Jul 11, 2014

அரபியர்கள் ஏன் சமாதானத்தை ஏற்க வேண்டும்?

1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பிரிட்டன் பலஸ்தீனை விட்டு விலகியது அதே தினத்தில் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு பிரகடனம் செய்யப்பட்டது அதனை முன்பு திட்டமிட்டவாறு பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் அதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியது. அதன் முதல் பிரதமராக டேவிட் பென் கரியன்- David Ben-Gurion- என்ற சியோனிச இயக்கத்தின் தலைவர் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டின் முதல் பிரதமாராக சியோனிச இயக்கத்தினால் தெரிவுசெய்யப்பட்டார் அரபு முஸ்லிம்கள் மிகவும் கடுமையானதும் தொடரானதுமான எதிர்ப்பை காட்டி வந்தனர்.

இந்த தொடரான எதிர்ப்பை ஒடுக்குவது தொடர்பாக 1953 ஆம் ஆண்டு சியோனிச உயர் பீட தலைவர்கள் கலந்துரையாடல்களை நடாத்தினர் அந்த கலந்துரையாடல் ஒன்றில் கருத்துரைத்த டேவிட் பென் கரியன் -David Ben-Gurion- அப்போது இவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக இயங்கிகொண்டிருந்தார்- அந்த கலந்துரையாடலில் பேசிய அவர் ‘‘வெளிநாடுகளில் நடக்கும் அரசியல் விவாதங்களில் அராபியர்கள் நமக்குத் தெரிவிக்கும் எதிர்ப்பைக் குறைத்துக் காட்டுவோம்.

ஆனால் நமக்கு உண்மைகள் தெரியும் அரசியல்ரீதியாக நாம் ஆக்கிரமிப்பாளர்கள், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடுகிறார்கள். இந்த நாடு அவர்களுடையது, ஏனெனில் அவர்கள் இங்கே வசிக்கிறார்கள். அவர்களுடைய பார்வையில் நாம் இந்த நாட்டை அபகரிக்க வந்துள்ளவர்கள், நாம் இன்னும் இங்கு வெளியாட்கள்தாம் அரபியர்கள் ஏன் சமாதானத்தை ஏற்க வேண்டும்? நான் ஒரு அரபியாக இருந்தால் இஸ்ரேலுடன் சமாதானம் செய்யமாட்டேன் இது இயற்கையானது என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment