Jul 14, 2014

ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட கொமாண்டர் காலித் இப்னு வலீத் (ரலி ) - சிறப்பு பதிவு (மீள்பதிப்பு)


by:Abu Sayyaf

காலித் இப்னு வலீத்(ரலி.). இஸ்லாமிய வரலாற்றின் வெற்றிமிகு தளபதி. போர் ஆசான். நெருங்கமுடியாத உறுதிமிக்க தளங்களை கைப்பற்றியவர். தம்மிலும் பார்க்க மிகப்பெரிய பலம்வாய்ந்த சைனியங்களை எதிர்கொண்டு களங்களில் வெற்றிவாகை சூடியவர். எதிரி படைகளின் பலவீனமான முனைகளை இனங்கண்டு அதனுள் ஊடுருவும் வியூகங்களை வகுப்பதில் வல்லவர் இவர். தனது படையினரை அல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்யும் மனோநிலையை வலுப்படுத்தி அவர்களது தீரமிகு தாக்குதல்களின் ஊடாக எதிரியை நிலைகுலைய வைத்து வெற்றிகளை வளைத்து போடுபவர்.

யர்மூக் யுத்தமும் அதில் அவர் காட்டிய தலைமைத்துவமும் இதற்கு சிறந்த சான்றாகும். ரோமானிய படைகளின் கட்டளைத்தளபதிகளில் ஒருவர் ஜர்ஜாஹ். காலித் இப்னு வலீத்தின் போர் ஆற்றலை வியந்து அவரது முகாமில் அவரை சந்தித்து வெற்றியின் ரகசியம் என்னவென்று கேட்டார். அதற்கு அவர் தனது திறமைகளை பற்றியோ யுத்தவியல் புலமைகளை பற்றியோ பதிலளிக்கவில்லை. மாறாக “நாங்கள் ஓரிறை கொள்கையை நம்புபவர்கள். அதற்காக உழைப்பவர்கள். அதனால் அந்த இறைவன் “அல்லாஹ்” எமக்கு உதவுகிறான்” என்று ஆணித்தரமாகவும், உறுதியாகவும் விடையிறுத்தார்கள். இந்த பதில் ரோமானிய படைத்தலைவரை பிரமிக்க வைத்தது.

அவர் கேட்டார் “உங்கள் கொள்கையில் இணைந்தால் நானும் வெற்றியாளனாகி விடுவேனா?” என்று. மீண்டும் காலித் சொன்னார், “ஆம். நிச்சயமாக. என்னிலும் பன்மடங்கு அதிகமான வெற்றிகளை பெறுவீர்கள். என்னை விட சிறந்த தளபதியாக உங்களால் சண்டையிடவும் முடியும்”. இந்த பதில் ரோமானிய கிறிஸ்தவ தளபதியை அதிர வைத்தது. குளறி அழுதார். அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர் முஸ்லிம் தளபதியாக மாறி நின்றார். இதுதான் காலித் இப்னு வலீத். இது தான் இஸ்லாமிய வரலாறு.

ஒரு மிகப்பெரும் வீரர், தன்னிகரில்லா தளபதி, அல்லாஹ்வின் வாள் எனும் சைபுல்லாஹ் பட்டத்தை நபியவர்களின் திருவாயினால் பெற்றவர், ஜிஹாத் வேறு அவர் வேறு என்று பிரித்து பார்க்க முடியாத முஜாஹித். ஆனால் அவரிற்கு கூட ஷுஹதாவாக மரணிக்கும் களத்தின் வீர மரணம் கிட்டவில்லை. ஒரு கட்டிலில் அல்லாஹ்வின் பாதையில் நான் வெட்டப்படவில்லையே என்ற விம்மிய நெஞ்சுடன் குமுறி அழுதபடி தான் மரணித்தார்.


இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அடோல்ப் ஹிட்டலரின் முதல் நிலை தளபதிகளில் ஒருவர் Erwin Johannes Eugen Rommel. பாலைவன நரி என வரலாற்றில் புகழ் பெற்றவர். ஜேர்மனிய படைகளின் பீல்ட் மார்ஷல் எனும் உயர் பதவியை வகித்தவர். ஜேர்மனில் இவரை “இரண்டாம் ஹிட்லர்” என அழைப்பார்கள் அவரின் கைகளில் குவிந்த அதிகாரங்களின் காரணமாக. நாஸிகளின் வெற்றிகளிற்கு மிக முக்கியாக விளங்கிய சண்டைகளை வழி நடாத்தியவர். வட ஆபிரிக்க வெற்றிகளின் சொந்தக்காரர். ஜேர்மனிய இராணுவமும் அடோல்ப் ஹிட்லரும் சடுதியாக உயர்வதற்கு உழைத்த முக்கியமான ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஹிட்லர் யுத்தங்களை ஆரம்பித் போது, அவரை ஹெய்ல் ஹிட்லர் என அனைவரும் துதித்த போது, அவரை பெயர் சொல்லி அழைக்கும் துணிவு பெற்ற தளபதி ரோமல்.

ஹிட்லர் ஒரு முறை பெர்லினின் மக்கள் சதுக்கத்தில் பேசும் போது கூறினார், “எமது வெற்றிகளிற்கு காரணம் நமது வொக்ஸ் கவச வாகனங்களா? அல்லது எமது மெஸ்ஸர் சண்டை விமானங்களா? அல்லது ஜெனரல் ரோமலா? என்பதில் நான் அடிக்கடி குழம்பி விடுகிறேன். இறுதியில் அது ரோமலால் தான் என்ற முடிவுடன் தூங்கச் செல்கிறேன்” என்று.

கைப்பற்றிய இடங்களில் ஜெர்மனிய படைகள் பல அநியாயங்களை செய்தன. போலந்து முதல் பிரான்ஸ் வரை இது நிகழ்ந்தது. ஆனால் ரோமல் அதனை செய்யவில்லை. எதிரி தேச பெண்களை தனது படையினர் கற்பழிப்பதற்கு அனுமதிக்கவில்லை. சிறுவர்களையும் வயோதிபர்களையும், மத துறவிகளையும் கொலை செய்ய வேண்டான் என கண்டிப்பான கட்டளையிட்டார். பயிர் நிலங்களை தீயிடுவதை தடுத்தார். சரணடைந்த கைதிகளுடன் நியாயமாக நடந்து கொண்டார். கைது செய்யப்பட்ட எதிரி நாட்டு படைத் தளபதிகளை சித்திரவதை செய்து கொல்லாமல் தனது டின்னரில் அவர்களையும் அழைத்து, தன்னுடன் எதிர்த்து நின்ற அவர்களது வீரத்தை கண்ணியப்படுத்தினார்.

இவரது இந்த நடவடிக்கை ஜேர்மனிய சீக்கிரட் சேர்விஸ் எனும் ஹிட்லரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் புலனாய்வு பிரிவினரால் திரிவுபடுத்தப்பட்டு ஹிட்லிரிற்கு தெரியப்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஜேர்மனிய வெற்றிகளின் பின்னால் அடோல்ப் ஹிட்லறின் உரைகளும், ரோமலின் வெற்றிகளுமே இருப்பதாக மக்கள் பேசுவதையும் கேள்விப்பட்ட ஹிட்லரிற்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை. ரோமலை பீல்ட் மார்ஷல் தரத்திற்கு கீழான பதவிக்கு நியமனம் செய்தார். பிரான்ஸின் பாதுகாப்பு தளபதியாக அனுப்பினார். பின்னர் மீண்டும் ஜேர்மனிக்கு அழைத்து கொண்டார்.

சண்டைகளின் போக்கு மாறியமையும், நேசப்படைகளின் தாக்குதல்கள் வேகம் பெற்றமையும் ஜேர்மனிய இராணுவ தளபதிகளிடையே முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கியது. சண்டை வியூகங்களில் ஹிட்லரிற்காக மரணிக்க வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கி சிப்பாய்களின் வீரத்தை உயர்நிலையில் பேணி வெற்றிகளை கண்டவர் ஜெனரல் ரோமல். ஆனால் அவர் இறுதியில் ஹிட்லரின் இராணுவ வியூகங்களை விமர்சனம் செய்தார். கொளரவத்திற்காகவும், புகழிற்காகவும் எதிரியின் பலம் பொருந்திய முனைகளை தேர்வு செய்து சண்டைகளை ஆரம்பிப்பது கூட்டு தற்கொலைக்கு சமானம் என்று ஹிட்லரிற்கு நேரடியாகவே கடிதமனுப்பினார் ரோமல்.

ஹிட்லரின் முரட்டுத்தனமான, முட்டாள்தனமான இறுதி நடவடிக்கைகளால் விரக்தியடைந்த இரு ஜெனரல்கள் மேலும் மூன்று கேர்ணல்களுடன் இணைந்து ஹிட்லரை கொலை செய்து விட்டு ஜேர்மனியை காப்பாற்றுவது பற்றி திட்டமிட்டனர். அதற்கு “ஒப்பரேஷன் வல்கரீன்” என்று பெயரிட்டு அடோல்ப் ஹிட்லரை ஒரு நேரக்குண்டு வெடிப்பின் மூலம் கொலை செய்ய திட்டமிட்டு அதில் தோல்வியை தழுவினர். இந்த தாக்குதல் நடவடிக்கையை பற்றியும், ஹிட்லர் இல்லாத ஜேர்மனிக்கு ஜெனரல் ரோமல் தலைமையேற்க வேண்டும் என்றும் வேண்டினர். அவர்கள் ஜெனரல் ரோமலிற்கும் தங்கள் எண்ணங்களை அறியப்படுத்தினர். ரோமால் அதனை வெகுவாக எதிர்த்தார். “ஒரு சாதாரண ஜேர்மனிய வீரனாக எல்லையில் சாவது, ஜேர்மனிய அரசை சதி செய்து கவிழ்த்து அதன் தலைவனாவதை விட எவ்வளவோ மேல்” என திட்டத்தை சாடினார்.

கொலையாளிகள், திட்டமிட்டவர்கள் எல்லோரும் இனங்காணப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை ஹிட்ல் நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஜெனரல் ரோமலிற்கு ஒரு தகவல் ஹிட்லரினால் அனுப்பப்பட்டது. அதனை ஹிட்லரின் நெருங்கிய சகாக்களான இரண்டு ஜெனரல்கள் அதனை ரோமலிடம் கொண்டு சென்றனர். வில்ஹம் பேர்க்டோம், ஏர்னஸ் மய்சல் என்பவர்களே அந்த ஜெனரல்கள். “ஹிட்லரை படுகொலை செய்து ஜேர்மனியை எதிரிகளிடம் தாரை வார்க்கும் துரோக கும்பலில் நீங்களும் ஒருவர் என மக்கள் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுவது உங்கள் தேர்வா? அல்லது நீங்களே உங்களை தலையில் சுட்டு மரணிப்பதன் ஊடாக கௌரவமான ஜேர்மனிய ஜெனரலாக நல்லடக்கம் செய்யப்படுவது உங்கள் தேர்வா?. 30 நிமிடங்களில் இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும்.” இது தான் ஹிட்லர் அனுப்பிய கடிதத்தின் வாசகங்கள்.

