செடிகளின் வளர்ச்சியையும் மகசூலையும் அதிகரிக்க,வெள்ளரி செடி அல்லது மற்ற செடிகளில் பன்றியின் மரபணுவை எடுத்து உபயோகிக்க அனுமதி கிடையாது.
பின்வரும் காரணங்களுக்காக பன்றி அசுத்தமானதாகவும், தடுக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
தானாக செத்தது,இரத்தம்,பன்றியின் மாமிசம்,அல்லாஹ் அல்லாத வேறு பெயர்கள் கூறப்பட்டவைகளை அல்லாஹ் உங்களுக்கு தடை செய்துள்ளான்.ஆகவே எவரேனும் வரம்பு மீறாமலும் பாவம் செய்யும் நோக்கமில்லாமலும் இருந்து (இவற்றை புசிக்க) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமாகாது.நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும் மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
(அல் பகரா :173)
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ
தானாக செத்தது,இரத்தம்,பன்றி இறைச்சி,அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறப்பட்டவை ஆகியவை உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளன.
(அல் மாயிதா:3)
அபு தஃலபா அல் குஷனி அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:-
… وَأَنَا فِي أَرْضِ أَهْلِ الْكِتَابِ وَهُمْ يَأْكُلُونَ فِي آنِيَتِهِمْ الْخِنْزِيرَ وَيَشْرَبُونَ فِيهَا الْخَمْرَ فَآكُلُ فِيهَا وَأَشْرَبُ؟ قَالَ فَصَعَّدَ فِيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ….وَإِنْ وَجَدْتَ عَنْ آنِيَةِ الْكُفَّارِ غِنًى فَلَا تَأْكُلْ فِيهَا، وَإِنْ لَم تَجِدْ غِنًى فَارْحَضْهَا بِالْمَاءِ رَحْضًا شَدِيدًا ثُمَّ كُلْ فِيهَا…..
”நாங்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மத்தியில் வாழ்கிறோம்; அவர்கள் தங்கள் பாத்திரத்தில் பன்றி இறைச்சியை சமைக்கின்றனர்; மேலும் மதுவை அவர்களின் பாத்திரத்தில் பருகுகின்றனர்.”அந்த பாத்திரங்களை பயன்படுத்தலாமா என்றபோது, நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்…நீங்கள் வேறு ஏதாவது பாத்திரங்களை கண்டால், அதிலிருந்து உண்டும் குடித்தும் கொள்ளுங்கள். அப்படி உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால், அவைகளை தண்ணீரால் நன்றாக சுத்தம் செய்து பின் (அதிலிருந்து) உண்ணவும் பருகவும் செய்யுங்கள்.” (தபரானி)
அஃதாவது ஒருவருக்கு பாத்திரம் தேவைப்பட்டு அதைத்தவிர அவருக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால், அதை நன்றாக கழுவிக்கொள்ளவும். இந்த பாத்திரங்களை சுத்தம் செய்ய கழுவுதல் அவசியமாக இருப்பதன் காரணத்தால், மது மற்றும் பன்றிகள் அசுத்தமானவையாகும். நபிصلى الله عليه وسلمஅவர்கள் அப்பாத்திரங்களை தண்ணீரால் நன்றாக சுத்தம் செய்யுமாறு கூறியது அதை தூய்மைப்படுத்துவதற்காகும்.இது பன்றி மற்றும் மது அசுத்தமானவை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُخَالِطُ الْمُشْرِكِينَ وَلَيْسَ لَنَا قُدُورٌ وَلَا آنِيَةٌ غَيْرُ آنِيَتِهِمْ , قَالَ: فَقَالَ: «اسْتَغْنُوا عَنْهَا مَا اسْتَطَعْتُمْ فَإِنْ لَمْ تَجِدُوا فَارْحَضُوهَا بِالْمَاءِ فَإِنَّ الْمَاءَ طَهُورُهَا ثُمَّ اطْبُخُوا فِيهَا
“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் பலதெய்வ வழிபாடு செய்பவர்களின் இடத்தில் இருக்கின்றோம்; அவர்களுடையதை தவிர வேறு பாத்திரங்கள் எங்களிடம் இல்லை”. ..அதற்கு நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்; அதிலிருந்து உங்களால் முடிந்த வரை விலகி இருங்கள்; அதைத்தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை எனில் அதை தண்ணீரால் நன்கு கழுவிக்கொள்ளவும். ஏனெனில் தண்ணீர் அவைகளை சுத்தப்படுத்தக்கூடியதாகும். பின்பு அதில் நீங்கள் சமைத்து கொள்ளுங்கள்.” (தாரகுத்னி)
நபிصلى الله عليه وسلمஅவர்கள் «فَإِنَّ الْمَاءَ طَهُورُهَا» “தண்ணீர் அதை தூய்மைப்படுத்த கூடியதாகும்” என்று கூறியதன் மூலம் மது மற்றும் பன்றி அசுத்தமானவைகள் என்று விளங்குகிறது. மேலும்
அசுத்தமானவைகளிலிருந்து ஆதாயமடைவதும் தடுக்கப்பட்டவை என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறிய முடிகிறது.
நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்;-
إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الخَمْرِ، وَالمَيْتَةِ وَالخِنْزِيرِ وَالأَصْنَامِ ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ شُحُومَ المَيْتَةِ، فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدْهَنُ بِهَا الجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ؟ فَقَالَ: «لاَ، هُوَ حَرَامٌ» ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ»
“அல்லாஹ்வும் அவனது தூதரும் மது, செத்த மிருகங்கள், பன்றி, சிலை ஆகியவற்றை வியாபாரம் செய்வதை ஹராமாக்கியுள்ளார்கள்.”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! செத்த மிருகங்களின் கொழுப்பை கொண்டு படகிற்கு கொழுப்பிடுவது,அதன் துளைகளை மறைப்பது மற்றும் விளக்கிற்காக அதை பயன்படுத்துவது கூடுமா என்று கேட்கப்பட்டது. நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்..இல்லை! இவை தடுக்கப்பட்டவையாகும்.அல்லாஹ் யூதர்களை நாசமாக்கட்டும்! அல்லாஹ் (மிருகங்களின்) கொழுப்பை அவர்களுக்கு ஹராமாக்கியிருந்தான்; எனினும் அவர்கள் அதன் கொழுப்பை உருக்கி அதை விற்று அதன் லாபத்தை உண்டனர்.”
(ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி), புகாரி)
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: بَلَغَ عُمَرَ أَنَّ سَمُرَةَ بَاعَ خَمْرًا، فَقَالَ: قَاتَلَ اللهُ سَمُرَةَ، أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَعَنَ اللهُ الْيَهُودَ، حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ، فَجَمَلُوهَا، فَبَاعُوهَا
“சமுரா மது விற்பனை செய்ததாக உமர்(ரலி) அவர்களிடம் அறிவிக்கப்பட்டது. அல்லாஹ் சமுராவை நாசமாக்கட்டும்! நபிصلى الله عليه وسلمஅவர்கள், அல்லாஹ் யூதர்களை சபிக்கட்டும்! அவர்களுக்கு கொழுப்பை(சாப்பிட) தடுக்கப்பட்டிருந்தும், அதை உருக்கி பின் அதை விற்றனர்.” என்று கூறியது அவருக்கு தெரியாதா என்று பதிலளித்தார்கள்.
(முஸ்லிம்)
நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
إِنَّ اللَّهَ حَرَّمَ الْخَمْرَ وَثَمَنَهَا، وَحَرَّمَ الْمَيْتَةَ وَثَمَنَهَا، وَحَرَّمَ الْخِنْزِيرَ وَثَمَنَهُ
“அல்லாஹ் மதுவையும் அதற்காக கொடுக்கப்பட்ட விலையையும் தடுத்திருக்கிறான்;செத்த மாமிசத்தையும் அதற்காக கொடுக்கப்பட்ட விலையையும் தடுத்திருக்கிறான்; மேலும் பன்றியையும் அதற்காக கொடுக்கப்பட்ட விலையையும் தடுத்திருக்கிறான்.” (அபூ ஹுரைரா(ரலி), அபூ தாவூது )
அசுத்தமானவைகளிலிருந்து ஆதாயமடைவது தடுக்கப்பட்டவை என்பதை மேற்கூறிய ஆதாரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.ஆகவே, வெள்ளரி மற்றும் அதை போன்ற செடிகளை செழிப்படைய செய்து அதன் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக பன்றியிலிருந்து மரபணுவை எடுத்து செடிகளில் செலுத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அசுத்தமானவைகளிலிருந்து ஆதாயமடைவது தடுக்கப்பட்டுள்ளதால் இதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.
அசுத்தமானவைகள் வெறுக்கப்பட்டதாயினும் அவற்றை மருந்துக்காக உபயோகிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதை இத்துடன் ஒப்பிட்டு கூறமுடியாது.
அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள் :-
أَنَّ نَاسًا مِنْ عُرَيْنَةَ اجْتَوَوْا المَدِينَةَ «فَرَخَّصَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتُوا إِبِلَ الصَّدَقَةِ، فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا، وَأَبْوَالِهَا»
“உரைனா கோத்திரத்தை சார்ந்த சிலர் மதீனாவிற்கு வந்தார்கள்; அவர்களுக்கு அதன் சீதோஷ்ண நிலை ஒத்துக்கொள்ளவில்லை;ஆகவே அல்லாவிஹ்ன் தூதர்صلى الله عليه وسلمஅவர்கள், ஜகாத்தாக கொடுக்கப்பட்ட ஒட்டக மந்தைக்கு சென்று அதன் பாலையும் சிறுநீரையும்(மருந்தாக) பருக அனுமதியளித்தார்கள்…”(புகாரி)
செடி வளர்ப்பு என்பது மருந்து என்னும் சொல்லின் அர்த்தத்தில் அடங்காத காரணத்தால், செடி வளர்ப்பதை மருந்திற்கு சமமானதாக கூறமுடியாது. ஆகவே செடியின் வளர்ச்சிக்காக பன்றியின் மரபணுவை உபயோகிக்க அனுமதி கிடையாது.
Sources sindhanai.org
No comments:
Post a Comment