Mar 17, 2014

சினாய் வளைகுடாவில் எகிப்திய இராணுவம் வேட்டையை ஆரம்பித்துள்ளது....



உலகம் உக்ரேய்னின் பக்கம் தன் பார்வையை செலுத்தும் கணப்பொழுதுகளில் எகிப்திய ஜுன்டா இராணுவம் சினாயில் தன் நர வேட்டையை ஆரம்பித்துள்ளது. அப்பாச்சி தாக்குதல் உலங்குவானூர்திகள், ட்ரோன் ஏவுகணை வீச்சு விமானங்கள் போன்ற அமெரிக்க போரியல் தளபாடங்களின் உதவியுடன் எகிப்திய இஸ்லாமிய எதிர்ப்பு இராணுவம் தனது சினாய் வளைகுடா மீதான நீண்ட நாள் காத்திருந்த தாக்குதலினை ஆரம்பித்துள்ளது. சினாயில் இஸ்லாமிய அடிப்படைகளை விரும்பும் முஸ்லிம்களை வெளியேற்றும் ஒரு நடவடிக்கையாகவே இதன் தாக்குதல் வியூகங்கள் அமைந்திருக்கின்றன. சினாயில் இருந்து இஸ்லாமிய வாழ்வியலை இலக்காக கொண்ட முஸ்லிம் சமூகத்தை சுத்திகரித்தல் என்ற இந்த தாக்குதலின் பின்னால் சியோனிஸம் மிக நெருக்கமாக செயற்பட்டு வருகிறது.

சினாயை தளமாக கொண்டு செயற்படும் போராளி அமைப்பான Mujahideen Jamat Ansharu Baitil Maqdis அண்மையில் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளது. 19 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் எகிப்திய இராணுவத்தின் வன்கொடுமைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஹெலிகாப்டர்களும், டாங்கிகளும் நடாத்தும் ஷெல் தாக்குதல்களினால் அழியும் வீடுகள், கட்டிடங்கள், மசூதிகள், பெண்கள், குழந்தைகள் என பல கோணங்களில் அது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவ நலன்களை பாதுகாப்பதற்கான ஒரு தாக்குதல் முயற்ச்சியாகவே சினாய் மீதான எகிப்திய இராணுவ தாக்குதல்கள் அமைந்துள்ளன. Rafah மற்றும் Sheikh Zuwaid ஆகிய பிரதேசங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல்களை எகிப்திய படைகள் தொடராக நிகழ்த்தி வருகின்றன. பெரிய யுத்தம் நடப்பது போன்று பல வெடிப்புக்களை பரவலாக நடாத்துவதன் ஊடாக சினாய் முஸ்லிம்கள் அச்சத்தினால் அவ்விடங்களை விட்டும் இயல்பாகவே வெளியேற வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

வீடுகளை, பாடசாலைகளை, மஸ்ஜித்களை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தி அவற்றை பற்றி எரிய வைக்கிறது எகிப்திய இராணுவம். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றவர்களை குறிபார்த்து சுடுகிறது எகிப்திய இராணுவம். பல குழுப்படுகொலைகளை இராணுவம் பல இடங்களிலும் புரிந்து வருகிறது. சினாயின் இளைஞர்களை கைது செய்து இராணுவ முகாம்களில் வைத்து சித்திரவதை செய்வதும் பின்னர் அவர்களை அல்-காயிதாவின் சினாய் பிரிவினர் என்ற பெயரில் கொலை செய்வதும் இப்போது அதிகரித்து வருகிறது. சினாய் முஸ்லிம்களின் சனத்தொகையை அவர்களின் வெளியேற்றம் ஊடாக குறைத்து இஸ்ரேலிய எல்லையை யுத்த சூனிய பிரதேசமாக மாற்றப்பார்க்கிறது அது. இந்த இராணுவ அராஜகத்தையும், மனித உரிமை மீறல்களையும் உலக ஊடகங்கள் பேச மறுக்கின்றன.

சினாயின் ஊடாக எல்லை கடக்கும் மொஸாட் ஏஜென்ட்கள் எகிப்தினுள் சுதந்திரமாகவே செயற்பட்டு வருகின்றனர். பல படுகொலைகள் அவர்கள் கரங்களால் செய்யப்படுகின்றன. பின்னர் அவை அல்-காயிதா பயங்கரவாதிகளினாலும் இஹ்வானிய பயங்கரவாதிகளினாலும் செய்யப்பட்டதாக யூத ஊடகங்கள் ஊடாக சித்தரிக்கப்படுகின்றன. சினாயில் மட்டுமல்ல இந்த நிகழ்வு, சில நாட்களின் முன்னர் காஸாவில் இஸ்ரேல் மீது நடாத்தப்பட்டதாக சொல்லப்படும் தாக்குதல்கள் கூட இஸ்லாமிக் ஜிஹாத் செய்ததாக டெல்-அவிவின் ஊடகங்களால் சொல்லப்பட்டன. தென் இஸ்ரேலில் வந்து வீழ்ந்த ஷெல்களின் புகை மண்டலம் அடங்கும் முன்னதாகவே யூத வானொலி இது காஸாவை தளம் கொண்டியங்கும் இஸ்லாமிக் ஜிஹாத்தின் கைங்கரியம் என அலறியது பல கேள்விகளை எழுப்புகிறது.

இன்று உலக ஊடகங்களினால் வெளியிடப்படும் தகவல்களின் அடிப்படைகளை வைத்து முஸ்லிம் உம்மா எந்தவொரு முடிவிற்கும் வரலாகாது. அந்த செய்திகளில் சில பொது தன்மைகள் உண்மையாக இருந்த போதும் அதன் பின்புலங்கள் பற்றிய பொய்மைகளை இந்த ஊடகங்களை வைத்து அனுமானிக்க முடியாது. முஸ்லிம் உம்மாவிற்கு சரியான தகவல்களை ஒரு கிலாபாவினாலேயே வழங்க முடியும். அது வரை மிக அவதானமாக நிலைமைகளை அனுகுதல் என்பது தவிர்க்க முடியாததாகும்.








No comments:

Post a Comment