Jul 6, 2014

இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு - இஸ்லாமிய முறைமை பகுதி-1


இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு - இஸ்லாமிய முறைமை - System of Islam - Nidam Al Islam

முஹம்மது(ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்(சுபு) அருளிய மார்க்கம்தான் இஸ்லாம். அது மனிதர்களுக்கும் படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வுக்கும் இடையிலுள்ள உறவையும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள உறவையும் ஒழுங்குபடுத்துகிறது. மனிதர்களுக்கும் படைப்பாளனுக்கும் இடையிலுள்ள உறவு அகீதா என்ற அடிப்படை கோட்பாடு மற்றும் வணக்க வழிபாட்டு (IBADAH) செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆகவே வாழ்வியல் குறித்த அனைத்து விவகாரங்களையும் பற்றி பேசக்கூடிய ஒரு சித்தாந்தமாக இஸ்லாம் விளங்குகிறது. எந்த வகையான புரோகித சடங்கு சம்பிரதாய விவகாரங்கள் குறித்து விவாதிக்கின்ற சமய தத்துவமாக அது விளங்கவில்லை. ஏகாதிபத்தியம் என்ற எதேச்சதிகாரத்திலிருந்து அது தன்னை தூரமாக்கிக் கொண்டுவிட்டது. ஏனெனில் புரோகிதர்கள் குழுவோ அல்லது வாழ்வியல் விவகாரங்களை மட்டும் கவனிக்கின்ற உலகாயுத குழுவோ இங்கு கிடையாது. இஸ்லாத்தை தழுவுகின்ற அனைவரும் முஸ்லிம்கள் என்றே கருதப்படுகிறார்கள். இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் கடமையிலும் உரிமையிலும் அனைவரும் சமமே. ஆகவே மதகுரு என்பவரோ அல்லது மதசார்பற்றவர் என்பவரோ இங்கு கிடையாது. ஏனெனில், இஸ்லாத்தின் ஆன்மீக அம்சம் என்பதன் பொருள் என்னவெனில், அனைத்துப் பொருட்களும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டு அவனுடைய கட்டளைப்படி ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பதாகும். மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றியும் அவைகளை சூழ்ந்துள்ளது எது என்பது பற்றியும் அவைகளோடு தொடர்புடையது எது என்பது பற்றியும் விளக்கும் இந்த மகத்தான கருத்து, கண்ணோட்டம் நமக்கு காண்பிப்பது என்னவென்றால் இந்த அனைத்துப் பொருட்களும் குறையுள்ளவை (Naaqis) முழுமையற்றவை (a’ajiz) தேவையுள்ளவை (Multtaj) என்பதைத்தான். இவை அனைத்தும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டு அவனுடைய கட்டளைப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்பதையும் மனிதன் இந்த வாழ்க்கையில் அவனுடைய உள்ளார்ந்த விருப்பங்களையும் (Instinct) உடல்சார்ந்த தேவைகளையும் (Organic Needs) நிறைவு செய்து கொள்ளும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு செயலாக்க அமைப்பு (System- Nidam) தேவை என்பதையும் எந்தவித சந்தேகமுமின்றி உறுதிப்படுத்துகிறது. மனிதன் முழுமையற்றவனாக இருப்பதாலும் நிறைவான அறிவற்றவனாக இருப்பதாலும் இந்த செயலாக்க அமைப்பு அவனிடமிருந்து உருவாக முடியாது. மேலும் இந்த அமைப்பை உருவாக்கும் மனிதனது ஆற்றல் வேறுபாடுகளுக்கும் மாறுபாடுகளுக்கும் முரண்பாடுகளுக்கும் உட்பட்டதாக இருக்கும். இது இந்த அமைப்பில் முரண்பாடுகளை உருவாக்குவதற்கும் மனிதனை துயரத்தில் ஆழ்த்துவதற்கும் வழிவகுத்துவிடும். ஆகவே செயலாக்க அமைப்பு அல்லாஹ்(சுபு)விடமிருந்துதான் வரவேண்டும். எனினும் இஸ்லாமிய செயலாக்க அமைப்புக்கு (System of Islam) இணக்கமாக இருக்கும் மனிதன் அது அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்துள்ளது என்பதை கருத்திற்கொள்வதைவிட இந்த அமைப்பின் உலகாயுத பயன்களை அடைந்து கொள்வதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டால், அங்கே ஆன்மீக அம்சம் அற்றுப்போகிறது. ஆகவே மனிதன் செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது, ஆன்மா (RUH) அவனிடத்தில் இருக்கும் வகையில், அல்லாஹ்(சுபு)வுடம் அவனுக்குள்ள உறவை விளங்கிக் கொண்ட அடிப்படையில், அவனுடைய (சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக தன்னுடைய செயல்பாடுகளை கண்டிப்பாக ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். இது ஏனெனில், ரூஹ் என்பது அல்லாஹ் (சுபு)வுடன் மனிதனுக்கு உள்ள உறவை அவன் உணர்ந்து கொள்வதாகும். செயல்பாடுகளை மேற்கொள்ளும் தருணத்தில் அல்லாஹ்(சுபு)வுடன் மனிதனுக்கு உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வு மனிதனுக்கு ஏற்படுவதுதான் இயற்பொருட்களையும் (Matter) ஆன்மாவையும் (RUH) ஒன்று கலப்பது என்பதாகும். ஆகவே அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வின் அடிப்படையில் மனிதன் அவனுடைய (சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக செயல்படுகிறான். செயல் என்பது இயற்பொருளாகும் (Matter). அந்த செயலை மேற்கொள்ளும்போது அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்ளும் உணர்வுதான் ஆன்மாவாகும் (Spirit). எனவே அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வோடு அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் விளங்கிக்கொண்ட உணர்வோடு அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளின்படி ஒருவரின் செயல் வழி நடத்தப்படுவதுதான் இயற்பொருளை ஆன்மாவுடன் கலப்பது என்பதாகும். இதனடிப்படையில் குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் கொண்டு வரப்பட்ட அஹ்காம் ஷரிஆவின் அடிப்படையில் ஒரு முஸ்லிம் அல்லாதவர் செயல்படும் போது அவரது செயல் ஆன்மாவினால் வழிநடத்தப்படுவதில்லை. மேலும் இயற்பொருளையும் ஆன்மாவையும் ஒன்று கலக்கும் அம்சமும் அவரது செயலில் இடம் பெறுவதில்லை. அவர் இஸ்லாத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை அவர் விளங்கிக் கொள்ளவில்லை என்ற உண்மைதான் இதற்கு காரணம். அவர் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பை (System of Islam) மட்டும் பாராட்டி ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் தன் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டார்.

இன்ஷா அல்லாஹ்
தொடரும்........

No comments:

Post a Comment