சிரியாவின் இஸ்லாமிய கூட்டணி கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்

கடந்த மாதம் சிரியாவில் போராடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய குழுக்களிடமிருந்து சில முக்கிய அறிவிப்புகள் மிகுதியாக வந்தவண்ணம் இருந்தன.அலேப்போ நகரில் ஜபத் அந்நுஸ்ரா,அஹ்ரார், அஷ்ஷாம், லிவா-அத்-தௌஹீத் போன்ற முக்கியமான போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து மேற்கத்திய ஆதரவு பெற்ற எதிர்க்கட்சிகளை புறக்கணித்துவிட்டு ஓர் இஸ்லாமிய கூட்டணியை உருவாக்கி இருக்கின்றனர்.அமெரிக்கா ‘மிதவாத’ குழுக்களுக்கு ஆயுத உதவிகள் செய்வது அதிகரித்திருக்கும் சமயத்தில்தான் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.மேலும் சில நாட்களுக்குள்ளாகவே லிவா அல் இஸ்லாம் பிரிவின் முன்னால் ராணுவத் தளபதி முஹம்மத் ஸஹ்ரான் அள்ளூஷ் அவர்களின் தலைமையின் கீழ் ‘ஜெய்ஷ் அல் இஸ்லாம்’ என்ற பதாகையில் நாற்பத்து மூன்று குழுக்கள் ஒன்றிணைந்த செய்தி டமாஸ்கஸிலிருந்து வந்தது.கடந்த முப்பது மாதங்களாக நடக்கும் சிரிய புரட்சியில் மேற்கத்திய உலகம் மதச்சார்பற்ற மாற்று அணியை உருவாக்க குறிப்பிடத்தக்க காலத்தையும் பணத்தையும்  செலவிட்டுள்ளது.ஆனாலும் இதையும் மீறி இஸ்லாமிய சிந்தனை அடிப்படையில் இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இக்கூட்டணி இஸ்லாமிய கூட்டணியாக கருதப்படவேண்டுமானால் அது இஸ்லாத்தின் அடிப்படையிலான உம்மத்தின் (சர்வதேச முஸ்லிம் சமூகம்) ஒற்றுமையை நோக்கி அழைக்ககூடியதாகவும் தற்போதுள்ள அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும் அத்தனை செயலாக்க அமைப்புகளும்(systems) இஸ்லாமாக மட்டுமே இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.எந்தவொரு அரசியல் சார்ந்த கூட்டணியும் இஸ்லாமிய கூட்டணியாக கருதப்படவேண்டும் என்றால்,அது சில அடிப்படை விஷயங்களை கொண்டிருக்கவேண்டும்.
 
 
 அவையாவன:-
 
 
* இஸ்லாமிய அரசியலமைப்பு சட்டம் சமூகம் மற்றும் அரசுக்கிடையிலான உறவுகளையும் அரசை கேள்வி கேட்கும் வரையறைகளையும் தெளிவாக இஸ்லாமிய ஆதார மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட ஓர்  அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று அமல்படுத்த(adoption)வேண்டும்.இந்த இஸ்லாமிய குழுக்கள் அரபு தேசியவாதம் என்ற வெற்று கோட்பாட்டின் அடிப்படையை தகர்த்து இஸ்லாமிய அகீதாவின் அடிப்படையில் சிரியாவை கட்டமைக்க வேண்டும்.
*குர்ஆனும் சுன்னாவும் இஸ்லாமிய ஆதார மூலங்களாக விளங்குவதால் இந்த மூல ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புது அரசியலமைப்பு சட்டத்தை வரைய வேண்டும்.அது பொருளாதாரம், சமூக அமைப்பு,கேள்வி கேட்டல்(accountability) மற்றும் நீதித்துறை குறித்த இஸ்லாமிய பார்வையையும் சட்டதிட்டங்களையும் தெளிவாக விளக்க வேண்டும்.மேலும் அதை மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் அரசையும், சமூகத்தையும், தனிநபரையும் கட்டுப்படுத்தக்கூடிய சட்டங்களை அறிந்து கொள்வான்.இது மக்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும், மக்கள் தங்களது தனிநபர், அரசியல் மற்றும் ஆன்மீக இலட்சியங்களை அடைவதற்கான வழிமுறை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி ஒரு சீறிய சமூகத்தை உருவாக்க வழிவகை செய்யும். மேலும் இது மக்கள் நடைமுறையில் இஸ்லாம் என்றால் என்னவென்று அறிந்துகொள்ள வழிவகுக்கும்.
 
 *தற்கால சிரிய அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியா எப்படி இருக்க வேண்டுமென்று போராளிக் குழுக்கள்தான் தீர்மானிக்கப் போகின்றன.ஆகவே இந்த இஸ்லாமிய போராளிக் குழுக்களின் கூட்டணி கீழ்க்கண்ட இஸ்லாமிய நிலைகளை எடுக்கவேண்டும்.
 
