( டி. ஈ. லாரன்ஸ் அல்லது டி. ஈ.லாரன்சு (Thomas Edward Lawrence, ஆகஸ்ட்
16, 1888 – மே 19, 1935)
ஒரு பிரிட்டானியப் போர் வீரர், தூதுவர், ராச தந்திரி மற்றும் எழுத்தாளர். முதல் உலகப்
போரில் உதுமானிய கிலாபாவுக்கு எதிராக ஏற்பட்ட அரபுப் புரட்சியில்
பிரிட்டனின் தூதுவராகவும் ராச தந்திரியாகவும் புரிந்த செயல்களுக்காக
லாரன்ஸ் ஆஃப் அரேபியா (அரேபியாவின் லாரன்ஸ், Lawrence of Arabia) என்று பரவலாக
அறியப்படுகிறார்.


வேல்சில் பிறந்த லாரன்ஸ், தன் இளமைக் காலத்தில் களத் தொல்லியளாராக பணி புரிந்தார். மத்திய கிழக்காசியாவின் பல மொழிகளை லாரன்ஸ் அறிந்திருந்ததால்,
பாலஸ்தீனத்தின் நெகேவ் பாலைவனத்தை ஆய்வு செய்ய பிரிட்டானிய ராணுவத்தால் வேலைக்கமர்த்தப்பட்டார். முதல் உலகப் போர் மூண்டபின் முறைப்படி பிரிட்டானிய தரைப்படையில் சேர்ந்தார். உதுமானியகிலாபாவுக்கு எதிராக பிரிட்டனும் ஏனைய நேச நாடுகளும் அரபுக் பழங்குடியினரை புரட்சி செய்ய்த் தூண்டினர். அப்படி உருவான அரபுப்
புரட்சியின் போது பிரிட்டனின் சார்பாக அரபு குடிகளுக்குத் தூதுவராகவும் ஆலோசகராகவும் லாரன்ஸ் அனுப்பப்பட்டார். உதுமானிய கிலாபாவின் முக்கிய நகரங்களான ஆக்வபா மற்றும் தமாஸ்கஸ் போன்றவற்றை கைப்பற்றும் முயற்சிகளில் அரபுப்படைகளுடன் இணைந்து பங்கேற்றார். முதலாம் உலகப்போரில் அவர் ஆற்றிய அரும்பணிகளுக்காக பிரிட்டானிய அரசு அவருக்கு பல உயரிய
பதக்கங்களை வழங்கி லெப்டினன்ட் கர்னலாகப் பதவி உயர்வு அளித்தது.போர் முடிந்த
பின்னர் ஒரு சுதந்திர மன்னரிச அரபி தேசியம் அமைப்பதற்காக அரபுத் தலைவர்
எமிர் ஃபைசலின் ஆலோசகராகப் பணியாற்றினார்.


இக்காலகட்டத்தில் வெளியான இவரது செவன் பில்லர்ஸ் ஆஃப் விஸ்டம் என்ற நூலும், அமெரிக்கப் பத்திரிக்கையாளர் லோவல் தாமசின் மிகைப்படுத்தப் பட்ட செய்திக்
குறிப்புகளும் மேற்குலகில் லாரன்சுக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. அவருக்கு அரேபியாவின் லாரன்ஸ் என்ற பெயர் உருவாகி வெகுஜன நினைவில் ஆழமாகப் பதிந்து விட்டது. லாரன்ஸ் 1922ல் பிரிட்டானிய வான்படையில் சேர்ந்து பல ஆண்டுகள் பணிபுரிந்தார். லாரன்ஸ் தனது பெயரை டி. ஈ. ஷா என்று மாற்றிக்
கொண்டார். விசையுந்து (மொட்டார் சைக்கிள்) ஆர்வலரான லாரன்ஸ் 1935ம் ஆண்டு ஒரு விசையுந்து விபத்தில் மரணமடைந்தார். )

