Jun 1, 2014

ஹிஜாப் மற்றும் நிகாப் தொடர்பான குற்றச்சாட்டு…?


ரப்புல் ஆலமீனான வல்ல நாயனின் வழிகாட்டலின் கீழ் மனித வாழ்வு ஒழுங்குபடுத்தப்படவேண்டும் எனும் சிந்தனையில் முஸ்லிம்கள் முனைப்புடன் செயற்படுவது இன்றுள்ள மேற்கினது மனிதச் சிந்தனைகளை அடிப்படையாக கொண்ட வாழ்வியல் வழிகாட்டலுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உணரப்படும் ஒரு வாழ்க்கைமுறையாக நோக்கப்படுகிறது. இதனால் இஸ்லாம் தொடர்பான பிழையான மக்கள் அபிப்பிராயத்தினை உலகம் முழுவதும் திரட்டும் பணியை இன்றைய ஏகாதிபத்திய மற்றும் காலனித்துவ சக்திகள் முன்னெடுப்பதனை காணலாம்.அந்த வகையில் இன்று ஹிஜாப் மற்றும் நிகாப்தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் மேற்கினால் முன்வைக்கப்படும் நிலையில் அதன் தாக்கத்தை இலங்கைபோன்ற கீழைத்தேய நாடுகளிலும் நாம் உணர ஆரம்பித்துவிட்டோம். இவ்வாறான குற்றச்சாட்டுகள் பிழையான வாழ்வியல் கண்ணோட்டத்தில் இருந்து பிறப்பதால் அவற்றை ஒரு முஸ்லிம் எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முற்படக் கூடாது. அது எமது எதிரிகளுக்கு பலம் சேர்பதாக அமைவதுடன் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் செயல்களில் எம்மவர்களையும் இணைத்துவிடும்.

இன்று ஹிஜாப் மற்றும் நிகாப் தொடர்பான குற்றச்சாட்டுகளில் பிரதானமான குற்றச்சாட்டுகளை நாம் பின்வருமாறு நிரல்படுத்த முடியும்.

1.ஹிஜாப் மற்றும் நிகாப் சமூகத்தை கூறுபோடுவதாக அமைகிறது.
2.ஹிஜாப் மற்றும் நிகாப் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
3.ஆண்களைவிட பெண்களை தாழ்ந்த நிலையில் நோக்குகிறது.
4.பெண்கள் சமூகசெயற்பாடுகளில் வினைத்திறனுடன் ஈடுபடத் தடையாக உள்ளது.

அதற்கு பல்வேறு அரசியல் பின்னணிகள் இருப்பினும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துவதுடன் இஸ்லாம் உலகில் மீள் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்கான குற்றச்சாட்டுகளாக அமைவதுடன் அவர்களது தாராண்மை வாதக் கலாச்சாரத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் அச்சுறுத்தலாக உணரப்படுகிறது. அத்துடன் இஸ்லாம் மீள்எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்கான பல்வேறு சதிமுயற்ச்சிகளில் ஒன்றாகவே ஹிஜாப் மற்றும் நிகாபுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உள்ளது என்ற அடிப்படையை ஒவ்வொரு முஸ்லிமும் உணரவேண்டும்.

ஆனால் இன்று எமது சகோதரர்கள் மேற்கினது சூழ்ச்சியின் ஆழம் விளங்காமல் நிகாப்பை தடைசெய்யக் கோரும்போது அது இஸ்லாத்தில் அவசியம் இல்லை என்ற கருத்துவேறுபாடுகளை முன்வைத்து குப்பார்களது நோக்கங்களை மிக இலகுவாக எட்டும்படியாக்கி விடுகிறார்கள். நாம் விரும்பினால் நிகாப் அணியும் போக்கிற்கும் அதனை கழட்டும்படியான வற்புறுத்தலில் நாம் அணியாமல் விடுவதற்கும் இடையில் பாரிய இடைவெளி உள்ளது என்பதனை உணரவேண்டும்.

உண்மையில் குப்பார்கள் எத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிஜாப் மற்றும் நிகாபை களையச் சொல்கிறார்கள் எனும் பின்னணியறிந்து அது நியாயமற்றது என்றும் அது தனிமனித சுதந்திரம் என்றும் அவரவர் மதச்சுதந்திரம் என்றும் வாதிட்டு நிகாபை நாம் பாதுகாக்க வேண்டும்.

இறுதியாக முஸ்லிமாகிய நாம் எமது தீனில் மிக உறுதியாகவும் திடசங்கட்பத்திடனும் இருக்க வேண்டும். இஸ்லாமும் முஸ்லிமும் ஏன் கொச்சைப் படுத்தப்படுகிறார்கள் எனும் பின்னணியை அவசியம் அறிந்து அதற்கான பரிகார சிந்தனை மாற்றீட்டை வழங்கி இஸ்லாம் முஸ்லிம்களை எவ்வாறு ஒரு பொக்கிசமாக கருதி கண்ணியமாக நடத்துகின்றது என்ற பேருண்மையை இன்றைய முதலாளித்து மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்ட தாராண்மைவாதக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டு இஸ்லாத்தை முன்வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment