Oct 28, 2015

பாகிஸ்தான், ஆப்கன் நிலநடுக்க பலி 300 ஆக அதிகரிப்பு

சேதமடைந்த தங்களது வீட்டை சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: ஏஎப்பி.  

சேதமடைந்த தங்களது வீட்டை சுற்றிப் பார்க்கும் சிறுவர்கள். | படம்: ஏஎப்பி.
 
வடக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
 
இதனால் பாகிஸ்தானின் ஸ்வாட், பெஷாவர், கசூர், கல்லார் கஹார், பைஜார் பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது.
 
நிலநடுக்கத்துக்கு ஆப்கானிஸ்தானில் 90-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
இதேபோல பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் உள்ளிட்ட பல நகரங்களிலும் 237 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தரப்பில் பலி மற்றும் காயமடைந்தவர்களின் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
The Hindu

No comments:

Post a Comment