Jul 19, 2014

சவூதி அரேபியாவின் உண்மையான முகம்

 
1.சவூதி அரேபியா மட்டுமல்ல கியூபா வடகொரியா பூடான் உட்பட 32 நாடுகளில் இஸ்ரேலியர்கள் உள்ளே நுழைய தடை உள்ளது .

2.இந்த நாடுகளில் எந்த வேலைவாய்ப்பும் இஸ்ரேலியனுக்கு கிடையாது.

3.சவூதி அரேபியாவில் இஸ்ரேலிய பொருட்களுக்கு தடை இல்லை .
ஆனால் பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து அங்கு தாயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்ய முஸ்லிம் அல்லாத வேறு நாடுகள் கூட தடை செய்துள்ளது .

4. சென்றமுறை காசா தாக்கப்பட்டபோது ,''தாக்குதலை நிறுத்தாவிட்டால் இஸ்ரேலுடன் உள்ள அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படும் ''என மிரட்டல் விடுத்து காசா மக்களை காப்பாற்றிய எகிப்தின் முர்சியின் ஆட்சியை கவிழ்க்க பின்னணியில் இருந்து செயல்பட்டதே இஸ்ரேலும் சவுதியும் தான் .

5.கள்ளத்தனமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே அகற்றுவோம் என முழங்கிவந்த ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு இஸ்ரேலுடன் கைகோர்த்து முட்டுக்கட்டை போட்டு ஈரானின் பொருளாதாரத்தை சிதைத்தும் சவுதிதான் .

6. கடைசியாக .. பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதியில் அமைக்கப்பட்ட செக் போஸ்ட்களிலும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிறைகளிலும் பாதுகாப்பு பணியில் இருந்துகொண்டு பெண்களையும் சிறுவர்களையும் கொடுமைப்படுத்திவரும் இங்லாந்தின் G4S என்ற யூத தனியார் செக்யூரிட்டி கம்பெனியின் வசம்தான் ஹஜ் செக்யூரிட்டி காண்ட்ராக்டும் கொடுக்கப்பட்டுள்ளது ..

பசியில் உயிரை விடும் நிலையில் இருப்பவனுக்கு ஒருவேளை சோறு கொடுக்காமல் ,அவன் செத்தவுடன் தங்கத்துல சிலை வைத்து என்ன பயன் ...

1.http://www.theguardian.com/.../hajj-muslims-worker...

2.http://electronicintifada.net/.../security-firm-g4s...

No comments:

Post a Comment