தனது தளத்தை பெங்குய்யில் அமைத்தது. அதனையடுத்து 1894ல் அது பிரான்ஸின் அதிகாரப்பூர்வ காலனியாகியது. 1960ல் பிரான்ஸ் அதிகாரப்பூர்வ சுதந்திரத்தை வழங்கிய போது நாட்டின் கட்டுப்பாட்டை கிறிஸ்தவர்களிடம் ஒப்படைத்தது. ஆனாலும் அதன் செல்வாக்கு மற்றும் ஆக்கிரமிப்பு முன்பிருந்தது போலவே இருந்தது; அது கிறிஸ்தவர்களை இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு(coup)களின் மூலமோ அல்லது பெயரளவில் நடத்தப்படும் தேர்தல்கள் மூலமோ நியமித்தது.டேவிட் டேக்கோவை(David Dacko) மத்திய ஆப்பிரிக்காவிற்கு அதிகாரப்பூர்வ சுதந்திரம் வழங்கிய பின் முதல் ஜனாதிபதியாக பிரான்ஸ் நியமித்தது, ஆனால் பதவியேற்ற இரண்டு வருடங்களிலேயே அவனுடைய கொடுங்கோல் மற்றும் எதிரணியினரை அடக்குவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் வெளிப்பட்டது. ஆப்பிரிக்காவை நோக்கி பார்வையை வைத்திருந்த அமெரிக்கா இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டது. அச்சமயம் சோவியத் யூனியன் பழைய காலனித்துவத்திற்கு எதிராக சண்டையிடும் நோக்கம் கொண்டிருந்தது.இதனையடுத்து பின்னர் அமெரிக்காவுடன் 1961ல் இந்த காரியத்தை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தது.

இவ்விரு நாடுகளும் இந்த கொள்கையில் தங்களுடைய இணக்கத்தை தெரிவித்ததன் மூலம் ஆப்பிரிக்க மக்களை இந்த பழைய காலனித்துவத்திற்கு எதிராக எழுச்சி அடைய செய்வதற்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. பிரான்ஸ்,இந்நாட்டில் தனது செல்வாக்கை இழந்து விடுவோமோ என அஞ்சி 1966ல் தனது முதன்மை அதிகாரி ஜான் பெடுல் பொகாஸா(Jean Beddle Bokassa)வை அங்கு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை(coup) மேற்கொண்டு அதிகாரத்தை பலமாக தனது கரத்தில் வைத்து கொள்ள அனுப்பியது. அமெரிக்கா-சோவியத்தையும் எதிர் கொள்ளவே இந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு(coup) நடத்தப்பட்டது என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்ட, பின்னர் அவர் டேவிட் டேக்கோவை தனது ஆலோசகராக நியமித்து கொண்டான்; இது பிரஞ்சு ஆதிக்கத்திற்கு எதிராக எவரொருவரையும் நசுக்க ஏற்படுத்தப்பட்ட ராணுவ ஏற்பாடேயாகும். பொகாஸா தன்னுடைய கொடுங்கோலை தொடர்ந்து வந்ததோடு தனது ஆட்சி மூலம் நாட்டில் பிரஞ்சு ஆதிக்கத்தை காப்பதில் கவனம் செலுத்தினான். மேலும் தன்னை ஒரு அதிபராக 1976-ல் அறிவித்து கொண்டான்! இவன் பிரான்சுக்கு அடிபணிந்தான். மேலும் பிரான்ஸ் ஜனாதிபதி சார்லஸ் டி கா லிற்கு(Charles de Gaulle) போப் பட்டத்தை கொடுத்து தனது நாட்டை பிரான்ஸிற்கு மெத்தையாக ஆக்கினான்.நரமாமிசம் உண்பவன் என்றும் குழந்தைகளை கொலை செய்பவன் என்றும் பல வதந்திகள் பொகாஸாவை பற்றி கிளம்பின. இது சர்வதேச அளவில் எதிரான அபிப்பிராயத்தை அவனுக்கு உருவாக்கியது. பிரான்ஸ் அங்கு நிறுத்தியிருந்த தனது படைகளைக் கொண்டு தலையீடு செய்து அவனை பதவியிலிருந்து தூக்கி எறிந்து டேவிட் டேக்கோவை மறுபடியும் 1979ல் ஜனாதிபதியாக நியமித்தது. 1981ல் ராணுவத்திற்கு தலைமை தாங்கிய ஜெனரல் ஆன்ட்ரெ கொலிங்பா(Andre Kolingba) இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு(coup) மூலம் டேக்கோவை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிந்தான். 1990ல் சாட்டில்(chad) அமெரிக்கா ஆதரவாளரான ஹேபரை வெளியேற்றி அதனுடைய ஏஜண்டான இத்ரீஸ் டெபியை(Idriss Deby) ஆட்சியில் அமர்த்தியது. மத்திய ஆப்பிரிக்காவில் பிரான்ஸின் அதிகாரம் வளர்ந்து வந்தது. ஏனென்றால் சாட்(chad) ஒரு தூணைப்போல் மத்திய ஆப்பிரிக்காவில் பிரான்ஸின் ஆதிக்கத்திற்கு துணை புரிந்தது...அதே போல் பிரான்ஸும் தனக்கு மத்திய ஆப்பிரிக்காவில் பலமான ஆதிக்கம் இருப்பதை உணர்ந்து கொண்டது; அது ஜனநாயகத்தின் வர்ணத்தை கொண்டு ஆட்சியமைக்க நாடியது! அது அங்கு ராணுவத்தை ஆட்சியிலிருந்து அகற்றி தேர்தலை நடத்த முடிவெடுத்தது. 1993ல் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்று ஃபெலிக்ஸ் பட்டாஸே(Felix Pattase) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது, இவன் பிரான்ஸுடன் தொடர்புடையவன். மேலும் இவன் எதிரணியை தலைமை தாங்கி நடத்தி வந்தான். அமெரிக்காவின் குறிக்கோளான ஜனநாயகத்தை ஆப்பிரிக்காவில் ஏற்படுத்தி பழைய காலனியாதிக்கத்திற்கு முடிவு கட்டி அதை மாற்றியமைக்க இவன் பிரான்ஸினால் ஏவப்பட்டவன் ஆவான். பிரான்ஸ் எதிரணியினருடன் சேர்ந்து தேர்தலை நடத்தி அங்கு ஆட்சியமைத்தது.ரெவ் பிரான்கோய்ஸ் போஸிஸின்(Rev Francois Bozize) தலைமையில் முஸ்லிம்கள் உட்பட பூர்வீகக்குழுவினருடன் சேர்ந்து ஆட்சியமைத்தது. பட்டாஸே செய்த ஊழல்களை எதிரணியினர் வெறுத்தனர். அவன் எதிரணியினரை, குறிப்பாக முஸ்லிம்களை கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினான். இது எதிரணியினரை ஆயுத போராட்டம் செய்ய தூண்டியது. பிரான்ஸ், பட்டாஸேவை தூக்கி அவனுக்கு பதிலாக ரெவ் போஸிஸை(Rev Bozize) குடியரசின் ஜனாதிபதியாக 15/03/2013ல் நியமிக்கப் பார்த்தது. போஸிஸ்(Bozize) ஆட்சிக்கு வர முஸ்லிம்கள் உதவினர்...ஆனால் அவன் ஆட்சிக்கு வர உதவிய முஸ்லிம்கள் மற்றும் மற்ற எதிரணியிருக்கு தன் நன்றியைக் காட்ட தவறிவிட்டான். அவர்களைப் பற்றிய அக்கறையும் செலுத்த மறந்துவிட்டான்; மாறாக அவர்களை எதிரிகள் போல் அணுகினான்! அவன் தனக்கு பாதுகாவலர்களாக ஓய்வுபெற்ற பிரஞ்சு ஜெனரல் ஜான்-பியர் பியர்ஸ்(Jean-Pierre Pierce) தலைமையில் பிரஞ்சு பாதுகாப்பு நிறுவனத்தை ஏற்பாடு செய்தான். 2005 மற்றும் 2011ல் தேர்தல் நடத்தி இரண்டிலும் தான் வெற்றி பெற்றதாக அறிவித்தான். இச்சமயம் ஒரு புதிய எதிர்ப்பு கிளம்பியது, மேலும் செலிகா(Celica) என்ற [ஒரு கூட்டமைப்பு அல்லது ஜோடோடியா(Djaotodia) என்பவரின் தலைமையை கொண்ட பெரும் குழுவினரை சேர்த்து ஐந்து குழுவினருக்கிடையேயான ஒப்பந்தம், இதன் தலைவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்] போராட்ட குழு ஆரம்பமாகியது. போஸிஸ் இவ்வளவு தேர்தல் நாடகங்கள் அரங்கேற்றியும் நாட்டில் சூழ்நிலைகள் சரியாகவில்லை.அவனுடைய அட்டூழியம் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கவே செய்தது. எவ்வாறெனில் போஸிஸ் தனது படைகளை அனுப்பி முஸ்லிம்களின் உடைமைகளை தாக்க அனுப்பினான். இதன் விளைவாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் தற்காத்து கொள்ள போராடி தங்கள் இன்னுயிரை நீத்தனர்.

3. அதனைத் தொடர்ந்து 01/11/2013 அன்று கேபனின்(Gabon) தலைநகர் லிபர்வில்லில்(Libreville) ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ஜனாதிபதி போஸிஸும் செலிகா அமைப்பினரும் ஒரு நல்ல தீர்வு ஏற்பட கலந்து கொண்டனர்; இந்த கருத்தரங்கம் முஸ்லிம்கள் மத்திய ஆப்பிரிக்காவில் எந்த அளவிற்கு அநீதியை எதிர்கொண்டார்கள் என்பதை வெளிக்கொண்டு வந்தது; அங்கே அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் அவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்; அவை சாதாரண கோரிக்கைகளாக இருந்தன: அதாவது மற்ற மதங்களை போல் இஸ்லாத்தையும் அங்கீகரிக்க வேண்டும்; ஈதுல்-ஃபித்ர் மற்றும் ஈதுல்-அள்ஹாவிற்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்; முஸ்லிம்களை கொடுமை செய்யக்கூடாது. ஆனால் போஸிஸ் இதை தந்திரமாக கையாண்டு முஸ்லிம்கள் மற்றும் செலிகாவின் சில கோரிக்கைகளை ஏற்றது போல் நடித்ததால் பிரான்ஸின் ஏஜன்டான இவன் 2016 வரை இருக்குமாறு தன்னுடைய பதவியை தக்க வைத்து கொண்டான். இருப்பினும் இந்த அளவு படுகொலைகள் செய்த போதிலும் இந்த ஒப்பந்தம் மூலம் போஸிஸ் தொடர்ந்து ஆட்சி புரிய அமெரிக்கா அங்கீகரித்து என பிரஞ்சு செயதி நிறுவனம் வெளியிட்டது ... இவை அனைத்தையும் மீறி பிரான்ஸும் போஸிஸும் அடிப்படை உரிமைகளை தடுத்தே வைத்திருந்தன. அவர்களுக்கு எதிராக திரும்பி முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளை தொடர்ந்து செய்து வந்தனர். இது செலிகாவை, மிசெல் ஜொடோடியாவின் தலைமையில் அரண்மனை நோக்கி முன்னேற செய்து 24/03/2014 அன்று அதை கைப்பற்ற செய்தது; பின்னர் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இதனால் பிரான்ஸ் ஆத்திரமுற்றது...ஏனென்றால் ஜொடோடியா முஸ்லிம் பின்னணியை கொண்டவர். அவர் நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை அறிவித்த நாளிலிருந்து மேற்கை சாந்தப்படுத்த தன் குறிப்புரைகளில் "மத்திய ஆப்ரிக்க குடியரசு ஒரு மதச்சார்பற்ற நாடு எனவும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒரு மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கின்றனர். நான் முஸ்லிம் என்பது உண்மை; ஆனாலும் என்னுடைய நாட்டிற்காகவும் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மக்களுக்காகவும் உழைப்பதும் எனது கடமையாகும்" (The Gulf, 31/03/2013).என்று கூறியிருந்தார். இது மேற்கையும் குறிப்பாக பிரான்ஸையும், கிறிஸ்தவர்களையும் சாந்தப்படுத்த கூறிய வார்த்தைகளாகும். அதனால் அவர் கிறிஸ்தவ படைகளை தடைப்படுத்தவில்லை. மேலும் அவர்களை செயல்பட அனுமதித்தார். ஆனால் பிரான்ஸ் புதிய ஜனாதிபதியையும், அவர்களுடைய ஏஜன்டுகளையும் அங்கீகரிக்கவில்லை. அவர் முஸ்லிம் பின்னணியை கொண்டிருப்பதால் பிரான்ஸ் அவருக்கு எதிராக பலமாக வேலை செய்ய துவங்கியது. பிரான்ஸ் சாட்டின்(chad) தலைநகர் ட்ஜமொனா(N'Jamena)வில் மத்திய ஆப்ரிக்க தலைவர்களை ஒன்றுகூட்டி 03/04/2013 அன்று ஒரு கருத்தரங்கை நடத்தியது. பிரான்ஸின் முக்கிய ஏஜன்டான இத்ரீஸ் டெபி பேசும் போது கூறியதாவது:- "தன்னைத்தானே நியமித்து கொண்டவரை அங்கீகரிப்பது சாத்தியமற்றதாக தெரிகிறது". (Al-Wasat 05/04/2013) இது மிச்செல் ஆன்டோ ஜொடோடியாவை நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததை 13/04/2013 அன்று ஆட்சிமாற்ற குழு அறிவித்ததையும் மீறி நடந்த செயலாகும். இவர் முஸ்லிமாக இருந்த காரணத்தால் இது அவருக்கு உதவவில்லை. இந்நாட்டின் யுரேனியம், தங்கம், வைரம் போன்றவற்றை சுரண்டிய போதிலும் பிரான்ஸ் இவ்வரசாங்கத்திற்கு உதவித்தொகை அளிப்பதை நிறுத்தி கொண்டது, அதோடு மட்டுமல்லாமல் அது மத்திய ஆப்பிரிக்க அரசாங்களுக்கு உதவி புரிவதை போல் நடித்து கொண்டிருக்கிறது.இங்கிருக்கும் சொத்துக்கள் அனைத்தும் தன்னுடையதென எண்ணி, நினைக்கும் நேரத்தில் உதவி புரிவதை நிறுத்தி கொள்கிறது!

4. பிரான்ஸ் அங்கு தான் தலையிடுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த தயாராகி கொண்டிருந்தது. மேலும் பிரச்சினைகள் உருவானதே தன் தலையீட்டிற்கான காரணம் என நியாயப்படுத்தும் நோக்கம் கொண்டிருந்தது. அது 05/12/2013 அன்று மத்திய ஆப்ரிக்கா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் வெற்றி கண்டது; 08/12/2013 அன்று தலையீடு ஆரம்பித்தது. பிரஞ்சு ஜனாதிபதி ஃபிராங்கொய்ஸ் ஹொலன்ட்(Francois Hollande) மிச்செல் ஆன்டோ ஜொடோடியாவை(Michel Andorra Djotodia) ராஜினாமா செய்து விரைவில் தேர்தல் நடத்த வேண்டினார். அதனையடுத்து சாட்டி(chad) தலைநகர் ஜமெனா(N'Djamena)வில் பிராந்திய ஆப்பிரிக்க மாநாட்டை 10/01/2014 அன்று ஜெடோடியாவை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுப்பதற்காக நடத்தியது. அந்த மாநாட்டில் அவர் அதனை அறிவித்தார். தலைநகர் பெங்குய்யின் மேயரான சாம்பா பான்ஸாவை(Samba Panza) தற்காலிக அதிபராக தேர்ந்தெடுத்ததை 20/01/2014 அன்று அறிவித்தார். இதனையடுத்து கிறிஸ்தவ படைகளின் அட்டூழியங்கள் பிரஞ்சு படையின் மேற்பார்வையில் அரங்கேறியது. இது பாதுகாப்பை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரில் 7000 செலிகா வீரர்களை நிராயுதபாணியாக்கியது. ஆனால் கிறிஸ்தவ போராளிகளை குறிப்பாக ஆன்டி பாலகா(Anti Balaka)போன்றோரை நிராயுதபாணியாக ஆக்கவில்லை; மாறாக அவர்களை ஆதரித்தது! அதிபர் ஜொடோடியாவை வெளியேற்றிய பின்னர் இக்காட்டுமிராண்டிகள் மிகவும் கொடூரமான செயல்களை செய்தார்கள். முஸ்லிம்களை கொன்றும், எரித்தும், அவர்களுடைய மாமிசத்தை உண்டும், அவர்களுடைய வீடுகள், மஸ்ஜிதுகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் நிறுவனங்களை சூறையாடி அவர்களுடைய சொத்துக்களை பிரஞ்சு. மற்றும் ஆப்பிரிக்க படையினரின் கண்ணெதிரிலேயே சூறையாடினர். அதே சமயம் தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதங்களை அவர்களுக்கு கிடைக்க செய்யாமல் நிராயுதபாணியாக பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக கிறிஸ்தவ போராளிகளை பிரான்ஸ் ஆதரிப்பதாக ஐ.நா குற்றம் சாட்டியது. இந்த கொடூர குற்றங்களை அங்கீகரித்த அதிபர் கூறுகையில் "ஆன்டி பலாக்கா தங்களுடைய குறிக்கோளின் அர்த்தத்தை இழந்து விட்டனர், இன்று அவர்கள் கொலை செய்பவர்களாக மாறி விட்டனர். "நான் பெண்ணாக இருப்பதன் காரணத்தால் பலவீனமாக இருப்பதாக நினைக்கிறார்கள்;, ஆனால் ஆன்டி பலாக்கா அமைப்பை சார்ந்தவர்கள் எவராவது கொலை செய்ய நாடினால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப் படுவார்கள்."(BBC 12/02/2014) BBC இதையும் சேர்த்தது: "ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி காமரூன் மற்றும் சாட்(Chad)டிற்கு சென்றார்கள்; சிலர் நாட்டிற்குள் கூடாரங்கள் அமைத்து தங்கும் நிலைக்கு ஆளானார்கள். Amnesty International கூறியது போன்று ராணுவ தாக்குதல்களே முஸ்லிம்களை வரலாறு காணாத அளவில் கூட்டம் கூட்டமாக வெளியேற செய்தது.. இது இன அழிப்பை தவிர வேறெதுவும் இல்லை என்றும் கூறியது. அவ்வாறிருப்பினும் அதிபர் இக்கூற்றை மறுத்தார். மாறாக "நாட்டில் நடைபெற்று கொண்டிருப்பது பாதுகாப்பு பிரச்சினையே" என கோரினார்!

