Jul 22, 2014

புனித பூமி எவ்வாறு மீட்டு எடுப்பது...??



இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் பூமி மீதான ஆக்கிரமிப்பிற்கு வயது அறுபத்து ஆறுகிறது!


“ தன் அடியாரை (கஅபாவாகிய) சிறப்புப்பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன்; (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கிறோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே, செவியேற்கிறவன், பார்க்கிறவன். (அல் இஸ்ரா:1)

அருள்பாலிக்கப்பட்ட பூமியான பலஸ்தீனை - இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த அந்த பூமியை – அதன் நகரான அல் குத்ஸின் அதிகாரத்தை மிகவும் பணிவுடன் நடந்து வந்து, எமது இரண்டாம் கலீபா உமர் இப்னு அல் கத்தாப் (றழி) அவர்கள் கைப்பற்றிக்கொண்டதன் விளைவாகவே அந்த பூமி இஸ்லாத்திற்காக முதன்முதலாக திறந்து விடப்பட்டது. உமர்(றழி) அவர்கள் பலஸ்தீனத்தை தனது இஸ்லாமிய கிலாபத்தின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் நீதியையும், அமைதியையும் அந்த பூமியில் நு}ற்றாண்டுகளாக நிலைகொள்ளச் செய்வதற்கு வழி செய்ததுடன், அங்கே முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும், யூதர்களும் அக்கம் பக்கமாக, அண்டைவீட்டுக்காரர்களாக பிணைந்து வாழ்வதற்கும் அத்திவாரமிட்டார்.

எனினும் 1917ம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் பலஸ்தீன பூமி சூரையாடப்பட்டு, 1948ம் ஆண்டில் அந்த பூமியின் சொந்தக்காரர்களல்லாத, மேற்குலகில் அலைக்கழிந்து கொண்டிருந்த பிரிதொரு அந்நிய சமூகத்திற்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது. இதே பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய மேற்குலக அரசுகளால் படுகொலைகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆண்டாண்டு காலமாக ஆட்பட்ட ஐரோப்பிய யூத சமூகமே அந்த அந்நிய சமூகமாகும். எனினும் ஐரோப்பியர்களால் பெரிதும் துன்புறுத்தப்பட்ட யூதர்களை அகற்றுவதற்கு ஐரோப்பியர்கள் வழங்க நினைத்த பூமி ஐரோப்பியர்களுக்கு சொந்தமானதல்ல. மாறாக முஸ்லிம்களின் உணர்வுடனும், வரலாற்றுடனும் ஒன்றித்த பலஸ்தீன பூமியையேயாகும்.

எனவே இதனை சாத்தியப்படுத்துவதற்கு மிகக் கொடூரமான, இராணுவமயப்படுத்தப்பட்ட ஓர் இரும்பு அரசை அங்கே நிறுவ வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த யூத அரசு தனது 60 வருடகால வரலாற்றில் அதனது இருப்பிற்காக எத்தகைய அநியாயங்களையும், அட்டூழியங்களையும் எதுவித அச்சமுமின்றி மேற்கொண்டு வருவதை நாம் காண்கிறோம். மிலேச்சத்தனமான படுகொலைகள், வகைதொகையின்றிய கைதுகள், கொடூரமான சித்தரவதைகள், ஈவிரக்கமற்ற பொருளாதாரத்தடைகள் என்பவற்றை இஸ்ரேலிய அரசு பலஸ்தீன மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளது. இன்று எந்தளவிற்கென்றால், முஸ்லிம்கள் செறிந்து வாழும் காஸா பகுதிக்கு செல்லும் அனைத்து விநியோகப்பாதைகளையும் கட்டுப்படுத்தி அங்குள்ள முஸ்லிம்கள் பசியாலும், பட்டினியாலும், நோயாலும் வதைப்பட்டு மடிவதை கண்டு களிக்கும் அரக்கர்களாக இவர்கள் மாறியிருக்கிறார்கள்.

கண்ணியத்திற்குரிய முஸ்லிம்களே!

இந்த இருண்ட மணிநேரங்களில், பலஸ்தீன ஆக்கிரமிப்பின் ஆறு தசாப்த்த கால முடிவில் இஸ்லாத்திற்காக எழுந்து நிற்கும்மாறும், பலஸ்தீன முஸ்லிம்களின் விடுதலைக்காக இஸ்லாம் காட்டும் வழிமுறையில் வீறுகொண்டு போராடுமாறும் உங்களை வேண்டுகோள் விடுக்கிறோம். அதற்காக கீழ்வரும் மைற்கற்களை நீங்கள் துணிச்சலுடன் கடக்க தயாராகுங்கள்.

