Jul 5, 2014

இஸ்லாம் கூறும் ஆட்சிமுறை என்பது மிகத்தெளிவானது!


இஸ்லாம் கூறும் ஆட்சிமுறை என்பது மிகத்தெளிவானது. அது 1300 ஆண்டுகாலம் உலகில் முன்றில் இரண்டுபகுதியை ஆட்சி செய்து இஸ்லாத்தை வாழ்வின் அனைத்துதுறைகளிலும் அமுல்படுத்தியதுடன் சிறுபான்மையாக வாழ்ந்த முஸ்லிம்களுக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்த கிலாபா ஆட்சிமுறைதான் இஸ்லாம் கூறும் ஆட்சிமுறை! 

அது உருவாகும் முறைபற்றிய மிகத் தெளிவான ஹதீஸ்: நபிகளாரின் நுபுவத்துடைய ஆட்சி...குலபாஉர் ராசிதீன்களது ஆட்சி ... நீண்ட கால ஆட்சி ... சர்வாதிகாரிகளது ஆட்சி ..அதன் பின் மீண்டும் நபித்துவ வழியிலான கிலாபா ஆட்சி!

இன்று இந்த ஆட்சிமுறையை ஏற்படுத்துவதற்கு பல வழிமுறைகள் கையாளப்படுகிறது. அதில் ஒன்று காலனித்துவ வாதிகளால்துன்டாடப்பட்ட தேசங்களை அடித்துப்பிடிக்கும் ஜிஹாதிய வழிமுறையிலானது.

அடுத்த வழிமுறை - இன்று துண்டாடப்பட்டுள்ள முஸ்லிம் நாடுகளது தலைமைகள் இஸ்லாமிய வாதிகளால் மாற்றீடு செய்யப்பட்டு அதன் மூலம் கிலாபாவை கொண்டுவருவது. இங்கு இவர்களது வழிமுறையில் ஆட்சியாளர்கள் மாற்றீடு செய்யப்படுகிறார்களே தவிர ஆளப்படும் முறை - மேற்கினது பாராளுமன்ற ஜனனாயக வழிமுறை! இது மேற்கினது ஒரு கருவி!

மூன்றாவது வழிமுறையானது... இஸ்லாமிய நாடுகளது இராணுவம் ஏற்கனவே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்கு தத்தமது தேசத்திற்குள் செயற்படுகிறது. அந்த இராணுவ தலைவர்களது ஒத்துளைப்பை (நுஸ்றாவை) பெற்று தேசத்திற்கு வெளியே இராணுவம் இணைக்கப்பட்ட அடிப்படையில் தேசத்தின் எல்லைகள் களையப்படும். இங்கு மேற்கினது ஜனனாயக வழியிலான தேர்தல் இல்லை. கலீபா நபிவழியல் நியமிக்கப்படுவார்- பின்னர் அவர் ஏனைய நாடுகளது நுஸ்றாவை கோருவார்.

அவ்வாறு நிறுவப்பட்டால் அவ்வரசு....
1.இன்றுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான தேசிய எல்லைகளை களையச் செய்யும்.
2.முஸ்லிம்களை உம்மத் எனும் சகோதரச் சிந்தனையால் இணைக்கும்.
3.பொது எதிரியை எதிர்கொள்ளும். தீனுல் இஸ்லாத்தை முழுமையான தனது அரசின் எல்லைக்குள் அமுல்படுத்தும்.
4.வெளிநாட்டு கொள்கை மூலமும் ஜிஹாத் மூலம் அவ்வரசு தீனுல் இஸ்லாத்தை உலகமுழுவதிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.

அதன் ஆட்சியாளர் என்பவர் ஆட்சி புரிதல், ஆட்சி அதிகாரத்தின் பொறுப்புக்களை நிறைவேற்றுதல் மற்றும் அஹ்காமுஸ் ஷரீஆவை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் உம்மாவின் சார்பில் அதன் பிரதிநிதியாக செயலாற்றுவார்.

இந்த இஸ்லாமிய ஆட்சியில் 4 விதிமுறைகள் இருக்கும்.
1.இறையாண்மை ஷரீஆவிற்குரியது. அது உம்மாவிற்குரியதல்ல.
2.ஆட்சி அதிகாரம் உம்மாவிற்குரியது.
3.கலீபாவை நியமனம் செய்யவேண்டியது அனைத்து முஸ்லிம்களின் மீது வாஜிபாகும்
4.இறைசட்டங்களை ஏற்று அமுல்படுத்துவது கலீபாவிற்குரிய தனிப்பட்ட அதிகாரம்.

அதே நேரம் இஸ்லாமிய அரசில் 8 ஆட்சியமைப்பு அம்சங்கள் காணப்படும்.
1.கலீபா
2.ஆட்சித்துறை உதவியாளர்
3.நிர்வாகத்துறை உதவியாளர்
4.அமீருல் ஜிஹாத்
5.மாகாண ஆளுநர்கள்
6.நீதித்துறை
7.அரசத்துறைகள்
8.மக்கள் ஆலோசனை மன்றம் (மஜ்லிசுல் உம்மா)

இவ்வாறு நபிவழியில் நிறுவப்படும் ஒரே இஸ்லாமிய தலைமையின் மூலமே முஸ்லிம் உம்மத்தின் கண்ணியம் காக்கப்படும்! இஸ்லாம் சகல துறைகளிலும் முழுமையாக அமுலாக்கப்படும். குர்ஆன சுன்னா முற்று முழுக்க பின்பற்றப்படும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.” (அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

முஸ்லிம்கள் மீது காஃபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:

முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறைநிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான். (அந்நிஸா:141)

விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதகாவலர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
(ஆல இம்ரான்: 28)

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள் இன்னும் (அல்லாஹ்வின்)தூதருக்கும் உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் இதுதான்(உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்”(அல்குர்ஆன் 4:59)

இஸ்லாத்தை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் பெற்ற ஒரு ஆட்சியாளர் ஆட்சி செய்யத் தவறும் குறித்து அவரைப்பார்த்து குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்) படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பவர்களாவார்கள்” (அல்குர்ஆன் 5:44)

“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் தான் அநியாயக்காரர்களாவார்கள்” (அல்குர்ஆன் 5:45)

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்
(அல்குர்ஆன் 5:47)

No comments:

Post a Comment