*சிரியா மற்றும் ஒட்டுமொத்த உம்மத்துடைய எதிர்காலம் என்பது, முஸ்லிம் உலகிற்குள் அமெரிக்காவின் தலையீட்டை ஒழிப்பதில்தான் இருக்கிறது. இஸ்லாமிய கூட்டணியின் முக்கியமான செயல் திட்டமாக இந்த விஷயம் இருக்க வேண்டும்.இல்லாவிடில் சிரியாவின் தற்போதைய அரசை வீழ்த்துவது வீணில் முடிந்துவிடும்.இதை சாதிப்பதற்கு முஸ்லிம் உலகில் தலையிடுவதற்கு அமெரிக்கா பயன்படுத்தும் சாதனங்களான பொம்மை ஆட்சியாளர்கள்,பொருளாதார உதவி, உள்கட்டமைப்புகளான முதலீடு மற்றும் இராணுவரீதியான வணிகம் போன்றவற்றை  முற்றாக ஒழிப்பதோடு அவற்றை  எக்காரணத்தை கொண்டும் இஸ்லாமிய சமூகத்திற்குள் அனுமதிக்கப்படக்கூடாது.
 
*பஷாருல் அஸாத் அரசை சேர்ந்த கோஷ்டிகள் உம்மத்திற்கெதிராக இழைத்த குற்றங்களுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். அவர்களின் கரங்களால் நசுக்கப்பட்டு வாழ்விழந்த இலட்சக்கணக்கானோருக்கு நீதி வழங்கப்படவேண்டும்.மேற்கத்திய அரசுகளின் கைப்பாவையான சிரிய தேசிய கூட்டமைப்பை ( Syrian National Council ) சிரியாவுக்கு திரும்ப அனுமதிக்கப்படகூடாது.மேலும் அவர்களது புதிய சிரியாவுக்கான விசுவாசம்(loyalty) என்பதை நம்பவும் கூடாது.
*கொள்கைசார் (policy) விஷயங்களில், அச்சமூட்டுவதற்கு தேவையான எந்த ஒரு ஆயுதத்தையும் வைத்துக் கொள்வதற்கு சட்டரீதியான வரம்புகளை ஏற்படுத்தக்கூடாது.பாகுபாடற்ற முறையில் மக்களை கூட்டுக்கொலை புரியும் ஆயுதங்களை பயன்படுத்துவதை இஸ்லாம் தடுத்தாலும்,எதிரிகளை அச்சமூட்டுவதற்காக அவைகளை வைத்துக்கொள்வதை அது அனுமதிக்கிறது. அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து அரசை காக்க ஆயுத அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கி முன்னெடுத்து செல்லவேண்டும்.
 *உம்மத்துடைய பலமான தற்காப்பு என்பது,முஸ்லிம் உலகத்தை மறுபடியும் ஒன்றுபடுத்துவதில்தான் இருக்கிறது. முஸ்லிம் உலகத்தை விரைவாக ஒன்றுபடுத்தி விரிவாக்கம் செய்யும் பொழுது அந்நிய ஏகாதிபத்தியங்கள் தங்களை எதிர்க்கக்கூடிய பாரிய மனிதவளம், இயற்கைவளம் மற்றும் இராணுவ வலிமை கொண்ட பரந்த நிலப்பரப்பை சந்திக்க நேரிடும்.மேலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அமெரிக்கா,முஸ்லிம் உலகில் அதன் ஆட்சியாளர்கள் தனக்கு ஏற்படுத்திக்கொடுத்த ராணுவத்தளங்களை பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருக்கிறது. இத்தகைய போக்குவரத்து இணைப்புகளை (supply lines) துண்டித்து விடுவதன் மூலம் அமெரிக்க வலிமையை தாக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
 
*இந்த இஸ்லாமிய கூட்டணி, மற்ற குழுக்களையும் தன்னுள் கிரகித்துக்கொண்டு ஒரேயொரு எதிரணி என்ற அளவுக்கு விரிவடைய வேண்டும்.இந்த எதிரணி நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து,நாட்டின் கனரக தொழிற்சாலைகளையும் ஆயுதக்கிடங்களையும் கையகப்படுத்தவெண்டும்.இது அந்நிய சக்திகளின் போர் படையெடுப்பை முறியடிக்கவும், முஸ்லிம் உலகை ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடுத்தும் பரந்த இஸ்லாமிய நோக்கங்களுக்கும் உதவி புரியும்.
சிரியாவில் ஒரு முடிவின் தொடக்கம் ஆரம்பமாகிவிட்டது.மேலும் ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தத்தமது நோக்கங்களுக்கும் நலன்களுக்கும் தக்கவாறு சிரியாவில் இறுதி ஆட்டத்தை(end game) நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.மேற்குலகு தனக்கு விசுவாசமான எதிரணியை உருவாக்குவதில் தோல்வி கண்டுவிட்டது. உம்மத் தனது நிலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை தானே கையில் எடுத்துக்கொண்டுவிட்டது. இத்தருணத்தில் இஸ்லாமிய கூட்டணி, இஸ்லாத்திற்கு  எந்தவொரு களங்கம் ஏற்படுவதையும் அனுமதிக்காமல் செயல்படுமானால்,அல்லாஹ்سبحانه وتعالىவுடைய நாட்டத்தின்படி, சிரியாவினதும் மற்றும் ஒட்டுமொத்த உலகத்தை சேர்ந்த உம்மத்தினதும் புதிய விடியலைக் காணலாம்.உம்மத்தை கவ்வியிருக்கும் இருளை அகற்றி அதன் துயரங்களை நீக்கலாம்.
 
Source:- www.khilafah.com

No comments:

Post a Comment