1. முதலில் பலஸ்தீன் மீதான இந்த ஆக்கிரமிப்பை (இஸ்ரேலிய அரசை) சட்ட ரதியானதாக நாம் ஏற்றுக்கொள்ளலாகாது. அதனை இஸ்லாமும் ஏற்றுக்கொள்ளாது – முஸ்லிம்களாகிய நாமும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இஸ்லாம் பலஸ்தீன பூமியின் ஓர் யாண் நிலத்தையேனும் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்க எந்த நிலையிலும் அனுமதிக்காது. எனவே 60 வருட கால ஆக்கிரமிப்பின் பின்னும் கூட முஸ்லிம்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்க வேண்டும். சீனா எவ்வாறு தாய்வானை ஏற்றுக்கொள்ளவில்லையோ – ரஸ்யா எவ்வாறு இன்னும் கொசோவாவை அங்கீகரிக்கவில்லையோ அதேபோல உலக முஸ்லிம்களும் இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முஸ்லிம்கள் கொண்டுள்ள இந்த நிலைப்பாட்டிற்கு, முஸ்லிம்களின் பூமியை எந்த நிலையிலும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கக்கூடாது என்று அல்லாஹ்(சுபு)வும், அவனது து}தர்(ஸல்) அவர்களும் இட்ட கட்டளையே காரணமோழிய வேறொரு நோக்கமும் அவர்களுக்கு கிடையாது.

2. பலஸ்தீனத்திலும், ஏனைய அனைத்து முஸ்லிம் உலகிலும் மேற்குலக காலனித்துவ தலையீட்டினை நாம் எதிர்க்க வேண்டியதுடன், அவர்களின் தலையீட்டினை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடவேண்டும். இத்தகைய அந்நியத்தலையீடுகள், தலையிடும் நாடுகளின் நலன்களை மாத்திரம் நோக்கமாக கொண்டெதேயல்லாமல், அது பலஸ்தீன பிராந்தியத்தில் தொடர்ந்தும் வன்முறையையும், இரத்தக்களரியையும் அதிகரிக்கவே வழிகுக்கும். 1948ம் ஆண்டில் கூட ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் பாதுகாப்பை பிரித்தானியா கருத்திற்கொள்ளவில்லை. மாறாக அதன் உள்நோக்கு வேறாகவே இருந்தது. இஸ்ரேல் அரசின் உருவாக்கத்திற்கு முன்னர் சுமார் 40 வருடங்களுக்கு முன்னரேயே பலஸ்தீன பிராந்தியத்தின் மீதான காலனித்துவத்தின் ஈடுபாடு வேறொன்றாக இருந்ததனை முன்னாள் பிரித்தானியாவின் பிரதம மந்திரி சேர். ஹென்றி கெம்மல் பென்னர்மேனின் கூற்று உறுதிப்படுத்துகிறது. அவர் பின்வருமாறு சொல்கிறார்.
“ அங்கே மக்கள் பரந்து விரிந்த பிராந்தியங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அங்கே அபரிமிதமான வளங்கள் மறைந்திருக்கின்றன. உலகின் முக்கிய போக்குவரத்து பாதைகளை அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்களுடைய பூமிகள் மனித நாகாPகத்தினதும், சமயங்களினதும் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும் இருக்கிறது. இந்த மக்கள் ஒரே நம்பிக்கையை, ஒரே மொழியை, ஒரே வரலாற்றை, ஒரே அபிலாசையை கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் எந்தத்தடைகளாலும் இவர்களை ஒருவரிடமிருந்து ஒருவராக பிரிக்க முடியாதுள்ளது… … இவற்றையெல்லாம் மிகத் தீவிரமாக கருத்திற்கொண்டு, இந்த பூமி தனது கிளைகளையெல்லாம் ஓர் இடத்தில் குவித்து முடிவுறாத யுத்தங்களில் கூட தனது சக்தியை தொடர்ந்து வெளிப்பாச்சுவதை தடுப்பதற்காக, இந்த பூமியின் இருதயத்திலே ஓர் அந்நிய அலகினை (நாட்டினை) நாம் ஏற்படுத்த வேண்டும். அந்த அந்நிய அலகு, மேற்குலகு அந்த பூமியில் தனது இலக்கினை அடைந்து கொள்வதற்கான ஒரு தாவு தளமாகவும் இருக்க வேண்டும்.”

