Jul 11, 2014

லெபனானில் இருந்தும் இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்!




காஸாவில் இருந்து அனுப்பபட்ட ரொக்கட் ஒன்று இஸ்ரேலின்
எரிவாயு நிலையம் ஒன்றில் விழுந்து வெடித்துள்ளது.

அத்துடன் லெபனான் பகுதியில் இருந்தும் இஸ்ரேல் மீது முதல் முறையாக ரொக்கட் ஏவப்பட்டுள்ளது.

எனினும் அதனை யார் ஏவினார்கள் என்பது இது வரை தெரியவில்லை.

குறித்த எரிவாயு நிலையம் மீதான தாக்குதலின் போது அதிக
உயரத்துக்கு தீப்பிழம்புகள் உயர்ந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் 3 பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இஸ்ரேல்அறிவித்துள்ளது.

அத்துடன் ஹமாஸ் போராளிகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் தென் பகுதியில் ரொக்கட்
தாக்குதல்களை நடாத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதல்களால்
இஸ்ரேலியர்களும் கதிகலங்கிப் போயுள்ளதாகவும் சர்வதேச
செய்திகள் கூறுகின்றன.

லெபனானின் எல்லைக்குள் இருந்து அதிகாலை 6.30
மணியளவில் 3 ரொக்கட்கள்
இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளதாகவும் அதற்குப் பதிலடியான இஸ்ரேல் 25 ஆட்லரிகளை ஏவி தாகுதல் நடத்தியதாகவும் லெபனான் இராணுவம் தெரிவிக்கின்றது.

எனினும் இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை. இத்தாக்குதலின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய லெபனான் இராணுவம்
விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

berunews.wordpress.com

No comments:

Post a Comment