ரஷ்யா க்ரிமியாவை தன்னுடன் இணைத்துள்ளது.க்ரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளும் சட்ட ஒப்புதல் ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் 18/03/2014 அன்று ஆவணத்தில் கையொப்பமிட்டார்.எனவே ரஷ்யா உக்ரைனையும் தன்னுடன் இணைப்பதற்கான முன்னேற்பாடாக இது இருக்குமோ என்ற கேள்வி எழலாம்.
இப்போதைய பிராந்திய, சர்வதேச சூழ்நிலைகள், மூன்றில் எந்த ஒரு தரப்பும் இதை அனுமதிக்காது. உக்ரைனை உரிமை கொண்டாடுவோர், உக்ரைனை முழுமையாக கட்டுபடுத்தவதற்கு அல்லாமல் மூன்று தரப்பினருக்கும் இடையே ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு என்பது ஒரு சமரசமேயாகும்…ஆகையால் ரஷ்யா உக்ரைனை முழுமையாக தனதாக்கிக் கொள்வது என்பது தற்சமயமோ அல்லது சிறிது காலத்திற்கோ நடைபெறுவது சாத்தியமற்றதாகும். ரஷ்யா க்ரீமியாவை தனதாக்கிக் கொள்ள முடிந்துள்ளதால், அமெரிக்கா உக்ரைனின் இதர பகுதிகளை தனதாக்கிக் கொள்ளும் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது. உக்ரைனை மூன்று தரப்பினரில் எவ்வொருவரும் தற்சமயம் அல்லது சிறிது காலத்திற்கு ஆக்கிரமிக்க முடியாது. ஏனெனில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் செயல்களானது சமரசத்தை ஏற்படுத்துவதற்கும்; அதாவது ரஷ்யா க்ரீமியாவை கட்டுபடுத்தவும், மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா உக்ரைனின் ஏனைய பகுதியை கட்டுபடுத்தவும் இயலும் என்பதை பின்வரும் நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகலை (Chuck Hagel) ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு(Sergei Shoygu) 20/03/2014 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகையில், மாஸ்கோ கிழக்கு உக்ரைனை தாக்காது என்று குறிப்பிட்டுவிட்டு அவரிடம் கூறியதாவது:- “தன் எல்லைகளுக்கு அனுப்பப்பட்ட படைகள் என்பது வெறும் ராணுவ பயிற்சிக்காகவேயன்றி உக்ரைனின் எல்லையில் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடுவதற்காக அல்ல.”
ரஷ்ய மொழி பேசுபவர்களைக் கொண்ட உக்ரைனின் கிழக்கு பகுதியை தன்னுடன் இணைக்க ரஷ்யா மேற்கொள்ளும் எவ்வொரு முயற்சியையும் “ராணுவத்தை கொண்டு பதிலளிப்போம்” என்ற கீவ்(Kiev)வின் இடைக்கால அரசின் அறிவிப்பு இதை ஊர்ஜிதப்படுத்தியது. “இது 19/03/2014 அன்று க்ரீமியாவிலிருந்து தனது படைகளை திரும்ப அழைப்பதற்கு தயாராக உள்ளதாக அறிவித்ததை அறிந்திருந்தும் ஒரு நாளுக்கு முன்னரே இந்த அறிவிப்பு வெளியானது. உக்ரைனின் பாதுகாப்பு துறை தலைவர் ஆன்ரே ப்ரோபாய்(Andrey Probai) தனது நாடு படைகளையும் க்ரீமியாவின் குடிமக்களையும் திரும்பப்பெற ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக அறிவித்தார். தங்களது முக்கிய குறிக்கோள் என்பது படைகளையும் உக்ரைனிய குடும்பங்களையும் “விரைவாகவும் சிறப்பான முறையில்” இடமாற்றம் செய்வதாகும் என்பதாக அவர் கூறினார்.
உக்ரைனின் ஏனைய பகுதிகளை கைமாற்றம் செய்து கொள்வதற்கான சமாதானத்திற்கான சமிக்ஞை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது! உக்ரைன் தன்னுடைய கிழக்கு பகுதியில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதை இது காட்டுகிறது, அதேசமயம் தனது தீபகற்பகத்தில் கொண்டுள்ள ஆர்வம் குறைந்துள்ளது. இந்த சமிக்ஞைகள் 21/03/2014 அன்று ஊர்ஜிதமாகியது. 21/03/2014 அன்று ப்ரூஸல்ஸில்(Brussels) நடைபெற்ற ஐரோப்பிய மாநாட்டில், உக்ரைனின் இடைக்கால பிரதமர் ஆர்சென்லி யட்சென்யுக்(Arsenly Yatsenyuk) என்பவருடன் ஐக்கிய ஐரோப்பிய நாடுகள், அரசியல் நிலைக்கான ஒரு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தமானது கீவ்(Kiev)வை ஐக்கிய ஐரோப்பிய சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கு நெருங்க செய்யும் உக்ரைனிற்கும் ரஷ்யாவிற்கும் பிரச்சனையை உண்டாக்கிய ஒப்பந்தமாகும், உக்ரைனின் முன்னாள் அதிபர் யானிகோவிச்(Yanukovych) இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் உக்ரைனியர்கள் மிகப்பெரிய போராட்டங்கள் மற்றும் பேரணிகளை மேற்கொள்ள தூண்டியது… இதற்கும் மேலாக, இவ்வனைத்து குறியீடுகளும் சமாதான தீர்வு ஏற்பட மேற்கொண்ட முயற்சிகளை வெளிக்காட்டியது… எவ்வாறிருப்பினும் உக்ரைனின் சூழ்நிலைகள்,பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் ரஷ்யாவிற்கோ அல்லது மேற்குலகிற்கோ சாதகமாக மாறுவதறகேற்ப எந்நேரமும் வெடிக்கக்கூடிய வெடிகுண்டாகவே இருக்கும். அப்பொழுது இரு தரப்பினரும் அக்கால சர்வதேச சூழலுக்கு ஏற்ப முழு உக்ரைனையும் தனதாக்கிக் கொள்ள முயல்வார்கள்… உக்ரைன் ரஷ்யாவின் இடுப்புக்கோடு போன்று உள்ளதோடு, ஐரோப்பாவின் வாயிலாகவும் உள்ளது. சர்வதேச மற்றும் பிராந்திய அளவில் சூழ்நிலைகள் மாறாத வரையில் இச்சமாதான தீர்வு அப்படியே நீடித்திருக்கும். இது தற்காலிக நிலைத்தன்மை மற்றும் “தற்காலிக அமைதியை” ஏற்படுத்தும்… நீடித்த நிலைத்தன்மையை பொறுத்தமட்டில்,குறிப்பாக க்ரீமியாவை ரஷ்யா ஆக்கிரமிப்பதற்கு முந்தைய கிலாஃபத்தின் காலமான 18 மற்றும் 19ம் நூற்றாண்டின் நிலைத்தன்மையை போன்று ஏற்பட்டாலேயன்றி; அஃதாவது இன்ஷா அல்லாஹ் கிலாஃபத்தின் மீள்வருகையின் ஒரு பகுதியாக அது இருக்கும்போது ஏற்பட்டாலேயன்றி வேறு வகையான நிலைத்தன்மை அங்கு ஏற்பட வாய்ப்பில்லை.
No comments:
Post a Comment