Jun 2, 2014

இஸ்லாமிய தஃவா என்பது நபி வழியில் அமையவேண்டும்….!


இன்று பல்வேறு விதமான தஃவா முறைகள் எமது முஸ்லிம் உம்மத்திடம் காணப்படுகிறது. இவை அனைத்தும் ஏதோ ஒரு குறித்த இலக்கை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்திற்கு பலம் சேர்க்கும் விதத்தில் அமைந்தாலும் அவைதானா நபி (ஸல்) அவர்களது தஃவா முறை என்பது பற்றி நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்களது தஃவா முறையை நாம் பார்போமானால் அவர்களது தஃவா முறையில் மூன்று முக்கிய கட்டங்களை நாம் காணலாம்.
முதல் கட்டம்:
தனிமனிதர்களை இலக்குவைத்து தாருல் அர்கத்தில் அவர்களை மிக இரகசியமாக சிந்தனைரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பண்படுத்தி, புடம்போட்டு, பக்குவப்படுத்தி, இஸ்லாமிய தஃவாவை முன்னெடுக்கும் ஒரு திட்டமான திடமான ஒரு குழுவை உருவாக்கினார்கள். இதற்கு சுமார் 3 வருடம் நபி (ஸல்) அவர்களுக்கு தேவைப்பட்டது.
இரண்டாம் கட்டம்:
இதில் நபி (ஸல்) அவர்களது இலக்கு தனி நபர்களை இலக்குவைத்த தஃவா முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட போக்கை கொண்ட தஃவா முறையாக மாறுவதனை நாம் காணலாம்.
நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் கட்டமாக தாருல் அர்க்கத்தில் பயிற்றப்பட்ட இஸ்லாமிய தலைமைகளை கொண்ட அந்த அணியுடன் "அவர்கள் வாழ்ந்த சமூகத்தில் உள்ள அனைத்து ஜாஹிலிய்ய முறைகளுக்கும் எதிராக குரல் எழுப்பி சமூகத்தலைவர்களை கண்டிப்பதுடன் அந்த சமூகத்தலைவர்கள் முன்னெடுத்த அடக்குமுறை மற்றும் அநீதிமிக்க வாழ்வியல் முறைகளுக்கு எதிராக சிந்னையை தூண்டி மக்களிடம் ஹக்கை எடுத்தியம்புகிறார்கள்".
இதன்போது அந்த சமூகத்தில் புரையோடிப்பபோன ஜாஹிலிய்ய நடைமுறைகள், பெண்கள் நடாத்தப்பட்ட முறை, அநாதைகள் மற்றும் ஏழைகள் சுரண்டப்பட் முறை, வியாபார முறையில் உள்ள மோசடி போன்ற "அரசியல், பொருளியல் மற்றும் சமூகவாழ்வு" குறித்த அத்தனை அநீதிகளையும் கண்டித்து மாற்றீட்டு வாழ்க்கை முறைகுறித்த கருத்துக்களை சமூகத்தில் முன்வைக்கிறார்கள்.
இதனால் பொதுமக்கள் மத்தியில் உள்ள வாழ்க்கை முறைபற்றிய "சிந்தனை மற்றும் உணர்வுகள்" தூண்டப்பட்டு இஸ்லாத்தின் மீதான நல்லெண்ணம் உருவாக்கப்பட்ட அதேவேளை அந்த சமூகத்தலைமைகளது அடக்குமுறைகள் துண்பங்கள் அனைத்தையும் சகித்தபடி தொடர்ந்தும் தமது ஹக்கை எடுத்தியம்புவதில் பின்வாங்காது பொறுமைகாத்தார்கள்.
இதற்கு உதாரணமாக சுமையா (ரழி), அம்மார் (ரழி), யாசிர் (ரழி), மற்றும் பிலால் (ரழி) ஆகியோரை குறிப்பிடலாம்.
மாத்திரமின்றி பல சஹாபாக்களை சிறையில் அடைத்து வேதனையும் செய்தார்கள்.
இது ஹக்கை உள்ளபடி எடுத்தியம்பும்போது ஏற்படும் இயல்பான நிலை. இவ்வாராண அடக்குமுறைகள் இன்றும் ஹக்கை எடுத்தியம்பும் எமது இஸ்லாமிய சகோதரர்கள் அனுபவித்து வருவதனையும் நாம் காணலாம். அது இந்த தஃவாமுறையின் இயற்கையான தன்மை.