லாரன்ஸ் இவன் யாரென்றால் உதுமானிய கிலாபா அரசில் இருந்து ஒரு மன்னர் ஆதிக்க
சுயாட்சியாக பிரிவினை அடைய உறுதுணையாக இருந்த பிரித்தானியாவின்
கிறிஸ்தவ உளவாளி ! இந்த பந்தர் பின் சுல்தான் யாரென்றால் அந்த கிறிஸ்தவ உளவாளி அமைக்க உதவிய அந்த 'கிங் டோம் ஒப் சவூதி அரேபியாவின் ' மன்னராட்சி மரபை பாதுகாக்கும் மன்னரின் விசேட உளவுப்பிரிவின் இன்றைய தலைவர் .லாரன்ஸ் ஒரு கிறிஸ்தவன் இந்த பந்தர் பின் சுல்தான் ஒரு முஸ்லிம் !
கிலாபா அரசு உடைக்கப்படுவதன் அவசியத்தின் பின்னால் யூத, கிறிஸ்தவர்களுக்கு பல இலாபாங்கள் இருந்தன . பாலஸ்தீனை பறிகொடுக்க பிரதான காரணமாக
இந்த பிரிவினை எனும் வரலாற்றுத் துரோகம் இருந்தது அதன் பின்னாலும் மன்னராட்சியை தக்கவைப்பதில் இன்றுவரை முஸ்லீம் சகோதரப்
படுகொலைகளை நியாயம் காண்கிறது ! அந்த கேவலமான இரத்தக் கறை படிந்த கரங்களின் உரிமையை இன்று தன்வசமாக்கியுள்ளவன் தான்
இந்த பந்தர் பின் சுல்தான் !!


முஸ்லீம் உம்மத் இஸ்லாத்தின் அரசியலான கிலாபா அரசின் நிழலில் வந்துவிடக்
கூடாது ;என்ற மேற்கின் அச்சத்தை தவிர்க்கும் பணியை லாரான்சுக்காக
இன்று செய்து கொண்டிருக்கும் அரேபியக் குள்ளநரிதான் இந்த பந்தர் பின் சுல்தான் !
அதாவது சவூதிக்காக மட்டுமல்ல , அமெரிக்காவுக்காக ,ரஷ்யாவுக்காக ,
இஸ்ரேலுக்காக ,முழு குப்ரிய ஆதிக்க உலகுக்காக ,இன்னும் அதிர்ச்சிகரமாக
ஈரானுக்காக என தனது பணியை விரிவாக்கி இருக்கும் செல்வச் செழிப்பு மிக்க ஒரு விசுவாசம் மிக்க கைக்கூலி !!!
ஒரு முஸ்லிம் தனது உலகியல் வாழ்வை இஸ்லாத்தின் அடிப்படையில்
வேண்டி நிற்பதில் இருந்தே அவனது இஸ்லாத்தின் அரசியல் பரிமாணம் தோற்றம்
பெறுகிறது .மறுமைக்காக இம்மையை பயன்படுத்தல் என்ற கோட்பாட்டின்
பிரகாரம் அவனது நடத்தையின் ஒவ்வொரு விவகாரமும் ஆன்மீக
விவகாரமாகின்றது . இத்தகு அவசியத்தில் இருந்துதான்
கிலாபா கோட்பாடு ஒரு அதி முக்கிய கடமையாக தோற்றம் பெறுகிறது .
இஸ்லாம் மனித நடவடிக்கைகளை உறுதியாகவும் ,தெளிவாகவும் வரையறுத்த நிலையில் ஒரு சித்தாந்தமாக இருக்கின்றது . அந்த வகையில் அதன் பிரயோக
வடிவத்தின் மூலம் நிரூபிக்கப் பட்டதும் சுன்னாவின் மூலம் அங்கீகரிக்கப் பட்டதும்
கிலாபா அரசு மட்டுமே ஆகும் . அப்படியான ஒரு நிலைக்கான மீள்வருகையை தடுக்கும்
ஒரே நோக்கத்தோடு தொழில்படும் ஒரு உளவு நிறுவனத்தின் தலைவரே இந்த பந்தர்
பின் சுல்தான் . எப்படி இவர் வேலை செய்கிறார் இன்ஷா அல்லாஹ்
இன்னொரு தொடரில் .

by Abdur Raheem

Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com