5. பிரஞ்சு மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசுகளின் படுகொலைகளை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள அமெரிக்கா முயன்றது. அதன் காரணமாக மத்திய ஆப்பிரிக்க குடியரசு(CAR)ல் ஆப்பிரிக்க படைகளை பிரஞ்சு படைகளுக்கு நிகராக வலுவடைய செய்யும் வேலையை செய்தது. இதன் மூலம் பிரான்ஸின் தனித்துவத்தை நீக்குவதற்கு காரணமாக அமையும். இதனால் அமெரிக்கா பிரான்ஸின் நிலையை மாற்ற அல்லது அதனுடன் கூட்டு சேருவதற்கு விரும்பியதோடு, போக்கிரி கிறித்தவ போராளிகளுடன் மக்கள் கைகோர்த்து நிற்பதை குற்றம் சாட்டினார்கள்; மேலும் அவர்கள் பிரஞ்சு துருப்புகளுக்கு பதிலாக ஆப்பிரிக்க துருப்புகளை அதிகமாக்கும் கோரிக்கைகளை எழுப்பினார்கள். இதற்கு அமெரிக்காவின் சீரிய உந்துதல் மூலம் அமெரிக்க தரப்பிலிருந்தும் ஐ.நா. சபை தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகள் உதவியாக இருந்தது... ஆப்பிரிக்க விவகாரங்களின் U.S Senate Foreign Relations Subcommittee-ன் தலைவர் கிறிஸ்டோபர் கூன், கூறியதாவது:- "ஆப்பிரிக்க காரிய துணை கமிட்டி ஆப்பிரிக்க கூட்டமைப்பு(AU) படைகளுக்கு பாதுகாப்பை மேம்படுத்தவும் வன்முறையை நிறுத்த தேவையான தகுதியை மேம்படுத்தவும் பன்முக முயற்சிக்கு அமெரிக்கா மேலும் எவ்விதமான ஆதரவை தரலாம் என்பதை தீர்மானிக்க ஆலோசனை கூட்டம் கூட்டியது".(IIP Digital, U.S. Department of State site 23/12/2013) அமெரிக்காவின் ஐ.நா. சபைக்கான நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் ஆப்பிரிக்க காரியத்திற்கு துணை செயலாளரான லிண்டா தாமஸ் -க்ரீன்ஃபீல்டு நிலைமாற்று அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடலுக்காக 19/12/2013 அன்று பெங்குய் வந்தனர். ஆப்பிரிக்க கூட்டமைப்பு நோக்கமான CAR MISCAவின் பலமான நிலையான ஆணை என்பது ஆயுதம் ஏந்தி போராடும் குழுக்களை எதிர்க்கவும் அவர்களை நிராயுதபாணியாக்குவதற்கும் மிகவும் தேவையானதாக இருக்கிறது என தாமஸ்-க்ரீன்ஃபீல்ட் கூறினார். இதற்கு மாற்றமாக பிரான்ஸ் 4400 சிப்பாய்களையும் அதனுடன் சேர்க்கவிருக்கும் ருவாண்டா துருப்பின் 850 வீரர்களை கொண்ட ஆப்பிரிக்க படைகளையும் எதிர் கொள்ள ஐரோப்பிய நாடுகளின் சர்வதேச படைகளை கொண்டு வலுவடைய செய்யும் காரியங்களை செய்தது. இதன் காரணமாக "14/02/2014 அன்று பிரஞ்சு அதிபர் தனது படையின் பலத்தை அதிகரிக்க மேலும் 400 வீர்ர்களை அனுப்பி CAR-ல் தனது படையின் எண்ணிக்கையை 2000 -மாக அதிகரிக்க முடிவு செய்தார். பிரஞ்சு ஜனாதிபதியின் கூற்றுப்படி: இந்த 400 வீரர்களை கொண்டு அதிகரிக்கும் முயற்சியானது பிரான்ஸின் விரைவில் அனுப்பப்படும் பிரஞ்சு படையினரையும் சேர்ந்ததாகும். இது ஏற்கனவே செய்யப்பட்ட EU mission-ன் திட்டத்தில் அடங்கும். பிரான்ஸ் EUவை EUFOR படையினரை ஐரோப்பாவின் கலந்தடங்கிய காவல்துறையினரை(gendermarie) அனுப்ப கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதிகாரப்பூர்வ தகவலின்படி ஐரோப்பிய கூட்டமைப்பின் பங்கேற்பு எதிர்பார்த்த 500 வீர்ர்களை விட அதிகமாகி 900 வீர்ர்களை தொடும்."(AFP 14/02/2014) அமெரிக்கா ஆப்பிரிக்க படைகளுக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்தது. அமெரிக்க அரசுத்துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ஃப்(Mary Harff) கீழ்வருமாறு கூறினார்:-
" மத்திய ஆப்பிரிக்க குடியரசில் நிலவும் வன்முறை மோசமடைந்து வருவது குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம், இது மனித மேம்பாடு குறித்த பிரச்சினைகளை அதிகமாக்கும்.மேலும் பெரும் அட்டூழியங்கள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. நேற்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானமான MISCAவிற்கும், MISCA விற்கு ஆதரவாக பிரஞ்சு படைகளுக்கும் ஆதரவாக வாக்களித்தோம். இந்த தீர்மானமான MISCA வின் Chapter VII க்கு நீண்ட நாட்களாக துன்புறும் மக்களுக்கு பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநாட்ட அதிகாரம் வழங்கியது. நாங்கள் MISCA விற்கு உபகரணங்கள், பயிற்சி மற்றும் தளவாடங்களுக்காக 40 மில்லியன் டாலர்கள் வழங்கி இந்த ஆணையை நிறைவேற்ற அதன் திறனை மேம்படுத்த எண்ணம் கொண்டுள்ளோம். மேலும் நாங்கள் ஆப்பிரிக்க ஐக்கிய கூட்டணிகள் மற்றும் பிரஞ்சு கூட்டாளிகளுக்கு தேவை ஏற்படும் நேரத்தில் உதவ ஆயத்தமாக உள்ளோம்."(IIP Digital, site of the U.S. Department of State 06/12/2013).
இந்த படைகளின் நடவடிக்கைகள் நமக்கு தெளிவாக உண்ர்த்துவது யாதெனில், அமெரிக்காவின் செல்வாக்குடைய ஆப்பிரிக்க நாடுகளானாலும், அல்லது பிரான்ஸ் மீது விசுவாசம் கொண்டுள்ள ஐரோப்பிய படைகளாயினும், இவ்விரு தரப்பும் கொண்டுள்ள 8000 வீரர்களின் செயல்கள் அவர்கள் அங்கு ஆப்பிரிக்க குடியரசின் பாதுகாப்பிற்காக இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களையும, கொடுமையான படுகொலைகளையும் தடுக்க எதையும் செய்யவில்லை. அவர்கள் இதைப்பற்றிய அக்கறை கொண்டிருந்தார்களேயானால் இந்த சிறிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் எளிதாக அதை செய்திருக்கக்கூடும்....இது தன்னுடைய ஆதிக்கத்தை திணிக்கவும் அதை செயல் படுத்துவதற்கான பிரஞ்சு மற்றும் அமெரிக்க ஆதிக்கத்திற்குமான போட்டியே ஆகும்...இவ்வகையில் தான் முஸ்லிம்களின் உதிரம் சிந்தப்படுகிறது; அவர்களின் சதைகள் கிழிக்கப்படுகிறது .. பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா தங்கள் கால்களால் முஸ்லிம்களின் உரிமத்தின் மீது நாட்டியமாடும் ஓரு மல்யுத்த களமாக அதை ஆக்கிவிட்டனர்.

