Jul 15, 2014

இஸ்ரேலிய டி.வி. ஒளிபரப்பை ‘ஹைஜாக்’ பண்ணியதா ஹமாஸ் ?




இஸ்ரேலை நோக்கி காசா பகுதியில் இருந்து ஏவுகணைகளை ஏவிக்கொண்டிருக்கும் ஹமாஸ் இயக்கம், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இஸ்ரேலில் சில குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இதையடுத்து, ஹமாஸ்-இஸ்ரேல் யுத்தத்தின் 7-வது நாளாகிய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இஸ்ரேலில் இருந்து ஒளிபரப்பாகும் சில டி.வி. சேனல்களை ‘ஹைஜாக்’ பண்ணும் முயற்சி ஒன்று, அமோஸ் சாட்டலைட் ஊடாக ஹமாஸ் இயக்க தொழில்நுட்பவியலாளர்களால் செய்து பார்க்கப்பட்டது.

அப்போது அந்த டி.வி. சேனல்களில் பிரைம்-டைம் செய்தியறிக்கை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

நேற்றிரவு அமோஸ் சாட்டலைட் ஊடாக இஸ்ரேலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சேனல் 2, சேனல் 10 தொலைக்காட்சி ஒளிபரப்பை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது ஹமாஸ்.

ஆனால், சுமார் 120 செக்கன்டுகளே இவர்களால் அந்த சேனல்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது. 2 நிமிடங்களின்பின், செய்தியறிக்கை தொடர்ந்தது.

No comments:

Post a Comment