Flash News:-
****************************************************************************
1.192 ஷஹீத்களுடனும் 1400 காயப்பட்டவர்களுடனும் காஸா தன் போராட்டத்தை தொடர்கிறது.
2.அத்துமீறலை ஆரம்பித்த சியோனிஸ தேசம் இன்று தான் ஆரம்பித்த தாக்குதல் தரும் விளைவைத் தாங்க முடியாமல் தவிக்கிறது.
3.எகிப்தின் மூலம் இஸ்ரேல் தான் முகம் கொடுக்கும் பேராபத்தை தவிர்க்க முனைகிறது.
4.ஸீஸித் தரப்பு இந்த ஒன்பது நாள் மோதலை இஸ்ரேலுக்கு சார்பாக முடிவுக்கு கொண்டுவர நாடி ஒரு போர் நிறுத்த முனைப்பை முன்மொழிகிறது.
5.அது முர்ஸியின் ஆட்சியைக் கவிழ்த்து தனக்கு மகுடமேற்ற நெதன்யாஹு செய்த பேருதவிக்கான நன்றிக்கடனாக மட்டுமன்றி மொத்த அரபு சியோனிஸ்டுகளுக்கும் மூக்குடைத்த காஸா போராட்டத்தை காயடிக்கும் கைங்கரியமாக திட்டமிடுகின்றது
6.அந்த யுத்த நிறுத்த முனைப்பின் முக்கிய அம்சம் தற்போது
இக்கட்டில் இருக்கும் இஸ்ரேலை காப்பாற்றி அதிலிருந்து வெளியேற்ற அவசர மாக தாகுதல்களை நிறுத்துவதும் போராளிகளிடம் இருந்து ஆயுதங்களை களைவதும் ஆகும்.
7.இதை காஸா போராளிகள் போக அங்குள்ள சிறுபிள்ளைகளும் கூட ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ள நிலையில் போராட்டம் தொடரும் என போராளிகள் அறிவித்துள்ளனர்.
8.மறுபுறம், நாங்கள் உடன்படுகிறோம்..இன்று ஒன்பது மணிமுதல் எமது தாக்குதல்களை நிறுத்துகின்றோம் என படுவேகமாக அறிவித்த இஸ்ரேலிய தரப்பு போராளிகளின் மறுப்பறிக்கையினால் செய்வதறியாது தடுமாறுகிறது.
9.உண்மையில் இஸ்ரேல் தாக்க முன்பே ஹமாஸ் தரப்பு அவர்களை எச்சரித்திருந்தது... அது போல இப்பொழுது இஸ்ரேலுக்கு போர் நிறுத்தம் தேவையாயின் போராளிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
10நிபந்தனைகளில் முதன்மையானது காஸாவை விட்டும் முற்று முழுதாக முற்றுகையை நீக்க வேண்டும். வெறுமனே தாக்குதலை நிறுத்துவது என்பது ஏற்புடையதல்ல.
11.இந்த ஆப்பில் இருந்து நெதன்யாஹு எப்படி களன்று வர முடியும் என்பது தான் அடுத்த க்ளைமேக்ஸ்.
12. 4 இலட்சம் சியோனிஸ்டுகளின் மொபைல்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அச்சமூட்டியுள்ள போராளிகள் ஒவ்வொரு மணிநேரமும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பூமியில் (இஸ்ரேல்) கொடுக்கும் அதிர்ச்சிகள் நெதன்யாஹுவையும் அவர் அரசாங்கத்தையும் பதவி விலக கோரும் நிலைக்கு தள்ளியுள்ளது.
13.ஒரு சின்ன தாக்குதல், மரணம், காயத்தைக் கூட வெளிக்காட்டாமல் ஊடகத் தணிக்கையை மேற்கொண்ட சியோனிஸ தேசத்தினுள் இம்முறையும் நாம் தோற்றுவிட்டோம் என்ற குரல்கள் பலமாக கேட்க தொடங்கியுள்ளன.
14.இப்போது போராளிகளுக்குள்ள அடுத்த சவால்...சாட்சாத் ஸீஸியும் அவனது கொலைப்படையும் தான்.காரணம் கொடூரத்தில் இந்தக் கூட்டத்தை விட இஸ்ரேல் கனம் குறைவானது தான்.
Thanks &sourceShehab News Agency
Abusheik
https://www.facebook.com/abimuhammed?fref=ts
No comments:
Post a Comment