காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் தரைத் தாக்குதல்களை எந்த நிமிடமும் தொடங்கலாம் என தெரிகிறது. இதையடுத்து வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புகள் மேல் இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் பறந்து சென்று துண்டுப்பிரசுரங்களை வீசுகின்றன.
இந்தப் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் தரைத் தாக்குதல்களை நடத்தவுள்ளதால், பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அந்த துண்டுப்பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக இஸ்ரேல்மீது நடத்தப்படும் ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில், 40 சதவீத ஏவுகணைகள் இந்த வடக்கு காசா பகுதியில் இருந்தே வருகின்றன என்கிறது, இஸ்ரேலிய ராணுவம். இதனால், அந்தப் பகுதிமீதுதான் இஸ்ரேலின் தரைத் தாக்குதல் இருக்கப்போகிறது.
அதேநேரத்தில், இங்கு ஏராளமான பொதுமக்களும் வசிக்கின்றனர்.
வடக்கு காசா பகுதியில் தரைத் தாக்குதல் நடத்தப்பட்டால், ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் இறக்க நேரிடலாம். அது இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் மகா கெட்டபெயரை ஏற்படுத்திவிடும் என்பதாலேயே இஸ்ரேலிய விமானங்கள் வானில் பறந்து துண்டுப்பிரசுரங்களை வீசி, மக்களை வெளியேற்ற பார்க்கின்றன.
ஆனால், வடக்கு காசாவில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என ஹமாஸ் இயக்கத்தினர் தடுத்து வருகின்றனர்.
காரணம், மக்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டால், இஸ்ரேலிய ராணுவம் அந்த பகுதியையே துடைத்து எடுத்துவிடும். மக்கள் இருந்தால்தான் ஹமாஸ் இயக்கத்துக்கு பாதுகாப்பு அரண்!
Source:viruvirupu
No comments:
Post a Comment