Jul 16, 2014

ஹமாஸ் தலைவர்களின் வதிவிடங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீச்சு !! - சில தளபதிகள் மிஸ்ஸிங் ???


ஹமாஸ் - இஸ்ரேல் சண்டைகளில், இஸ்ரேல் ஹாமாஸின் முக்கிய அரசியல் இராணுவ தலைவர்களின் வீடுகளை இலக்கு வைத்து லேசர் கைடட் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது. 12 மணித்தியாலங்களினுள் 35 இற்கும் அதிகமான ஹமாஸ் தலைவர்களின் வீடுகள் என நம்பப்படுபவை நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. இதில் பலஸ்தீன காஸா பிரதமர் இஸ்மாயில் ஹனியூஃவின் உறவினர் வீடும் அடங்கும். இந்த வீட்டில் தனது பாதுகாப்பு கருதி அவர் அடிக்கடி வந்து தங்குவது வழமையான நடவடிக்கையாகும்.

ஹமாஸின் செய்தி தொடர்பாளர்கள் இது பற்றிய எந்த இழப்பு விபரங்களையும் வெளிவிடவில்லை. மேற்குக்கரையில் செயற்படும் அல்-பதாஃ அமைப்பினர் ஹமாஸின் சில தளபதிகள் மரணித்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அவர்களின் மரணத்திற்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை ஹமாஸின் தலைமைக்கு தெரிவித்துள்ளனர். ஹமாஸ் சார்பு ஊடகங்களும் இஸ்ரேலிய தாக்குதலை மறுக்கவில்லை. அதே வேளை அல்-மனார் ஹிஸ்புல்லாஹ்வின் தொலைக்காட்சி சேவையில் ஹமாஸ் தனது சில முக்கிய தாக்குதல் தளபதிகளை இழந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

B.B.C. நேற்று வெளியிட்ட செய்தியில் நேற்றைய தினம் இஸ்ரேல் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் ஹமாஸின் 05 உயர் கொமாண்டர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெயியிட்டிருந்தது. இஸ்ரேலிய இராணுவ இணையத்தில் வெளிவந்த செய்தி என அது தெரிவித்திருந்தது.

காஸாவில் இருந்து இது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே வேளை ஹமாஸ் தனது தாக்குதலை நிறுத்தியிருந்ததுடன் தனது போராளிகளின் 03 அணிகளை ரபாஃ எல்லையை நோக்கி நகர்த்தியுள்ளது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. அவை எதற்காக அங்கு செல்ல வேண்டும் என்ற கேள்விக்கான சில அவதானங்களை எமது அடுத்த பதிவில் தருகிறோம்.

No comments:

Post a Comment