May 4, 2014

விற்பனை இலக்கை மட்டும் மையமாக வைத்து தொழிலாளியின் படியை நிர்ணயிப்பது கூடுமா?

 
கேள்வி:-
இக்காலத்தில் சதவீதம் என்கிற வார்த்தையின் உபயோகம் அதிகரித்துள்ளது; அதாவது இந்த மாதத்தில் 4,00,000 ரூபாய் அளவில் நீங்கள் விற்பனை செய்திருந்தால், அதில் கால் சதவிகிதம் உங்களுக்கு படியாக கிடைக்கும்; அந்த விற்பனை இலக்கை அடையவில்லையெனில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது.
இதற்கு அனுமதி உண்டா?
ஒரு விற்பனை அங்காடியில்  வியாபாரிக்காக வேலை செய்யும் தொழிலாளிக்கு தன்னுடைய கூலியின் அளவு தெரிந்திருப்பது அவசியமாகும். மேலும் அவர் விற்பனை செய்த பொருட்களுக்காக கூலியுடன் சில சதவிகிதத்தை சேர்த்து கொடுக்கலாம். உதாரணமாக, அவருடைய சம்பளம் 1000 ரூபாய்  என்றிருந்தால், அவர் விற்பனை செய்த பொருட்களுக்காக கூடுதலாக 10 சதவிகிதத்தை உபரியாக அதனுடன் சேர்த்து வழங்கலாம்; இதற்கு தடை இல்லை. அவ்வாறில்லாமல் அவர் விற்பனை செய்த பொருட்களுக்கு மட்டும் சதவிகிதமாக வழங்குவது; அவர் விற்பனை செய்யும் பட்சத்தில் அவருக்கு 10 சதவிகிதம் கிடைக்கும்; அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவருக்கு எதுவும் கிடைக்காது என்று  நிர்ணயிப்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் உள்ளன… ஷரியா அடிப்படையிலான வலுவான கருத்து  என்னவெனில், இதற்கு அனுமதி கிடையாது.
வேறொருவருக்காக தொழிலாளியாக வேலை செய்வது, அதாவது அவருக்காக அவருடைய வணிக வளாகத்தில் விற்பனை செய்வது; அவர் விற்பனை செய்த தொகையில் சில சதவிகிதம் அவருக்கு சம்பளமாக வழங்கப்படும். அஃதாவது, அவர் விற்பனை செய்யும் பட்சத்தில், அவர் விற்பனை செய்ததில் சில சதவிகிதம் அவருக்கு கிடைக்கும். அவ்வாறு இல்லையெனில் அவருக்கு எதுவும் கிடைக்காது. தொழிலாளிக்கு தன்னுடைய கூலி எவ்வளவு என அறிந்திருப்பது அவசியம் என்ற அடிப்படையில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.அவர் விற்பனை செய்ததற்கான பொருட்களுக்காக கூடுதலாக சில சதவிகிதத்தை கூலியுடன் சேர்த்து கொடுக்கலாம். ஆனால் அவர் விற்பனை செய்த பொருட்களுக்கான சதவிகிதத்தை மட்டும் கூலியாக வழங்குவதற்கு அனுமதி கிடையாது.
 நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்:-
مَنِ اسْتَأْجَرَ أَجِيرًا، فَلْيُعْلِمْهُ أَجْرَهُ
“யார் ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துகிறாரோ, அவர் தொழிலாளிக்கு அவருடைய கூலியை தெரிவித்து கொள்ளட்டும்.”
                                               (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா)
 நபிصلى الله عليه وسلمஅவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்:-
أَعْطِ الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ
“தொழிலாளியின் வியர்வை உணர்வதற்கு முன் அவருடைய கூலியை வழங்கி விடுங்கள்”  (பைஹகீ)
இதனடிப்படையில், தொழிலாளிக்கு அவர் செய்யும் வேலைக்கு கூலி வழங்கப்பட வேண்டும். அவர் வேறொருவருக்காக கூலியில்லாமல் வேலை செய்வதற்கு அனுமதியில்லை. இதுவே இவ்விஷயத்தில் வலுவான நிலைப்பாடாகும்.
அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே; அவனே நீதிபதிகளில் சிறந்தவன்.

Sources sindhanai.org

No comments:

Post a Comment