May 28, 2014

தவறு துரோகம் என்பவற்றில் எழும் இஸ்லாமிய எழுச்சி !!

காலத்தின் தேவை , நவீனம் ,வினைத்திறன் ,நடைமுறை சாத்தியம் இந்த
வார்த்தைகளை இன்றைய முஸ்லீம் உலகில் சர்வசாதாரண பயன் பாடாய் நாம் காணமுடியும் . அறிவியல் தொழில் நுட்பத்தையோ , இயந்திரமயமாக்கல
ை நோக்கியோ முஸ்லீம் உம்மாவின் மீது இந்த வார்த்தையாடல்கள்
பிரயோகிக்கப்பட்டிருந்தால் மேட்கத்தேயத்திடம் தங்கி வாழாத
தன்னிறைவு பொருளாதாரம் பற்றி இவர்கள் சிந்திக்கிறார்கள் என
சந்தோசப்பட்டிருக்கலாம் ஆனால் இந்த வார்த்தைகள் இன்றைய
உலகின் தனிப்பெரும் அதிகாரமாய் தன்னை பிரகடனப்படுத்தியிருக்கும்
முதலாளித்துவ ஏகாதிபத்திய நிர்ப்பந்த அரசியலின் கொள்கை சார்
வடிவமாக முஸ்லீம் உம்மாவை ஆக்கிரமிக்கப்பார்க்கும்
தவறு என்பதால் அதன் ஆபத்தை பற்றி பேசவேண்டிய அவசியம்
சத்தியத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு .
உண்மை என்னவென்றால் இந்த முதலாளித்துவம் என்பது மக்கள்
நலன் எனும் நோக்கத்தை கொண்ட ஒரு சிந்தனை அல்ல அது கிறிஸ்தவ மதப்
புரோகிதத்திட்கும் ,ஐரோப்பிய அறிவு ஜீவிகளுக்கும் இடையில்
நிகழ்ந்த நீண்ட இரத்தம் சிந்திய போராட்டத்தின் தீர்வாக சமரச
பேரத்தின் அடிப்படையில் உருவான ஒரு கொள்கை (அதற்குள்ளே ஜனநாயகம் ,மனித உரிமைகள் ,கருத்துச் சுதந்திரம் ,பன்மை வாதம் போல் பல
விடயங்களை கொண்டது ) ஆகும் .அதன் அடிப்படையே வாழ்வியலில்
இருந்து மதத்தை பிரிப்பது .இங்கு புரிந்து கொள்ள வேண்டியது இறைவனை அது மறுக்காது மாற்றமாக அவனது வழிகாட்டலை புறக்கணிக்கும்
அவ்வளவுதான் .இந்த சிந்தனை அசத்தியத்தை சத்தியத்திற்கு நெருக்கமாக்கும்
நிராகரிப்பை விசுவாசத்திற்கு நெருக்கமாக்கும் .( இஸ்லாமிய
ஷரீயாவை நிலைநாட்ட முஸ்லீம்களிடமே 51 %
வாக்குகளை எதிர்பார்க்கும் இரகசியமும் ,பெரும்பான்மை விரும்புகிறது எனக்காட்டி ஷரீயா சட்டங்களை இன்று இஸ்லாமிய வாதம் பேசும் மனிதர்கள் புறக்கணிப்பதன் இரகசியம் உங்களுக்கு புரிந்திருக்கும் )
அதாவது இங்கு சத்தியம் மாதிரி இருக்கும் அசத்தியம் . மதச்சார்பின்மை வேறு மத சுதந்திரம் வேறு ஆனால் இங்கு இந்த இரண்டும்
மதச்சார்பின்மை என இனம் காட்டப்பட்டு அது இஸ்லாத்தில் உள்ளது தான் என நிறுவப்படும் .

(இப்போது இஸ்லாமிய சமூகம் என்பது முஸ்லீம் ,முர்தத் ,முஷ்ரிக் ,
பாசிக் என்பவற்றின் கூட்டு !)

No comments:

Post a Comment