Jul 18, 2014

பாலஸ்தீன் விவகாரம் அதில் வெட்கப்பட வேண்டிய உண்மை என்ன ?


பார்க்கும் கோணத்தில் இருந்துதான் தீர்வின் தேடல்களும் இருக்கும் .பாலஸ்தீன் விவகாரம் தொடர்பில் முஸ்லீம் உம்மாவின் நிலைப்பாடுகள் இவ்வாறுதான் அமைந்துள்ளன . இஸ்லாத்தின் பொது எதிரியான யஹூதி ,நசாரா தொடபில் உணர்வு நிலையும் ,நடவடிக்கை நிலையும் இரு வேறுபட்ட கருத்தியல்களை சமரசப்படுத்தி திருப்தி காணுவது தான் முஸ்லீம் உம்மாவின் முடிவாக இருக்குமானால் எதிரியின் மேலாதிக்கமும் அவனது அரசியல் இராஜதந்திரமும் வெற்றி பெற்றுள்ளது எனும் மோசமான செய்தியை விட இன்னொரு கருத்தை எம்மால் கூறமுடியாதுள்ளது .

முதலாவது பாலஸ்தீன் விவகாரம் ஒரு தேசத்தின் பிரச்சினையோ ,தேசியத்தின் பிரச்சினையோ அல்ல என்பதில் முஸ்லீம் உம்மாவிடம் தெளிவான முடிவில்லை .ஆனால் பாலஸ்தீன் முஸ்லீம் உம்மாவுக்கு சொந்தமானது எனும் கருத்தியல் எல்லா முஸ்லீம்களிடமும் காணப்படுகின்றது . இரண்டாவது இஸ்ரேல் !தொடர்பான முஸ்லீம் உம்மாவின் உறுதியான நிலைப்பாடுகளில் தளர்வு இந்தத் தளர்வு இரண்டு தேசியங்களின் (பாலஸ்தீன் ,இஸ்ரேல் ) விவகாரமாக எதிரிகளால் எடுத்து வைக்கப்பட்ட கோணத்தில் இருந்து சிந்திக்க தொடங்கியமை .

அதாவது ஆக்கிரமித்துள்ள யஹூதி எதிரிதான் எனும் உணர்வும் இஸ்ரேல் ,பாலஸ்தீன் எனும் தேசிய நிலைப்பாடும் சமரசப்படுத்தப் படுகின்றது !? இப்போது இஸ்ரேல் எனும் தேசத்தை முஸ்லீம் உம்மத் அங்கீகரித்தே பாலஸ்தீன் போராட்டத்தில் களம் குதிக்க தூண்டப்படுகின்றது . இஸ்ரேலின் அங்கீகாரம் முஸ்லீம்களாலேயே கொடுக்கப் படுமானால் அது சரியான போராட்டமா !? இஸ்ரேல் என்பதன் அர்த்தம் முஸ்லீம்களால் அறிவு ரீதியாக உணரப்பட்டு ,செயல் ரீதியாக எதிர்க்கப்படவேண்டும் . இப்போது அந்தப் பெயரே அருவருப்பானதாக மாறும் . வெட்கத்தை விட்டு சொன்னால் அப்படி ஒரு உண்மையான போராட்டம் இன்று இல்லை . நிர்ப்பந்தம் ,மற்றும் விலை போதல் எனும் வட்டத்தை சுற்றியே பாலஸ்தீன் போராட்டம் வளைக்கப் பட்டிருக்கின்றது .

யஹூதியத் இரண்டு வகையான தாக்குதல் குறிகளை இந்த போராட்ட இயக்கங்கள் மீது இட்டுள்ளது .ஓன்று தமது இராணுவ வலிமை ,பாதுகாப்பு என்பவற்றுக்கு அச்சுறுத்தலாக அமையும் இராணுவ வியூகம் மிக்க தனிமனிதர்கள் ,இரண்டு தம் மீதான அரசியல் அங்கீகாரத்தை கேள்விக் குறியாக்கும் சித்தாந்த வாதிகள் ,இதுவரை அந்த இலக்குகளை அழிப்பதை தெளிவாகவும் , நிதானத்தோடும் செய்து வருகின்றது .

அது குறைந்த பட்சம் அவர்களைமௌனிகளாக்குவது அல்லது தேசிய் போராட்ட கருத்தை பேசுபவர்களாக மாற்றுவது அல்லது அவர்களை கொலை செய்வது . இதுதான் இன்றைய பாலஸ்தீன போராட்டக் களம் ! எனும் கசப்பான உண்மையை வெறுப்போடு முஸ்லீம் உம்மத் விழுங்கியே ஆகவேண்டியுள்ளது .

இப்போது முஸ்லீம் உம்மா முடிவெடுக்க வேண்டிய தருணம் அது இஸ்லாத்தின் எதிரி தேசிய பாத்திரத்தில்( இஸ்ரேல் ,பாலஸ்தீன் எனும்) சமரசப் பண்டிக்கரியை ஜனநாயக சுவையூட்டியோடு சமைத்து எம்முன் வைத்துள்ளான் . அதை இஸ்லாத்தோடு பிசைந்து நாம் உண்பதா இல்லையா !!? எனும் முடிவே அது .

அனேகமாக பாரிய தியாகங்களோடும், இழப்புக்களோடும் களம் குதித்த இஸ்லாமிய இயக்கங்கள் தமது வரலாற்று இழப்புக்களை முட்டாள் தனமாக முடிவெடுத்து ,பலிகொடுத்த தலைவர்களையும் ,உறுப்பினர்களையும் அரசியல் தற்கொலை செய்தவர்களாக சொல்லாமல் சொல்லியும் இந்த பண்டிக்கரியை சுவைக்கத் தொடங்கியதும் மட்டுமல்லாமல் அதன் சுவை பற்றி பேசவும் தொடங்கியுள்ளதுதான் வேதனையானது .

No comments:

Post a Comment