தெற்கு சீன கடற்பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல் நிறுத்தம்சர்ச்சைக்குரிய தீவு அருகே அமெரிக்க கடற்படை போர் கப்பல். | படம்: ராய்ட்டர்ஸ்.


தெற்கு சீன கடற்பகுதியில் உள்ள சீனாவின் செயற்கை தீவு அருகே அமெரிக்காவின் போர்க் கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதை பெய்ஜிங் மாகாணம் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கூறும்போது, "செவ்வாய்க்கிழமை காலை யு.எஸ்.எஸ் லாசன் போர் கப்பல் ஸ்பார்ட்லி தீவு அருகே 12 நாட்டிகல் மைல் தூரத்தில் ரோந்து சென்றது. அந்தப் பகுதி சீனாவுக்கு உட்பட்ட பகுதி அல்ல. அது சீனாவால் அறிவிக்கப்பட்ட செயற்கை தீவு தான். அதிபர் ஒபாமாவின் ஒப்புதலின் பேரில் இந்த ரோந்துப் பணி நடைபெற்றது" என்றார்.

இதனிடையே அமெரிக்காவின் பதிலை சீன தரப்பு கண்டித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அமெரிக்கா எதையும் செய்யும் முன் 2 முறை யோசிப்பது நல்லது." என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் சீனக் கடல் பகுதியில் புதிதாகப் பெரும் தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது. விமான தளம் அமைக்கும் விதத்தில் இந்த தீவு உருவாக்கப்படுகிறதாக அமெரிக்கா ஏற்கெனவே தகவல் வெளியிட்டது.

தென் சீன கடலில் இருக்கும் குறிப்பிட்ட தீவால் ஜப்பான் - சீனா இடையே மோதல் நிலவிவருவதால் சர்ச்சைக்குரிய தீவாக இது அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.The Hindu Tamil