Sources From iqrah.net
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
இன்று நமது சமுதாயத்தில் பெரும்பாலான இளைஞர்கள் மார்க்கத்தை வணக்க வழிபாடு மட்டும் தான், அதைத் தாண்டினால் தாவா (அழைப்பு பணி) மட்டும் போதும் என்றும் நினைத்துக் கொண்டுள்ளார்கள். இஸ்லாம் ஆள வேண்டும் என்ற சிந்தனை சில முஸ்லிம்களிடம் மட்டுமே இருந்து வருவதைக் காண்கிறோம்.
இஸ்லாத்தை ஒரு ஆளும் கொள்கையாக ஒரு முழுமையான வாழ்க்கை நெறியாக மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்பவர்களை சிலர் ஏளனப்படுத்தி வருவதையும் நாம் காணலாம்.
நமது நாயகம் முஹம்மது நபி (ஸல்) அதிகாரம் இல்லாமல் வெறும் தாவா (அழைப்புப்பணி) மட்டும் செய்தார்கள் என்று சொன்னால் நபித்துவத்தில் அதிக ஆண்டுகள் அதாவது 13 ஆண்டுகள் மக்காவில் தான் பணி புரிந்தார்கள். அந்த காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
ஆனால் நபி (ஸல்) ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு சென்ற உடனே முதல் வேலையாக தலைமைத்துவம் மாறுகின்றது. அதாவது அதற்கு முன்னாள் நயவஞ்சகன் அப்துல்லாஹ் இபுனு உபை என்பவன் தான் மதினாவாசிகளின் தலைவனாக இருந்தான். மதீனாவாசிகள் அவனையே தங்களது அரசனாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்தனர். இந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வராமல் இருந்திருந்தால் அவனே அவர்களின் அரசனாகியிருப்பான். ஆனால் நபி (ஸல்) அவர்களின் அகபா உடன்படிக்கை அவனுடைய பேராசைக்கு ஒரு பேராபத்தாக அமைகின்றது.
அதிகாரத்தில் முஸ்லிமல்லாதவர்கள் இருக்கட்டும் நாம் சிறந்த ஆன்மீகவாதிகளாக இருக்கலாம். ஆட்சி அதிகாரம் ஹராம், உலக ஆசையின் நுழைவாயில் என்று நபி (ஸல்) காஃபிர்களுக்கு, அதாவது அங்கு உள்ள ஆட்சியை கைப்பற்ற துடித்த அப்துல்லாஹ்இபுனு உபைக்கு கொடி பிடித்து நிற்கவில்லை. மாறாக எங்களுக்கு என்று தனி சட்ட திட்டங்கள் (ஸரிஆ) உள்ளது என்று செயல்கள் மூலமாக பிரகடனப்படுத்தினார்கள். செய்தும் காட்டினார்கள். அல்ஹம்து லில்லாஹ் இஸ்லாமிய ஆட்சியையும், குர்ஆனை ஒரு வாழ்க்கை நெறியாகவும் கொண்டு வந்தார்கள். செயல் படுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இந்த வசனத்தின் பொறுப்பை ஏற்றுகொண்டார்கள் (அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் -முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.) ” (9:33.)
மக்காவில் 13 ஆண்டு காலம் அதிகாரம் இல்லாமல் பிரச்சாரம் செய்தும் ஏறத்தாழ 80 பேர்தான் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள். ஆனால் அதிகாரத்தை கைக்கொண்டு பிரச்சாரம் செய்த குறைந்த நாட்களிலேயே,
அன்றைய வல்லரசுகளாக திகழ்ந்த ரோமப் பேரரசும், பாரசீகப் பேரரசும் இஸ்லாமிய ஆளுமையின் கீழ் வருகிறது. மேலும் ஹபஸா, மிஸ்ரு (எகிப்து), பஹ்ரைன், யமாமா, ஸிரியா, ஓமன் போன்ற நாடுகளும் இஸ்லாமிய ஆளுமையின் கீழ் கொண்டு வரப்படுகின்றது.
ரோமபுரி மன்னன் ஹெர்குலிஸ் (ஹிர்கலிடம்) அபூ ஸுஃப்யான் (ரலி) இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்வதற்கு முன்னால் பேசிய நீண்ட உரையாடலின் முடிவில் அவர்களே கூருவதை பாருங்கள் அந்த ரோமர்களின் மன்னன் கூட அவரை (முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அவரின் காரியம் உறுதியாகி விட்டது என்று கூறுமளவிற்கு அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள்.
மேலும் பஹ்ரைன் நாட்டு ஆளுநர் ‘அல்முந்திர் இப்னு ஸாவி’ என்பவருக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்புக் கொடுத்து நபி (ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள். நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்பு அவர் நபியவர்களுக்குப் பதில் எழுதினார். “அல்லாஹ்வின் தூதரே! உங்களது கடிதத்தை பஹ்ரைன் (எனது) நாட்டு மக்களுக்கு முன் நான் படித்துக் காட்டினேன். அவர்களில் சிலர் இஸ்லாத்தின் பால் கவரப்பட்டு அதை விரும்பி ஏற்றுக் கொண்டனர். ஆனால் மஜூஸிகளும், யூதர்களும் இருக்கின்றனர். எனவே, நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு கட்டளை பிறப்பியுங்கள்” என்று அல் முந்திர் கட்டளையை நபிகள் நாயாகம் (ஸல்) அவர்களிடம் கேட்டுப்பெறும் அளவிற்க்கு உலக வரலாற்றையே மாற்றி அமைத்தார்கள்.
