“பொருளாதார அடியாட்கள் (Economic Hit Man) என்று அழைக்கப்படுவார் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபாடு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். இந்த கொள்ளையடிக்கும் பணிக்காக அவர்களுக்கு பெரும்பணம் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பொருளாதார நிபுணர்கள். உலக வங்கி (World Bank), சர்வதேச வளர்ச்சிக்கான அமரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனம் (US Agency for international Development USAID), மற்றும் இவற்றைப் போன்ற பன்னாட்டு நிதி “உதவி” அமைப்புகளில் குவிந்திருக்கும் பணத்தை மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் பணப்பெட்டிகளுக்கும், இப்பூமியின் இயற்கை வளங்களைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் சில பணம் படைத்த குடும்பங்களின் சட்டைப் பைகளுக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் வேலை.

மோசடியான நிதி அறிக்கைகள், தேர்தல் முறைகேடுகள், லஞ்சம், மிரட்டிப்பணம் பறிப்பது, பாலியல், கொலை முதலியன இவர்களுடைய கருவிகள் ஆகும். பேராரசு எவ்வளவு பழமையானதோ அதேயளவுக்கு இவர்களது தந்திரங்களும் பழமையானவைதான். ஆனால் உலகமயமாக்கல் முழுவிச்சில் நடைபெற்றுவரும் இன்றைய உலகில் பொருளாதார அடியாட்களின் தந்திரங்கள் புதிய, பயங்கரமான பரிணாமங்களை எட்டியுள்ளன.

நானும் ஒரு பொருளாதார அடியாளாக இருந்தவன்தான்.

- ஜான் பெர்கின்ஸ் - 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்'

உங்களுக்கு உலகை வலம் வர விருப்பமிருந்தால், கரடு முரடான பயணங்களுக்கு நீங்கள் தயாராக இருந்தால், உலக நாடுகளின் இயக்கத்தை எக்ஸ்ரே' கண் கொண்டு காணத் துடித்தால், ஏகாதிபத்தியத்தின் புற முதுகைக் காண ஆவலிருந்தால் - இந்தக் கட்டுரை தொடருந்து வாசிங்கள்."நாட்டினை சீரமைப்பதற்கு கடன் கொடுக்கிறோம். அதன் மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்றினால் உங்கள் நாட்டின் பொருளாதாரம் இத்தனை சதவிகிதம் உயரும்.." என்று புள்ளிவிவரங்களின் மூலம் அதிகாரத்தில் இருப்பவர்களை சம்மதிக்கச் செய்வதே இந்த பொருளாதார அடியாட்களின் வேலை. அவ்வாறு சம்மதிக்காத அதிகாரிகளையும், அரசாங்கத்தையும் மற்றவர்களை கலகம் மற்றும் புரட்சி செய்ய தூண்டி விட்டு அந்த இடத்தில் தனக்கு சாதகமானவர்களை அமர்த்தி தான் நினைத்தை அமெரிக்கா அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ளும். இந்த பொருளாதார அடியாட்கள் தனியார் நிறுவனங்களுக்காகவே பணிபுரிவார்கள். ஆனால் அந்த தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறைமுக கூலிகள். ஒரு நாட்டியில் பொருளாதார அடியாட்கள் தோல்வியடைந்தால் சி.ஐ.ஏ ( C.I.A ) வால் இயக்கப்படும் இன்னொரு வகையான அடியாட்கள் “குள்ளநரி” களை கொண்டு அமெரிக்க செய்து முடிக்கும்.

ஈக்வடார், பனாமா, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், கொலம்பியா, வெனிசுலா என்று எண்ணெய் வள நாடுகளை கொள்ளை அடிக்க அமெரிக்கா செய்த குள்ளநரி வேலைகளைலும் அவர்களுக்கு ஒத்துழைக்காத பனாமாவின் ஜெனரல் டோரிஜோஸ், ஈக்வடாரின் பிரசிடெண்ட் ரோல்டோஸ் போன்றவர்கள் விமான விபத்தில் இறந்தார்கள். நிற்க. கொல்லபட்டார்கள். இது போன்ற வளைகுடா நாடுகளில் நடக்கும் போர்களும்,ஆட்சி மாற்றும்கலும் அமெரிக்காவின் எண்ணெய் அரசியல் பற்றிய புரியதலை ஏற்படுத்துகிறது.

நாசிக். S
DXB

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com