Jul 18, 2014

பாலஸ்தீன போராட்டம் சில உணர வேண்டிய உண்மைகள் .....


கசப்பாய் இருந்தாலும் உண்மையே பேச வேண்டும் . இதுதான் ஒரு முஸ்லிமின் அடிப்படை பண்பாகவும் மாற வேண்டும் . அந்த வகையில் பாலஸ்தீன் விவகாரம் மற்றும் அதன் இன்றைய நிகழ்வுகள் மரணத்தை விட எமது ஆன்மாக்களுக்கு வலிக்கின்றது . எம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் விருப்பமும் அந்த சாபத்தின் சந்ததியான பலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள யஹூதியை சல்லடையாக்க வேண்டும் என்பதே .அவன் சிதறடித்துள்ள எம் சகோதர உடல்களின் ஒவ்வொரு துண்டுகளுக்காக்வும் 'யகூதி ' பதில் சொல்லியே ஆக வேண்டும் . எமக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தால் ....... இந்த உணர்வு எமக்கு வரவில்லை என்றால் எமது ஈமானியத்தில் எங்கோ கோளாறுள்ளது என்பதுதான் அர்த்தம் .

ஆனால் இன்னொரு உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எமக்கிருக்கின்றது . அதுதான் பாலஸ்தீன போராட்டாத்தின் தொடக்கப்புள்ளியும் அதன் நகர்வுப் பாதையும் பற்றிய வரலாற்றுத் தெளிவாகும் . அதில் குறித்த சில போரட்ட இயக்கங்களை குறை கூறுவதோ அல்லது அவர்களின் தியாகங்களை குறைத்து மதிப்பிடுவதோ எனது நோக்கமல்ல . அது அண்ணார்ந்து பார்த்து துப்பி திருப்திப்படும் முட்டால் தனம் என்பதுதான் எனது கருத்து .

முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அது பாலஸ்தீன் மட்டுமல்ல முழு உலகமும் யகூதியத்தின் சிந்தனை தரத்தால் பாதிக்கப்பட்டே உள்ளது . பாதிக்கப்பட்ட அந்த சிந்தனைத்தரத்தின் மீதிருந்துதான் நாம் விடயங்களை அவதானிக்கிறோம் .

பாலஸ்தீனப் பிரச்சினையை நிர்ப்பந்தத்தின் மீது பிண்ணப் பட்டுள்ளது .அதாவது எமக்குள் இருக்கும் பிரிவினைகளின் ஆழ அகலங்கள் எம்மை விட எம் எதிரிகள் நன்றாக புரிந்தவை .எம்மை பிரித்து மேய்வதுதான் எதிரியின் ஒரே நோக்கமும் . எனவேதான் எதிரி அரபுலகத்தோடு நட்புறவை பேணும் ஒரு வடிவத்தை காட்டி சில வருடங்களுக்கு முன் பாலஸ்தீன் மீது பொருளாதார தடையை போட்டான் .

அதை மீறி எந்த ஒரு அரபு தேசமும் தனது அதிகார பலத்தையோ ,இராணுவ பலத்தையோ முன்னிறுத்தி பொருளாதார உதவிகளை செய்ய முன்வரவில்லை !! ஆனால் ஈரான் உதவி செய்தபோதோ அல்லது ஹமாஸ் ஈரானிடம் உதவி கேட்டு பெற்றுக்கொண்ட போது ... இவர்களும் 'ஷியாக்கள்' தான் என கூக்குரலிட மட்டும் பக்கா 'சலபிகள் ' தயங்கவில்லை . இந்த ஆவேசத்தின் மத்தியிலும் சிலுவை வீரர்களோடு தமது நிலங்களில் கூத்தடிப்பதிலும் பின் நிற்கவில்லை !!

அதாவது தமது சிலுவை நண்பர்களையும் மீறமுடியாது ! அதேநேரம் ஈரானிடம் உதவியும் பெறக்கூடாது !! (இந்த நியாயத்தில் ஒரு அநியாயம் புரியப்படாதிருந்தால் அது ஒரு இயக்க வெறியின் தெளிவான அடையாளம் ) இதுதான் எம் பிரிவினை மீது எதிரியின் தெளிவான நிர்ப்பந்த வடிவம் . 'ஷியாக்களை' புறந்தள்ளுவது என்பது எமது ஆக்கபூர்வமான உதவிகளை பொறுத்து அன்று இலகுவாக செய்யப்பட்டிருக்கலாம் . ஆனால் இங்கு எதிரியின் நிலைப்பாட்டின் படி 'ஹமாஸை ' ஷியா ஆக்குவது மட்டும்தான் 'சுன்னிகளுக்கு ' மத்தியில் பாலஸ்தீனப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதட்கும் அதன் மீதான முஸ்லீம் உம்மாவின் உயிரோட்டமான பார்வையை தடுப்பதற்கும் ஒரே வழியாக இருந்தது .

போராட்டமும் போராட்ட பாணியும் எதிரியிடம் ! களமும் போராளிகளும் மாத்திமே எம்மிடம் ! இங்கு எமது நடப்பையும், கருத்தையும் ,சமர்களையும் எதிரியே தீர்மானிக்கிறான் . எதரி எமது முஸ்லீம் நிலமான சூடான் வரை சாவகாசமாக வந்து விமானத்தாக்குதலை சர்வ சாதாரணமாக செய்வான் ! ஆனால் பலஸ்தீனுக்கு பகிரங்க உதவியாக இராணுவ 'பூட்ஸின் லேஸ் ' நாடா கூட செல்லமுடியாது ! இந்த அநியாயத்தை நியாயம் காண உங்களால் முடியுமா ?

No comments:

Post a Comment