ஒரு பெண்ணின் மனதை தொட்டு .....


ஒரு ஹவ்வா (அலை ) யின் புத்திரி பேசுகிறாள்

கிடைக்கும் இடைவெளியில் புகுந்து என் அங்கத்தை அனுமதியின்றி அளவிட்டு , அற்ப சுகம் காணும் ஆணிய அசிங்கப் பிறவிகளுக்கு மத்தியில் நானும் ஒரு மனிதப் பிறவியாக வளம் வரும்போது வெட்கித்துப் போகிறேன் .

பெண் விடுதலை ,சுதந்திரம் என்ற சுயநல கோஷங்களுக்கு மத்தியில் ,ஒரு கௌரவப் பண்டமாகவா நான் பார்க்கப் படுகிறேன் !? இது தெளிவான ஏமாற்று .சமத்துவம் என்ற ஆசை காட்டி சல்லாபிக்கும் சந்தர்ப்பங்களை தேடி அலையும் இந்த சீர்கெட்ட நாகரீகத்தை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது.

தன் தாயை , தங்கையை , மகளை பார்க்கத் துணியாத பாத்திரத்தில் மாற்றான் தாயை ,தங்கையை , மகளை பார்க்கத் துணியும் ஆணிய ஜந்துக்கள் முதலில் தனது சொந்த இரத்தங்களை துகில் உரித்து சுவைத்துப் பார்க்கட்டும். அதுதான் விலங்குப் பண்பு .அதையும் செய்வார்கள் இந்த அசிங்கப் பிறவிகள் என்பதுதான் காலத்தின் கோலம் !இந்த வெறிபிடித்த கலாச்சாரத்தை எதிர்கொள்வது பெண் இனத்துக்கு ஒரு ஓயாத போராட்டமே!

கற்பழிப்பு என்ற சொல்லை வன் புணர்வாக எழுதி ,பெண் விடுதலைக்கு அச்சாணி நாம் என மார் தட்டிய பத்திரிகைகள் நடுப்பக்கத்தில் commercial ஆக இந்த காமப் பேய்களுக்கு மாமா வேலை செய்யும் பச்சோந்தி தனத்தை என்னவென்று சொல்வது . இந்த இரட்டை வேடம் அழிக்கப் பட வேண்டும்.

விளம்பர உலகில் விட்டில் பூச்சிகளாக எம் பெண்ணிய மாண்பு மரணித்துப் போவது ஒரு சராசரி நிகழ்வு. அதில் பெண் விடுதலை காண்பது அதி முட்டாள் தனம் .கோடிகளாக பணம் பண்ணும் கேடிகளின் சில்லறைக்காக பெண்களான நாமும் காட்சி விபச்சாரத்தில் பங்காளி ஆவதா!? இந்த முதலாளித்துவம் மூக்குடைக்கப் பட வேண்டும்.

உணவின்றி ,உடையின்றி,வீடின்றி வாடி வதங்கி வீதியில் நிற்கும் ஆபிரிக்க சிறுமியின் அந்தப் பகுதியை பார்த்து எச்சில் வடிக்கும் தரம் கெட்ட கலாச்சாரம் அழிக்கப்பட வேண்டும் . அதற்கு பெண்களாகிய நாம் தெளிவோடு துணிய வேண்டும் . தாய்க்கும் தாரத்துக்கும் இடையிலான ஒற்றுமையும் வேற்றுமையும் ஆண்கள் உலகத்துக்கு புரியப்படுதப் படவேண்டும் இது காலத்தின் தேவை .எப்படி?

இவள்
அசிங்க முற்றுகையில் அகப்பட்டுள்ள
ஹவ்வா (அலை ) அவர்களின் புத்திரி

No comments:

Post a Comment