மேலும் யமாமா நாட்டு அரசருக்கு நபி (ஸல்) அவர்கள் அழைப்பு விடுத்த விதத்தை பாருங்கள் அவர் பெயர் ‘ஹவ்தா இப்னு அலீ’ ஆகும் நபி (ஸல்) இவருக்கு அழைப்புக் கொடுத்த வாசகமாவது:
“அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…..
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) ஹவ்தா இப்னு அலீக்கு எழுதிக் கொள்வது – ” நேர்வழியைப் பின்பற்றுவோறுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்கு கீழ் உள்ள பகுதிளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்”.
இந்த வார்த்தையின் பொருள் என்னவென்றால் நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டுதான் அதிகாரத்தில் இருக்க முடியும் அதிலும் இஸ்லாமிய அதிகாரத்தையே செயல்படுத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.
அவர்கள் மதினாவில் உள்ளவர்களுக்கு கூறிய வார்த்தை அல்ல. அது வேறொரு நாட்டு மன்னனிடம் கூறுமளவிற்கு அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள்.
மார்க்கத்தை மற்ற மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வதுதான் அதிகாரம் பெறுவதன் முக்கிய நோக்கம் என்பது தெளிவாகின்றது.
கலிஃபாக்களின் ஆட்சியிலும் இந்த சுன்னா தொடரப்பட்டு வந்தது அல்ஹம்துலில்லாஹ்….. உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் மூன்று கண்டங்களை தாண்டி இஸ்லாம் வேகமாக பரவியது.
(அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.) “(9:33.)
இனி சகோதர சகோதரிகளே, மார்க்கம் (தீன்) என்றால் என்ன என்று கொஞ்சம் தெரிந்து கொள்ளுவோம்.
எந்த கொள்கையை நீங்கள் பின்பற்றுகின்றீர்களோ அதாவது எந்தக் கொள்கை உங்களை வழிநடத்தி செல்லும் சட்ட திட்டங்களைத் தருகிறதோ அதுதான் உங்கள் மார்க்கம் (தீன்). நீங்கள் கம்யூனிஸத்தினைப் பின்பற்றினால் கம்யூனிஸ தீனில் (வாழ்க்கை நெறியில்) தான் இருக்கின்றீர்கள். ஜனநாயகத்தைப் பின்பற்றினால் ஜனநாயக தீனில் (வாழ்க்கை நெறியில்) இருக்கின்றீர்கள். முதலாளித்துவத்தை பின்பற்றினால் முதலாளித்துவ (தீனை) (வாழ்க்கை நெறியில்) இருக்கின்றீர்கள். நீங்கள் இஸ்லாத்தை பின்பற்றினால் (இஸ்லாமிய) தீனில் இஸ்லாமிய சத்திய (வாழ்க்கை நெறியில்) இருக்க்ன்றீர்கள்.
ஆக நீங்கள் உங்களுக்கெதிரான கொள்கையைக் கொண்ட வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொண்டால், அது நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை என்பதற்கு முற்றிலும் போதிய ஆதாரமாகி விடுகிறது.
அசத்திய தீனை (தாகூத்தை) பின்பற்றக்கூடியவர்களுக்கும் அல்லாஹ்வுடைய தீனை இஸ்லாத்தை சத்தியத்தை பின்பற்ற கூடியவர்களுக்கும் அல்லாஹ் கூறும் உவமையைப் பார்ப்போம்.
”இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர், போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (11:24)
இவர்கள் பூமியில் அல்லாஹ் திட்டமிட்டிருப்பதை தோற்கடித்து விடமுடியாது அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு வேறு பாதுகாவலர்கள் இல்லை, இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும், அவர்கள் (நல்லவற்றைக்) கேட்கும் சக்தியை இழந்த விட்டார்கள் இவர்கள் (நேர்வழியைக்) காணவும் மாட்டார்கள். இவர்கள் தாம் தங்களுக்கு தாங்களே நட்டம் விளைவித்துக் கொண்டார்கள், இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த யாவும் இவர்களை விட்டு மறைந்துவிடும். (11:20-21)
இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். இந்த அக்கிரமக்காரர்கள் அல்லாஹ்வின் வழியில் செல்லமுடியாமல் மக்களைத் தடுக்கின்றார்கள்: அதனைக் கோணலாக்க விரும்புகின்றார்கள்.” (11:18-19)
இப்போது ஒரு கேள்வி எழலாம் அனைவரும் ஜனநாயகத்தை தானே பின்பற்றுகின்றோம்? இதற்கு என்ன செய்வது?
( இன்ஷா அல்லாஹ் தொடரும்…)
No comments:
Post a Comment