Jul 15, 2014

இஸ்ரேலின் மேல் பறந்த ஹமாஸின் ட்ரோன் விமானம்



இஸ்ரேலின் மேல் பறந்த ஹமாஸின் ட்ரோன் விமானம் - பற்றியட் ஏவுகணை தாக்குதல் மூலம் வீழ்த்தியது இஸ்ரேல்...

இஸ்ரேலிய ராணுவத்தின் மீது அல்-கஸ்ஸாம் படையணி பல புதிய யுக்திகளை கொண்டு தாக்குதல்களை நடாத்தி வருவதை கடந்த சில நாட்களாக காணக்கூடியதாக இருக்கிறது. கடலின் அடியில் சென்று இஸ்ரேலிய படைத்தளம் மீதான தாக்குதலை நடாத்தியமை இஸ்ரேலிய இராணுவம் எதிர்பார்க்காத ஒன்று. அது போல் நேற்றும் ஒரு முயற்ச்சியில் இறங்கியிருந்தது அல்-கஸ்ஸாம் படையணி. சிறிய ரக ட்ரோன் விமானம் போன்ற ஒன்றை இஸ்ரேலின் ராடார் திரையில் கண்ட இராணுவ கட்டுப்பாட்டு மைய உத்தியோகத்தினர், உடனடியாகவே அதனை இராணுத்தின் தலைமையத்திற்கு தெரிவித்தனர்.

உடன் செயலில் இறங்கிய இராணும் தரையில் இருந்து வானை நோக்கி சென்று தாக்கும் பட்றியட் ஏவுகணைகளை அந்த விமானத்தை நோக்கி ஏவினர். வானில் வைத்தே அது சுடப்பட்டது. இஸ்ரேலின் மத்திய பகுதியில் காணப்பட்ட அந்த விமானம் அதன் கடற்கரையை நோக்கி பறப்பில் ஈடுபட்ட போதே கண்காணிப்பு ராடர்களினால் அவதானிக்கப்பட்டது. அதன் சிதறிய பாகங்களில் சில கடலில் விழுந்திருக்கலாம் என எண்ணிய இஸ்ரேலிய கடற்படை அதனை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சாதாரண சிறுவர்கள் ரிமோட் மூலம் இயக்கும் கிளைடர் ரக விமானத்தின் அப்-கிரேட் மொடலாக அது இருக்கலாம் என செய்தி வெளியிட்ட இஸ்ரேலிய ஊடகங்கள் பின்னர் அது ட்ரோன் வகை ஆளில்லா பறப்பு விமான வகையை சார்ந்தது என செய்தி வெளியிட்டன. 05 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை அது சுமந்து வந்துள்ளதாகவம், ஏதாவது இல்க்கின் அருகில் விமானத்தை செங்குத்தாக வீழ்த்துவதுடன் அதனை வெடிக்க வைப்பதே பலஸ்தீன பயங்கரவாதிகளின் நோக்கமாக இருக்கலாம் என இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விமானம் ஜெரூஸலம் பகுதியில் உள்ள ஹமாஸின் சிலீப்பர் செல் ஒன்றினால் வானுயர்த்தப்பட்டதா அல்லது காஸாவில் இருந்தே கிளம்பி வந்ததா என்பது தெளிவாக இதுவரை இஸ்ரேலிய அரசால் அறிய முடியவில்லை. அல்லது அவர்கள் அதனை தெரியப்படுத்தவில்லை. ஒரு சிறிய ட்ரோனை வீழ்த்த 03 பற்றியட் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. பறந்த அந்த விமானத்தை போல பல விமானங்களை வாங்க முடியும் ஒரு பற்றியட் ஏவுகணையின் விளைக்கு. காஸாவில் இருந்து ஒரு ஈ பறந்து வந்தாலும் பற்றியட்டால் சுடும் நிலை இஸ்ரேலிற்கு. இதனை அதன் பொருளாதாரம் தொடர்ந்தும் தாங்காது.

பொதுவாக ஹமாஸின் போராளிகள் உள்ளூர் தயாரிப்பு ரொக்கட்களை இஸ்ரேலின் அயன் டோமை தாண்டி வீசுகின்றனர். இவற்றை அழித்தொழிக்க அமெரிக்க தயாரிப்பான பற்றியட் ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்துகிறது. 200 டொலர் ரொக்கெட்டை வீழ்த்த 2000 டொலர் வரை செலவு பண்ண வேண்டிய நிலை இஸ்ரேலிய அரசிற்கு.

இன்னும் என்னென்ன புதுமைகளை ஹமாஸ் செய்யும் என்பது தெரியாத வினா. ஆனால் நிச்சயம் அவற்றை தடுக்க இஸ்ரேலிய அரசு பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment