by:Abu Asjath
காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களும், அதன் பதிலடியாக ஹமாஸ் இஸ்ரேலிய நகரங்கள் மீது நிகழ்த்திய தாக்குதல்களும் 08 நாட்களாக நிகழ்ந்த போது எகிப்திய அரசு ஓர் உத்தேச சமாதான தீர்வுத் திட்டத்தை முன்வைத்ததன் ஊடாக சண்டை நிறுத் ஒப்பந்தத்தை முதலில் அமுல் செய்யக்கோரியது. இது உண்மையில் அமெரிக்க செயளர் கெரியின் ஆலோசனைகளிற்கு அமைய வரையப்பட்ட சமாதானத்திட்டமாகும். இந்த திட்டத்தை இஸ்ரேலே் ஆராயத்தயார் என்றும் அறிவித்த அதே வேளை ஹமாஸ் அதனை முற்றாக மறுத்ததுடன் அது முழு காஸாவின் போராட்டத்தையும் யூத அமெரிக்க நலன்களிற்கு தாரை வார்க்கும் செயல் என அறிவித்திருந்தது.
எகிப்திய திட்டவரைவில் உண்மையில் ஹமாஸை இல்லாதொழிக்கும் மிகப்பெரிய பொறி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ரஃபாவின் எல்லைக்கடவையில் மஹ்மூத் அப்பாஸின் பலஸ்தீன அதிகார சபையின் (PA) பாதுகாப்பு படைகளை நிலை நிறுத்துவதுடன் Philadelphi Corridor வரை இந்த படையினர் செயற்பட வழிவகுப்பதாக அமைந்துள்ளது. என்பது காவிற்கும் ரஃபாவிற்கும் இடையிலான 14 கிலோ மீட்டர் எல்லைகளைக்கொண்ட நீளமான பகுதியாகும்.
2007-ல் காஸாவில் திடீரென ஹமாஸ் ஒரு இராணுவ அதிகாரத்தை ஏற்படுத்தி மஹ்மூத் அப்பாஸின் அதிகாரத்தை இல்லாமல் செய்தது. அப்போது அங்கு நிலைகொண்டிருந்த பலஸ்தீன அத்தோரிட்டியின் பாதுகாப்பு படையினர் இப்போதும் பொதுவாழ்வில் காஸாவில் இருக்கின்றனர். அவர்களைக்கொண்ட படையணியை மீண்டும் உருவாக்கி இதனை செயற்படுத்துவதே எகிப்திய திட்டம்.
இதில் எகிப்து, பலஸ்தீன அதிகாரசபை, இஸ்ரேல் போன்ற எல்லோரிற்குமே இலாம் இருக்கிறது. பலஸ்தீன அதிகாரசபை மீண்டும் காஸாவில் தனது அதிகாரத்தை ஏற்படுத்தும் ஒரு சாவியாகவே இதனை உருவாக்க முயல்கிறது. அதே வேளை எகிப்திய அதிபர் ஜெனரல் Abdel-Fattah el-Sissi தனது இஹ்வானிய வேட்டையில் ரபாஃவின் ஊடாக தப்பி காஸாவில் நிலைகொண்டிருக்கும் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களை தனது உளவமைப்பான General Intelligence Service (GIS) (Gihaz al-Mukhabarat al-Amma) ஊடாக சமகாலத்தில் வேட்டையாட முயல்கிறார். தனது எல்லையில் ஹமாஸ் போன்ற இஹ்ஃவானிய சார்பு அமைப்பு இயங்குவதை அவர் விரும்பவில்லை. மாறாக மஃமூத் அப்பாஸின் அதிகாரத்தை அங்கு கொண்டுவர அவர் விரும்புகிறார்.
கடந்த 12-ம் திகதி ரஃபாவின் எல்லைகளை மனிதாபிமான உதவியின் பெயரில் திறந்து மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய உதவியது எகிப்திய அரசு. அது அதை மட்டும் செய்யவில்லை. தனது அம்புயுலன்ஸ் வண்டிகள் பலவற்றை காஸாவிற்கு அனுப்பி காயப்பட்ட பலஸ்தீனர்களை எகிப்திற்குள் கொண்டு வந்தது. பல மெடிக்கள் எமேர்ஜன்ஸி குழுக்களையும் காஸாவிற்குள் 03 நாட்கள் தங்கியிருந்து உதவிகள் செய்ய அனுப்பியது எகிப்து. அதே வேளை அவர்களுல் பல General Intelligence Service (GIS) (Gihaz al-Mukhabarat al-Amma)-வின் உளவாளிகளும் மெடிக்கல் எய்ட் வேர்க்கர்ஸ் என்ற பெயரில் சென்றிருந்தனர். அவர்கள் திரும்பி வருகையில் பல பலஸ்தீன அதிகார சபையின் முன்னாள் இராணுவ அதிகாரிகளையும் தம்முடன் அழைத்து வந்திருந்தனர்.
இஸ்ரேலுடனான சண்டைகளில் கவனம் செலுத்தி வந்த ஹமாஸ் உதவிக்கு வந்த எகிப்திய மெடிக்கல் குழுவினரை நண்பர்களாகவே பார்த்தது. அவர்களை பின்தொடர்ந்து ஆராயவில்லை. ஆனால் நிலைமைகளின் விபரீதங்கள் அவர்களிற்கு புரிய ஆரம்பித்து போது எகிப்திய மெடிக்கல் டீம் மீண்டும் ரஃபாவிற்குள் சென்று விட்டது. அத்துடன் எகிப்திய அரசும் தனது எல்லைக்கதவுகளை மூடி விட்டது. இவர்கள் சென்றவுடன் ஹமாஸ் போராளிகள் குழுமும் இடங்களும், ஹமாஸின் தளபதிகளின் வீடுகளும் இஸ்ரேலினால் துல்லியமாக குறிவைத்து தாக்கப்பட்டன. அப்போது தான் ஹமாஸிற்கு முழுதும் புரிந்து போனது. ஜெனரல் சீசி என்ன செய்துள்ளார் என்பது. மஃமூத் அப்பாஸும் என்ன செய்துள்ளார் என்பது.
இதனால் தான் காஸாவின் அத்தனை இழப்புகளிற்கு மத்தியிலும் ஹமாஸ் அந்த சமாதான ஒப்பந்தத்தை புறக்கணித்தது. காஸா மீதான முஸ்லிம் தலைவர்களின் கொடும் துரோகங்கள் இவை. அவர்களிற்கு காஸாவின் முஸ்லிம்களின் அழிவல்ல கவலை. அல்லது முக்கியம். அவர்களிற்கு ஹமாஸின் அழிவே குறியாக இருக்கிறது.
இதனால் இஸ்ரேலிற்கு என்ன இலாபம்?. இஸ்ரேலிய நகர்கள் மீது வந்து விழும் ஹமாஸின் ரொக்கெட்களை நிறுத்துவது. பின்னர் இந்த படையினரின் உதவியுடன் ஹமாஸின் செயற்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வருவது. மீண்டும் ஹமாஸின் மீது தாக்குதல்களை ஆரம்பிப்பது. இஸ்ரேலிய நகர் மீது வந்து விழும் ரொக்கெட்களினால் குடியேற்றவாசிகள் பலர் மீண்டும் இஸ்ரேலை துறந்து செல்வதற்கான எண்ணங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். இதனை இஸ்ரேல் விரும்பவில்லை. அதனை தற்காலிகமாக தடுக்கும் முயற்ச்சியில் அது இறங்கியுள்ளது.
யூத இஸ்ரேலில் ஸியோனிஸ்ட்களை தவிர்த்துப் பார்த்தால் யூத தேசத்தில் வாழ வேண்டும் என வந்தவர்கள் ஒரு வகையினர். இவர்கள் டெல்-அவீவ், கைபா என பல இடங்களில் வாழ்கிறார்கள். கிழக்கைரோப்பாவிலும், பழைய சோவியத் தேசங்களிலும், லத்தீன் அமெரிக்காவிலும் வறுமையின் எல்லைகளில் உழன்ற பிச்சைக்கார பரதேசிகளை மொஸாட்டின் ஏஜென்ட்கள் பல கனவுகளை காட்டி இஸ்ரேலிற்குள் கொண்டு வந்து சேர்த்த வந்தேறு குடிகளான சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் இன்னொரு வகையினர். இவர்கள் தினமும் இலவசமாக கிடைக்கும் ஒரு அமெரிக்க பிஸ்ஸாவிற்கு ஆசைப்பட்டு இஸ்ரேலின் வரை வந்தவர்கள். இவர்களையே இஸ்ரேல் எல்லையோரங்களில் கொண்டு வந்து குடியேற்றி வருகிறது. இவர்கள் டெல்-அவிவில் காணி வாங்கவோ கட்டடம் கட்டவோ முடியாது. இத்தனைக்குள்ளம் தூய யூதர்கள், கலப்பு யூதர்கள், கறுப்பின யூதர்கள் என வர்க்கப்பிரிவுகள் உள்ளன. கஸ்ஸாம்மின் ரொக்கெட்களை கண்டு அஞ்சி இவர்கள் வெளியேறக்கூடாது என்பதே ஸியோனிஸ அரசின் அச்சமாகும்.

No comments:
Post a Comment