6. ஆகவே அமெரிக்கா தன்னுடைய காரியத்தை வலுவாக்க, மத்திய ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்க படையை வலுப்படுத்தி தன் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் காரியத்தை செய்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க கொள்கைக்கு ஏற்றவாறு ஊழியம் செய்து வரும் ஐ.நா சபையின் பொது செயலாளர் பான் கி மூன் பாதுகாப்பு கவுன்சிலிடம் "பொது ஜனங்களுக்கு பாதுகாப்பு அளித்து காப்பதற்கு உடனடியாக 3,000 கூடுதல் வீரர்கள் மற்றும் காவலாளிகளை அனுப்ப வேண்டினார்."(AFP 20/02/2014), இந்த கூடுதல் படையினர் ஆப்பிரிக்க படைகளை சார்ந்தவர்களாக இருப்பது தெரிந்த விஷயமே... மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பிரான்ஸுடன் தனது ஆதிக்கத்தை பகிர்ந்து கொள்ள முஸ்லிம்களின் உதிரத்தை உறிஞ்சி ஓர் அரசியல் நிகழ்வை தடுத்து நிறுத்த அமெரிக்கா நாடுவதாக தெரிகின்றது! பிரான்ஸும் தான் முழுவதையும் இழந்து விடாமல் இருக்க அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இத்தருணம் முன்பிருந்த தருணங்களை காட்டிலும் மிகவும் ஆபத்தானதாகும்.அதன் பிறகு அவர்கள் தங்களுடைய ஏஜன்டுகளை அதிகாரத்திற்கு தேர்தல் மூலம் கொண்டு வரும் காரியத்தில் இறங்குவார்கள்.

