அருவருப்பானது இந்த அயல் நாட்டின் இறக்குமதி .இனத் துவேச துரோக வரிகளில்
எனக்கும உன் அடக்கு முறை
அடிமை சாசனம் தயார்தான்
என்பது நான் அறிந்ததே !

சிறுபான்மை நசுக்களை அவசியமாக்கி
பெரும்பான்மை சுகம் காட்டுவதில்தான் - உன்
ஜனநாயக பெயர் தாங்கி வாக்கு வங்கிகளுக்கு
கொளுத்த இலாபம் என்பது அறிந்த வரலாறே !

காலம் காலமான இந்த சதிகளில்
நேற்று 'எல்லாளன்' தெரியாத அரசியலை
'துட்டகைமுனுவின்' வரலாற்றில்
அநீதமாய் ஊடுருவி கற்றுக் கொடுத்தீர்கள் !

விளைவு மகாவலியை விட
இங்கு ஒரு இரத்த ஆறு
முப்பது வருடங்கள் பேய்த்தனமாக ஓடியதே !
இன்னுமா தாகம் தீரவில்லை !

அச்சுறுத்தும் உன் கோஷங்களுக்கு அஞ்சி
அடிமைப் பட்டையை நெற்றியில் இட்டு
நீ கேட்கும் விலையில் தன்மானத்தை விற்க
தரங்கெட்ட பிண்டமல்ல - நான் முஸ்லிம் .

உன் நிகழ்கால நகர்வுகளில் போதி மரத்திலும்
அந்த இந்துத்துவா அல்லவா பளிச்சிடுகிறது !
அதே சீருடை காவி அழிப்புப் பனி ஒரே பாணி
அருவருப்பானது இந்த அயல் நாட்டின் இறக்குமதி .

http://khandaqkalam.blogspot.ae/2012/12/blog-post_7.html#more

No comments:

Post a Comment