Oct 19, 2015

தீரமான சிரியா எழுச்சியை அழிக்க பாலஸ்தீன பலிக்கடாக்களா!?

 
மார்க்க சித்தாந்த ரீதியான முக்கியத்துவம் மற்றும் நவ காலனித்துவ அவலம் என்ற வகையில் பாலஸ்தீன் மற்றும் சிரியா முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு இடங்கள். அதில் பாலஸ்தீன் நவ காலநிசம் எதிர்பார்த்த தேசிய ஜனநாயக சமரசத்தினுல் சுருண்டு விடத்தக்கது. ஆனால் சிரியா இஸ்லாமிய சித்தாந்த அரசியல் எழுச்சியின் மார்க்க மற்றும் உத்வேக தரத்தில் அந்த எதிரிகளால் கட்டுப்படுத்த முடியாதுள்ளது.
 
சிரிய விவகாரத்தை எதிரி தமக்கு சாதகமாக மாற்ற தனது அழிப்பு அரசியலை பகிரங்கமாக ஆரம்பித்து விட்டான். அதை தமக்கு சார்பான மீடியா ஜம்பவான்களை வைத்து அனுதாப அவலம் மிக்க வெற்று இராணுவக் கிளர்ச்சியாக காட்சிப்படுத்தியும் கூட சிரியா தொடர்பான மார்க்க முன்னறிவிப்புகள் முஸ்லீம் உம்மத்திடம் ஒரு கட்டுப்படுத்த முடியா ஆவலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யமான கிலாபா அரசு ஏற்படுவதை தடுக்க முடியாதென்ற சீ.ஐ.ஏ இனது அறிக்கை தெரிவிக்க சிரியக் எழுச்சியை தடுத்தல் அல்லது தாமதமாக்கள் என்ற திட்டமிடலின் கீழ் ஒரு பயங்கரவாத போராட்டமாக அதை உலக மயப் படுத்தியது.
 
அதன் இறுதிக் கட்டமாக கிரெம்லினின் முதலாளியான விலாடிமிர் புடினிடம் பொறுப்புகளை ஒப்படைத்த நவ காலநிச முதலாளித்துவ அணி முஸ்லீம் உம்மத்தின் பார்வையை திசை திருப்ப பாலஸ்தீன விவகாரத்தை நோக்கி திசை திருப்புவதன் மூலம் சிரியாவை ஒரு பலமான இராணுவ ஒடுக்குமுறை மூலம் தம்வசப்படுத்தப் பார்க்கின்றதாகவே தெரிகிறது.
 
கடந்த ஈராக் ஆக்கிரமிப்பின் போது அமெரிக்கா மெளசூல், பலூஜா போன்ற பகுதிகளில் போராளிகளை கட்டுப்படுத்த செறிவு குறைந்த யூரேனிய ஆயுதங்களை பயன்படுத்தியது ஒரு பகிரங்க இரகசியம்! அத்தகு ஏகாதிபத்திய உத்திகளைக் கூட ரஷ்யா சிரியாவில் பாவிப்பதற்கான சாத்தியப்பாடு இல்லை என மறுக்க முடியா அளவு மோசமான தாக்குதல்களை சிரியாவில் நிகழ்த்தி வருவது முஸ்லீம் உம்மாவின் பார்வையில் மறைக்கப்பட்டு வருகிறது! அனைத்து மீடியாக்களும் பாலஸ்தீனத்தை காட்சிப்படுத்தும் நாடக அரசியலை ஆரம்பித்துள்ளது.
 
எது எப்படியோ இருபக்கமும் அழிவும் சேதமும் பின்னடைவும் முஸ்லீம்களுக்கே! இது முஸ்லீம் உம்மத் தெளிவாகவும் உறுதியாகவும் சிந்திக்க வேண்டிய நேரம்! உங்கள் ஒரு கண்ணை குத்திக் கிழிக்க மறு கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதாக இருந்தால் என்ன முடிவெடுப்பீர்கள்!? இரண்டு கண்களையும் சமகாலத்தில் காக்க சிந்திப்பதே புத்திசாலித்தனம் என்பதை மறந்து விடாதீர்கள். எதிரியின் சூழ்ச்சி அரசியலில் சிக்கி ஒரு பக்க பார்வையோடு நகரும் மந்தைகள் போலாகி விடாதீர்கள்.

No comments:

Post a Comment