7. முடிவுரையாக:- முஸ்லிம்களின் உதிரம் அமெரிக்காவிற்கும் பிரான்சுக்கும் இடையே நடைபெறும் செல்வாக்கிற்கான போராட்ட களமாக மாறிவிட்டது...அவர்கள் முஸ்லிம்களின் உதிரம் ஆறாக ஓடுவதை பற்றி கவலையும் அக்கறையும் கொள்ளவில்லை. மேலும் முதியோர், குழந்தைகள்,பெண்கள் போன்றோர் சித்திரவதைகள் செய்யப்பட்டு அவர்களை உயிரோடு சாப்பிடப்படுவதை பற்றியும் கவலை கொள்ளவில்லை...மாறாக இந்த காலனித்துவ குஃப்ஃபார்களுக்கு முக்கியமாக இருப்பது என்னவெனில் இறுதியாக யார் நிலைத்து நின்று முஸ்லிம்களை கொலை செய்து அவர்களின் பிணங்கள் மீது யார் ஏறி நின்று கொண்டாடுவது என்பதேயாகும். இக்காலனித்துவ குஃப்ஃபார்கள் அனைவரும் ஒரே வகையை சார்ந்தவர்கள், அவர்கள் முஸ்லிம்களிடையே எவ்வொரு சகோதரத்துவத்தையும் அவர்களை பாதுகாப்பதற்கான எண்ணத்தையும் கொண்டிருக்க மாட்டார்கள்...ஆகையால், இவ்விரு தரப்பினரும் முஸ்லிம்களை கொலை செய்வதை குறியாக கொண்டுள்ளனர். அவர்களின் வியூகமும் நோக்கமும் வெவ்வேறாக இருப்பினும், அவர்கள் கிறிஸ்தவ ராணுவத்திற்கு, சுதந்திரமாக ஆட்டம் போட்டு, தோன்றியவாறு முஸ்லிம்களின் உதிரத்தை குடிக்க வைத்து விட்டனர்...