ஜெனரல் ரோமல் தற்கொலையை தேர்ந்து கொண்டார். 1944-ல் ஒரு பிஸ்டலில் இருந்து புறப்பட்ட தோட்டா மூலம் உலகை வெற்றி கொண்ட தளபதி தனது ஓபல் காரினுள் வைத்து தன் கதையை முடித்துக்கொண்டார். ஹிட்லரிற்காக கோயபல்ஸ் ஒரு அறிக்கை தயாரித்து இருந்தான். அதில் “ஜெனரல் ரோமல் தனது உடலில் ஏற்பட்ட ரணங்களின் காரணமாகவும், நோர்மண்டி தோல்வியின் காரணமாகவும் தனது உயிரை தானாகவே மாய்த்து கொண்டதாகவும், இது ஜேர்மனிய இராணுவத்திற்கும், ஜேர்மனிய மக்களிற்கும், தலைவர் அடோல்ப் ஹிட்லரிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் வீரனாக வாழ்ந்து வீரனாக மரணித்தார்.” என்று குறிப்பிட்டிருந்தான். ஜேர்மனிய வானொலி தேசிய துக்கதினத்தை பிரகடனம் செய்து, ஸ்வஸ்திகா கொடியை அவர் பேழையின் மேல் போர்த்தி பூரண அரச, இராணுவ மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்தது.


ஜெனரல் ரோமல் தனது இராணுவ வாழ்வியல் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதன் பெயர் “பேப்பர்ஸ் ஒப் ரோமல்” என்பதாகும். அதில் அவர், அரேபிய தளபதி காலித் இப்னு வலீத்தை இராணுவ, மற்றும் தத்துவ ரீதியாக பின்பற்றியதாகவும், தனது வெற்றிகளின் பின்னால் தளபதி காலித்தின் உக்திகள் துணை நின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் ஒரு சுத்த இராணுவ வீரனாக தளபதி காலித்தை பார்க்கவில்லை என்றும், பண்பாடுகளும் மனிதாபிமானங்களும் நிறைந்த முழுமையான ஒரு மனித நேயம் கொண்ட ஒரு நபரை பார்த்ததாகவும், சண்டைகளில் மட்டுமன்றி போஸ்ட் ஒப் வோர் எனும் சண்டைகளிற்கு பின்னரான நாட்களிலும் கூட தான் தளபதி காலித்தை பின்பற்றியதாகவும் எழுதியுள்ளார்.

தளபதி காலித்தின் தந்திரங்களில் தன்னை கவர்ந்தவதை, எதிரியின் பலவீனமான முனைகளை தகர்ப்பதன் ஊடாக வெற்றியை வசமாக்குவதும், வீரர்களை தங்கள் உயிர்களை தத்தம் செய்து யுத்தம் செய்யும் மனோநிலையில் பேணுவதும் என்றும் அதனை தான் தலைமையேற்ற 37 சண்டைகளில் பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார். அதில் 33 சண்டைகளில் தான் பரிபூரண் வெற்றியை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்தவர் யார் என்று தான் தேடியதாகவும், ஆனால் யாரையும் தன்னால் கண்டு கொள்ள முடியமாமல் போனதாகவும், அவரை வழிநடாத்தியது இஸ்லாம் எனும் மதன் என்பதை தான் கண்டறிந்ததாகவும் குறித்துள்ள தளபதி ஜெனரல் ரோமல் சண்டைகளின் நெருக்கடிமிக்க காலங்கள் காரணமாக அந்த காலித்தை வழிநடாத்திய இஸ்லாத்தை கற்க முடியாமல் போனது தனது வாழ்வின் பேரிழப்பு என்றும் கூறியுள்ளார்.