ஆகவே இஸ்ரேல் எனப்படும் இந்த சியோனிச அரசு என்பதுகூட மேற்குலகின் ஓர் கருவி என்பதற்கு மேலாக ஒன்றுமில்லை. இன்று 66 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யூ புஷ் மத்திய கிழக்கிற்கு பயணித்தபோது கூட இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் காணவில்லை. ஐக்கிய அமெரிக்கா முஸ்லிம் உலகை மதச்சார்பற்ற உலகாக மாற்ற முயன்றுவரும் தனது வியூகத்தின் ஓர் அங்கமாக இஸ்ரேலின் கொடூரங்களிலும், படுகொலைகளிலும் தோளோடு தோள் நின்று ஒத்துழைத்து வருகின்றது. பிரித்தானியா எவ்வாறு இஸ்ரேலின் உருவாக்கத்தை முஸ்லிம்களினதும், இஸ்லாமிய ஆட்சியினதும் ஒற்றுமைக்கு பிரதான தடைக்கல்லாக கருதியதோ அதே போன்று அமெரிக்கா தனது “பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தின் (இஸ்லாத்திற்கு எதிரான யுத்தத்தின்)” பிரதான அங்கமாகவே இஸ்ரேலினை கருதுகிறது.

3. நாங்கள் இன்று மத்திய கிழக்கில் முன்னெடுக்கப்படும் போலியான சமாதான நடைமுறைகளின் உண்மைநிலையினை அம்பலப்படுத்த வேண்டும். இந்த சமாதான நடைமுறைகள் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ளதே தவிர அவை முஸ்லிம்களுக்கு நீதியை வழங்குவதற்கோ, ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ மேற்கொள்ளப்படுபவையல்ல. யாரெல்லாம் பலஸ்தீனப் பிரச்சனைக்கு ‘இரு அரசுத் தீர்வை’ முன்வைத்து, அதற்காக குரல்கொடுக்கிறார்களோ, அவர்கள் பலஸ்தீன பூமியை அந்நியர்களுக்கு தாரைவார்க்கிறார்கள். மேலும் இஸ்ரேலின் கொடூரங்களையும், இனச்சுத்திகரிப்பையும் அங்கீகரித்து அவர்களை திருப்திப்படுத்த நினைக்கிறார்கள். ஓர் நாட்டின் குடிமக்களை தமது பலப்பிரயோகத்தைக் கொண்டு வெளியேற்றிவிட்டு அந்த நாட்டை சூரையாடிக்கொண்டவர்களுடன் எவ்வாறு நாம் பேச்சுக்களில் ஈடுபட முடியும்? மாறாக இஸ்ரேல் அரசு எந்த விலையினை செலுத்தியேனும் தனது சட்ட hPதியற்ற ஆதிக்கத்தினை தக்க வைத்துக்கொள்ளவே முனையும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே சமாதான முயற்சிகளால் உருவாகும் பலஸ்தீன அரசுக்கு உண்மையான விடுதலையோ, உண்மையான பலமோ, உண்மையான வளமோ எட்டப்போவதில்லை என்பதே யதார்த்தமாகும். இத்தகைய சமாதான நடைமுறைகளில் வாக்குறுதியளிக்கப்படும் பலஸ்தீன அரசு என்பது வெறும் பித்தலாட்டத்தனமேயொழிய வேறொன்றல்ல. மாறாக ‘இரு அரச தீர்வு’ எனும் செயற்திட்டம் இஸ்ரேல் தன்னை, அல்லது தனது இருப்பை சட்ட hPதியாக நியாயப்படுத்திக் கொள்ள எடுக்கும் ஓர் கடைசி முயற்சி என்பதை நாம் துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும். இதனாலேயே இஸ்ரேலின் இன்றைய பிரதம மந்திரி இவ்வாறு கூறுகிறார்.

“ எந்தத்தினத்தில் இரு அரசுத் தீர்வு என்ற எமது செயற்திட்டம் இடிந்து விழுகிறதோ, அன்று நாங்கள் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றதைப்போன்ற – வாக்குரிமைக்கான சம அந்தஸ்தினை பெற்றுக்கொள்ளும் ஒருவகைப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும். இந்த நிலை ஏற்படும் போது இஸ்ரேல் அரசின் கதையும் முடிந்துவிடும்.”

