May 31, 2014

'VALLEY OF THE WOLVES : PALESTINE ...' ஒரு விமர்சனப் பார்வை .


நியாயத்தை நியாயமாக சொல்வதில் தான் அநியாயம் வார்த்தை அளவிலாவது அழிக்கப்படுகின்றது.பாலஸ்தீனத்தின் விவகாரங்களில் தமக்கொரு நியாயத்தோடு சூழவுள்ள தேசியங்கள் தீர்வு காண புறப்படுவது , அதன் உண்மையான தீர்வு தொடர்பில் ஒரு தடையாகவே ஆகி விடும் . தேசியம் என்பதுதான் எமக்கு முன்னுள்ள முதல் தர 'ஜாஹிலீயத் '.

இந்த தேசிய வரைவிலக்கணத்தை மனதில் சுமந்தவர்களாக எடுக்கப் படும் எந்த முயற்சிக்கும் அந்த 'ஜாஹிலீயத்' கண்டிப்பான எல்லைகளை இட்டிருக்கும் . 'ஓநாய்களின் பள்ளத் தாக்கு பாலஸ்தீனம் ' என்ற துருக்கிய திரைப்படம் சுவையான திருப்பங்கள் , ஆக்கிரோசமான சண்டைக் காட்சிகள் , பாலஸ்தீனர்களின் யதார்த்த வாழ்வு என்பவற்றை பிரதிபலித்தாலும் இஸ்ரேல் , பாலஸ்தீன் என்ற இரண்டு தேசியங்களை அங்கீகரிக்கும் மனோ பாவத்தோடு தான் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது .

அந்த வகையில் 'ஓமர் முக்தார் ' என்ற உண்மையை சுற்றி லிபிய தேசிய வாதம் தத்ரூபமாக பிண்ணப்பட்டது போல் , இங்கும் துருக்கிய துறைமுகம் ஊடாக 'காசா ' துறைமுகம்
நோக்கி நிவாரண உதவிக்காக தன்னார்வ தொண்டர்களை ஏற்றி வந்த கப்பல், யகூதிய கமாண்டோக்களால் தாக்கப் பட்டு திருப்பி அனுப்பப் பட்ட உண்மையை சுற்றியே கதையின் அடிப்படைக் கரு பிண்ணப்பட்டுள்ளது . (அதாவது இத்தாக்குதலை நடாத்திய இராணுவ அதிகாரி கொல்லப் படுவதில் துருக்கி திருப்தியடைகின்றது . இதுவும்' எய்தவன் இருக்க அம்பை நோதல் ' எனும் தத்துவத்தையே நடைமுறை படுத்துகின்றது ).

அப்படியானால் மேற்படி சம்பவம் நடந்திரா விட்டால் ,(திரைக் கதைப்படிகூட) துருக்கிய கமாண்டோக்களின் 'வெஸ்ட் பேங்க் ' நுழைவே நிகழ்ந்திருக்காதா ? அல்லது தனது அரசியல் ,இராணுவ தோல்வியை மறைக்க U .S ஹொலிவூட் பாணியில் துருக்கியும் சினிமாக் கலையால் மக்களை விலை பேசியுள்ளதா ? அப்படியானால் பாலஸ்தீனில் உள்ளார்ந்த யகூதிய அநியாயங்களுக்கு இந்த தேசிய வாத அரசியல் கொள்கையில் தீர்வில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்களா ?

எது எப்படியோ இஸ்லாத்தின் தீர்வை புறம் தள்ளிய மனோபாவத்தை தமது கலைப் படைப்புகளிலும் முஸ்லீம்களை மயக்கும் விதத்தில் காட்சிப்படுத்த ஒரு பழுத்த அனுபவம் தேவை .அந்த வகையில் அற்புதமான் ஹொலிவூட் + பெண்டகன் பொலிடிகல் ஸ்டைல் துருக்கிக்கு கை கொடுத்துள்ளது .

http://www.youtube.com/watch?v=HNPDIKEAOks
http://www.youtube.com/watch?v=HNPDIKEAOks

No comments:

Post a Comment