நாம் இரண்டு தளபதிகளின் வரலாறுகளை மேலே பார்த்தோம். ஆனால் இன்று இஸ்லாமிய உம்மாவை வழி நடாத்தும் ஆட்சியாளர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்கா மீதும், மேற்கின் ஆயுதங்கள் மீதும் தவக்கல் வைக்கிறார்கள். தங்கள் அரசியல், இராணுவ செயற்பாடுகளை பேணும் விடயங்களில் குப்பார்கள் காட்டித்தந்த விதிமுறைகளை பேணுவதில் அதீத கரிசனம் காட்டுகிறார்கள். வெற்றியின் பாதையாக சடவாதத்தை விரும்பி தேர்ந்துள்ளார்கள். இது ஆட்சியாளர்களிற்கு மட்டுமல்ல. முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் கூட முஸ்லிம்கள் இஸ்லாத்திலும் இறைவனின் வார்த்தைகளிலும், நபியின் சுன்னாவிலும் நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

மார்க்க நம்பிக்கை என்பதும், மார்க்கத்தின் விதிகளின்படி ஒழுகுதல் என்பதும் வெறுமனே வாழ்வியல் செயற்பாடுகளில் மட்டும் தான் எஞ்சி நிற்கிறது முஸ்லிம்களிடத்தில். வணக்க வழிபாடுகள், திருமண தேர்வுகளும் பந்தங்களும், தொழில் ரீதியான செயற்பாடுகள், சொத்துக்களை பகிர்தல் போன்ற பல விடயங்களில் இஸ்லாத்தை இறுக அணைத்து அதன் படி நடக்கும் முஸ்லிம்களால், தங்களிற்கான அரசியல் பாதை, தங்களிற்கான பாதுகாப்பு என்ற விடயங்கள் தங்களை அணுகும் போது முற்றிலும் இஸ்லாத்தின் தீர்வுகளை புறக்கணித்து விட்டு குப்பாரிய வழிமுறைகளை, அவர்கள் காட்டித்தந்த செயல்முறைகளை நாடி ஓடுகிறார்கள். எதிரியிடம் மண்டியிட்டு வாழ்க்கை பிச்சை கேட்கிறார்கள். குப்பாரை திருப்தி படுத்துவதன் ஊடாக தங்கள் இருப்பை பேணும் அரசியல் சாணாக்கியம் மிக்கவர்களாக தங்களை முன்னிறுத்துகிறார்கள்.

முல்லாக்கள் முட்டி மோதுகிறார்கள். எதற்காக என்று பார்த்தால் ஒரு பிக்ஹ் மசாயிலாக அது நிச்சயமாக இருக்கும். இரண்டு வழுக்கை தலையர்கள் ஒரு சீப்பிற்காக சண்டையிடுவது போல. யர்மூக் சண்டைகளின் போது தளபதி அபூ உபைதா, தளபதி யசீத், தளபதி முஆவியா, தளபதி அம்ர் இப்னு ஆஸ் போன்ற பலர் இருந்தனர். இவர்கள் காலித் இன்னு வலீத்துடன் விவாதம் நடத்தவில்லை. பரஸ்பரம் பத்வா கொடுக்கவில்லை. முன்னாலும் பின்னாலும் பழித்தும் இழித்தும் பேசவில்லை. அந்த புரிதலை அவர்களிற்கு வழங்கியது புனித இஸ்லாம். 

ஆனால் இன்று நம் நிலை தான் என்ன? எமக்கான தலைமைத்துவம் இல்லாமையே இதற்கெல்லாம் அடிப்படை. அதனால் தான் நாம் சடவாதத்திடமும், ஜனநாயகத்திடமும், தாகூத்திடமும் முழந்தாளிட்டு அடைக்கலம் தேடுகின்றோம். எமக்கான கிலாபாவை நாம் தொலைத்து விட்டு குப்பாரின் கால்களின் இடையே அதனை தேடுகின்றோம்.


கிலாபா குப்பாரின் தொடைகளில் இல்லை. அது இஸ்லாத்தில் இருக்கிறது. மறைந்த இஸ்லாமிய உன்னதமான ஆன்மாக்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருக்கிறது. சற்று அவர்களது வாழ்க்கையை தேடிப்பாருங்கள். ஜெனரல் ரோமலைப் போல. அப்போது நீங்கள் வெற்றி பெறுவீர்கள். கோலியாத்தையல்ல, தாகூத்தை வீழ்த்திய தாவீத்களாக..

No comments:

Post a Comment