எனவே இதுதான் இந்த சமாதான முயற்சிகளின் பின்னாலுள்ள யதார்த்தமாகும். ஆகவே எவரேனும் இந்த சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் - அவர் கடந்த 66 வருடகாலமாக தொடரும் ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும் ஆதரவு தெரிவித்தவராகின்றார். 4. இஸ்ரேலினை வாய்களால் மாத்திரம் சாடிக்கொண்டு அதேநேரத்தில் உண்மையில் ஆதரித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் உலகை ஆளும் அனைத்து கொடுங்கோண்மை ஆட்சியாளர்களையும் நாம் நிராகரிக்க வேண்டும். அவர்கள்தான் ‘சமாதான முயற்சிகள்’ என்ற பெயரால் ‘இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிலைப்பதற்காகவும், அதனை பாதுகாப்பதற்காகவும், முன்னிலையில் நின்று உழைப்பவர்கள். அவர்கள்தான் தமது மேற்குலக காலனித்துவ எஜமானர்களின் அடிமைகளாகவும், இந்த போலியான சமாதான நடைமுறை மாத்திரமே முஸ்லிம்களுக்கு முன் இருக்கும் ஒரேயொரு தீர்வு எனக் கூவி விற்கும் வியாபாரிகளாகவும் இருக்கின்றனர். காட்டுமிராண்டித்தனமான இஸ்ரேலிய ஆக்கிரப்பை தணிக்கை செய்து உலகிற்கு வழங்குபவர்களும், இஸ்ரேலின் பிடியிலிருந்து பலஸ்தீன பூமியை மீட்க தத்தமது நாடுகளில் முனையும் முஸ்லிம்களை தமது அரச படைகளை பாவித்து அடக்கி அநியாயம் செய்வர்களும் இந்த முஸ்லிம் நாடுகளின் தலைவர்களேயாகும். எனவே இத்தகைய கொடிய கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து முஸ்லிம் உலகை மீட்டு அதனை கிலாபத்தின் கையில் ஒப்படைக்க வேண்டும்.

5. நாம் பலஸ்தீன பிரச்சனையை முழுமையாகக் கையாளக்கூடிய, பலஸ்தீன பூமியை மீட்டு அங்கே நீதியான ஆட்சியை நிலைநாட்டக்கூடிய, நு}ற்றாண்டு காலமாக அங்கு வாழ்ந்த அனைத்து சமூகங்களையும் நிம்மதியாக வாழ வைக்கக்கூடிய இஸ்லாமிய கிலாபத்தை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்கு முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும். உண்மையில் இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் புனித பூமியான பலஸ்தீனை மீட்பதற்கு - சதாப்தங்களாக நிலவும் ஆக்கிரமிப்பினையும், கொடுமைகளையும் தனது அனைத்து ஆளுமைகளையும் பிரயோகித்து முடிவுக்கு கொண்டு வரக்கூடிய கிலாபத்தினால் மட்டுமே முடியும். ஏழு நு}ற்றாண்டுகளுக்கு முன்னர் ஸலாஹ}த்தீன் அய்யூபி எவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பை வெற்றி கொள்வதற்கு முன் முஸ்லிம் பூமிகளில் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்தி, முஸ்லிம்களின் வளங்களையெல்லாம் ஒன்று குவித்து நெறிப்படுத்தினாரோ – அதுபோலவே இந்த பணியினை மேற்கொள்வதற்கு கிலாபத்தினால் மாத்திரமே முடியும்.

கிலாபத்தின் பலஸ்தீன மீட்பானது யூதர்களை அநீதியாக நடத்துவதையோ, பலஸ்தீனர்களை யூதர்கள் இனச்சுத்திகரிப்பு செய்ததைப்போன்ற யூத இனச்சுத்திகரிப்பையோ குறிக்காது. யூதர்களும், முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும் இஸ்லாத்தின் பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் நு}ற்றாண்டு காலமாக எவ்வாறு கிலாபத்தின் கீழ் வாழ்ந்தார்களோ அதே போன்றதொரு சுபீட்சமான நிலையையே அது தோற்றுவிக்கும்.

ரஸ}ல்(ஸல்) சொன்னார்கள்.
“ எவரொருவர் திம்மி (கிலாபத்தின் கீழிருக்கும் முஸ்லிம் அல்லாத பிரஜைகள்)க்கு நோவினை செய்கிறாரோ, அவர் எனக்கு நோவினை செய்கிறார்.”

ஆகவே கிலாபாவின் மீள் உருவாக்கமே, அல்லாஹ்(சுபு) உதவியுடன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து பலஸ்தீனை விடுதலை செய்யும் ஒரேயொரு தீர்வாகும். கிலாபா மாத்திரமே பலஸ்தீனத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு நீதியையும், சுபீட்சத்தையும் மலரச் செய்யும் என்பதால் நாம் அனைவரும் அணிதிரண்டு கிலாபத்தை உருவாக்கும் போராட்டத்தில் சங்கமிப்போம்!

“ விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுக்கும்(அவனுடைய) து}தருக்கும் - உங்களைவ வாழ வைப்பதன்பால் (அல்லாஹ்வின் து}தராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள். (அல் அன்பால்: 24)

No comments:

Post a Comment