ஆனால் மிகவும் வேதனைக்கும் வருத்தத்திற்குமான விஷயம் என்னவெனில், முஸ்லிம்களுக்காக அழுவதற்கு யாருமில்லை! அவர்களுடைய உதிரம் உக்கிரமான முறையில் பாலஸ்தீனம், பர்மா, காஷ்மீர், செச்சினியா, டார்டார்ஸ்தான், சிரியா, மத்திய ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் சிந்தப்படுகிறது. மேலும் இப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள், முஸ்லிம்களின் நலனுக்காக அல்லாமல் மேற்கின் நலனுக்காக சேவை செய்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் அங்கு நடத்தப்படும் படுகொலைகளை தங்கள் நாடுகளில் அல்லாமல் வெகு தூரத்திலோ அல்லது வேறு உலகிலோ நடப்பதை போன்று எண்ணியுள்ளனர்.ஆனால் இவையனைத்தும், அவர்களுடைய நாடுகளில், சில நேரங்களில் இக்கொடூரங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைக்கு மிக அருகாமையில் நடந்து கொண்டிருக்கும். இருந்தும் அவர்கள் எதையும் செய்யாமல் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இன்று முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்கும் கேடயத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் கலீஃபாவை,தங்களைக் காக்கும் கேடயத்தை, அவர்களை பாதுகாப்பவரை இழந்து தொன்னூறு ஆண்டுகள் கடந்து விட்டது.
 
 அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:-

«وَإِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ»

"நிச்சயமாக இமாம் ஒரு கேடயமாவார். அவரின் பின்னால் இருந்து போர் புரிவார்கள். அவரைக்கொண்டு பாதுகாக்கப்படுவார்கள் ". (அபு ஹுரைரா(ரலி), புகாரி)

وَيَقُولُونَ مَتَى هُوَ قُلْ عَسَى أَن يَكُونَ قَرِيبًا

அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக! (அல் இஸ்ரா 17:51)
 
 
sources Sindhanai.org

No comments:

Post a Comment