Jul 19, 2014

காலம் மலரும் முயற்சியோடு காத்திருப்போம் ...........



ஹிஜ்ரி 656 ஆம் ஆண்டு சபர் மாதம் பிறை 4 அன்று மங்கோலியர்கள் (தாத்தாரியர் ) பக்தாத்தில் இருந்த இஸ்லாமிய கிலாபத்துக்கு எதிராக படை எடுத்தனர் .ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லீம்களை படுகொலை செய்தனர் பக்தாதை பிணக்காடாக மாற்றினர் . முஸ்லீம்களின் அறிவுப் பொக்கிசமான நூல் நிலையத்தை சின்னா பின்னமாக்கினர் . அந்த 'பைத்துல் ஹிக்மா ' விலுள்ள நூல்களை 'யூப்பிரடீஸ் ' நதியில் வீசியபோது அந்த நதியே சில மாதங்கள் கருப்பாக ஓடியதாக வரலாறு கண்ணீரோடு சொல்கிறது .
அதன் பின்னரும் முஜ்தஹித்களின் பிரச்சார தொடர் முயற்சிகளும் , முஜாஹித்களின் தொடர் சமரும் மீண்டும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக தொடர்ந்தது .தடுக்க முடியாது எனக்கருதிய தாத்தாரிய வாட்பலம் 'ஜைன் ஜலூத்தில் ' ஒரு ரமலானில் முஸ்லீம்களால் தவிடு பொடியாக்கப் பட்டது . அதே நேரம் சிந்தனா தரத்தில் தாத்தாரியர் இஸ்லாத்தினால் கவரவும் பட்டார்கள் .காலம் மலர்ந்தது மீண்டும் கிலாபாவின் கீழ் இஸ்லாமிய உம்மத் அணிதிரண்டது .

No comments:

Post a Comment