மூன்றாம் கட்டம்:
இது நபி (ஸல்) அவர்கள் "சமூகத்தில் நிலைத்திருந்த வாழ்வியல் ஒழுங்குமுறைகளை அதிகாரம் ஒன்றைப் பெற்று மாற்றியமைக்க முற்படும் போக்கை கொண்ட நுஸ்றாவை கோரும் ஒரு தஃவா முறை" என்பதனை நாம் உணர கடமைப்பட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்களது சீராவை நாம் படிக்கும் போது தெளிவாக தென்படுத் இந்த தஃவா முறையில் அவர்கள் 20 க்கு மேற்பட்ட கோத்திரங்களை அணுகி நுஸ்றாவை கோருகிறார்கள்.
இறுதியில் "அவ்ஸ் -ஹஸ்ரஜ் கோத்திரங்களது நுஸ்றாவின் மூலமே" மதீனாவில் "இஸ்லாமிய அரசை நிறுவி" அவ்வரசின் மூலமான தஃவா முன்னெடுப்புகளை மேற்கொண்டு "ஹக்கை உலகெங்கும் எடுத்துச் செல்வதற்கும்" "தாருல் குப்ரை தாருல் இஸ்லாமாக மாற்றுவதற்கும்" முற்படுகிறார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்களது மூன்றாம் கட்ட தஃவா முறை.
இவ்வாறு இஸ்லாத்தில் நபி (ஸல்) அவர்கள் முன்னெடுத்த தஃவா முறை மிகத்தெட்டத் தெளிவாக உள்ள போது இன்று எத்தனையோ பெயர்பெற்ற தஃவா அமைப்புக்கள் இந்த தஃவா முறைகளுடன் பாரிய வேறுபாடுகளை கொண்டதாக இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் சமூகமாற்றத்தை ஏற்படுத்திய முறையினை விட்டுவிட்டு பல்வேறு முறைகளை கையால்வதனால் முஸ்லிம் உம்மத் உரிய மறுமலர்ச்சியை அடையத் தவறி வருவதனை நாம் கண்கூடாக காணமுடிகிறது.
எனவே, "ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் நன்மையாக ஏவி இஸ்லாம் அல்லாத வாழ்க்கை முறைகளையும் கலாச்சாரத்தையும் கேள்விக்குட்படுத்தி ஹக்கை நிலைநாட்ட நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட தஃவா முறையில்" இருந்து மீண்டும் பாடம்பெறவேண்டிய பாரிய பொறுப்பு முஸ்லிம் உம்மத்திறகு உள்ளது.
“மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.”(Imran: 104)
அதேவேளை, இஸ்லாமிய அழைப்புப்பணியின் போது எமது பொறுமையையும், கட்டுப்பாட்டையும், உறுதியையும் அல்லாஹ் சோதிக்கின்றான். அதற்கு கூலியாக விரிந்த இந்த பிரபஞ்சத்தைவிட விசாலமாக சுவர்க்கத்தை எமக்கு தயார்ப்படுத்தி வைத்திருப்பதாக எமக்கு நன்மாராயம் கூறுகிறான்.
“உங்களுக்கு முன்னிருந்தோருக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்துவிடலாம் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? அவர்களை (வறுமை,பிணிபோன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன“அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று து}தரும் அவரோடு ஈமான் கொண்டோரும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள் “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது”(என்று நாம் ஆறுதல் கூறினோம்)” (2:214)

No comments:

Post a Comment