சுற்றியிருந்த முஸ்லீம் தேசங்களின் புறக்கணிப்பு மற்றும் இஸ்ரேல் சார் அரசியல் மூலம் ஏமாற்றம் அடைந்த பாலஸ்தீன மண்ணின் மைந்தர்கள் நடாத்தும் விடுதலைக்கான ஜீவமரணப்போராட்டமே இன்றைய காஸா சமராகும் .யூத இஸ்ரேலின் தொடக்க அரசியலே கிலாபா எனும் இஸ்லாமிய அரசியலை வீழ்த்தி இஸ்லாமிய பெருநிலத்தை தேசிய கடிவாளத்தால் பூட்டியதன் பின்னரே சாத்தியமானது.
எனவே கிலாபா அரசின் மீள்வரவின் மூலம் மாத்திரமே பாலஸ்தீன் உண்மையான சுதந்திரத்தை சுவைக்க முடியும் . எனவே அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது முதல்நிலை பணி.ஆனாலும் அதுவரை யூதனின் அடாவடி அரசியலை சகிக்க முடியாது என்பதே இன்றைய போராட்டத்துக்கான ஒரே நியாயமாகும்.
ஊகங்களையும் ,கணிப்புகளையும் தாண்டியதே யுத்தமாகும் .அதிலும் மக்கள் மகமாகியுள்ள ஒரு கெரில்லா அணியை யூதர்கள் எதிர்கொள்வது ஒரு பலத்த சவாலே என நடப்பு நிலவரங்கள் காட்டி நிற்கின்றன. சிலவேளை சிவிலியன் பாதிப்பு வீதத்தை பன்மடங்கு ஆக்குவதன் மூலம் எதிர் சமருக்கான வலுவை கணிசமாக கட்டுப்படுத்தலாம் ;என்பதே யூதர்களின் எதிர்பார்ப்பாக இருக்கலாம் .
காரணம் நகர் யுத்தத்தின் அடிப்படையே சிவிலியன்களின் ஆதரவு தளத்திலேதான் தங்கியிருக்கும் . போராளிகளை தனிமைப்படுத்தும் யுத்த அரசியல் பற்றி யூத இராணுவம் சிந்திக்கின்றது .தளபாட ரீதியான ஆயுத சமநிலையில் ,மற்றும் ஆள்வளம் என நோக்கும்போது காஸா யூத மரபு இராணுவ அணியால் மிக இலகுவாக சுற்றி வளைத்து கைப்பற்ற கூடியது .இருந்தும் போரிடும் வலிமையை பொருத்தமட்டில் யூதர்களுக்கு பலத்த நம்பிக்கையீனம் நிலவுகிறது .
அதாவது இங்கு மிகப்பிரதானமான கேள்விக்குறி யூத இராணுவத்துக்கு இருக்கிறது . கிடைக்கும் பொருட்களை வைத்து இஸ்ரேலின் இதயம் வரை 'சஹாதத் ' தாக்குதல் மூலம் அச்சப்படுத்திய அதே அணியையே இன்று சந்திக்கிறார்கள் . சென்றமுறை எட்டநின்று சொட்டிப்பார்த்து விட்டு சென்றவன் ,இம்முறை தரைப்படை அனுப்ப முடிவெடுத்த போதே போராளிகள் 'டெத்லி வெல்கம்' சொல்லி விட்டார்கள்.
யஹ்யா அய்யாஸ் ,மொஹிடீன் சரீப் போன்றவர்கள் இஸ்ரேலால் இலகுவாக மறக்கக் கூடியவர்கள் அல்ல .இன்று அவ்வாறானவர்களின் வீடு தேடி சென்று இருக்கிறார்கள் !!
என்ன யூ .என் வந்து பேரக் குழந்தையான தன்னை காப்பாற்றும் .என்ற இறுதி நம்பிக்கையில் ஒரு 'டிப்லோமடிக் பாயிண்ட்'உடன் பலிபீடத்தில் யூத வீரர்களின் தலையை வைக்க சொல்லிவிட்டது இஸ்ரேல் !! பொறுத்திருந்து பார்ப்போம் .
Bro Abdul Raheem
No comments:
Post a Comment